என் மலர்
“சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். என்றாலும் அடிக்கடி வந்தது இல்லை. ‘லிங்கா’ பட வெளியீட்டின்போது வந்தேன். அதன் பிறகு வர வாய்ப்பு கிடைக்கவில்லை.
‘லிங்கா’ படத்தில் நடித்த பிறகு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது இந்தி படங்களில் ‘பிசி’யாக இருந்ததால் தமிழில் நடிக்க முடியவில்லை.
சமீபகாலமாக தமிழ் படங்களை பார்த்து வருகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படமாக்குகிறார்கள். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். வழக்கமான கதையாக இல்லாமல் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும், வித்தியாசமான கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் நடித்த ‘லுத்ரா’ இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நடிக்க விரும்புகிறேன்.
தமிழில் ரஜினியுடனும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.”
பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற நிலையை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும், சுயமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் மனப்பான்மையுடன் பழக கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் மன தைரியத்துடன், உடல் தைரியத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். ஆண், பெண் என பாகுபாடு பார்க்காமல் ஒரே மாதிரியாக குழந்தைகளை வளர்க்க கற்றக் கொள்ள வேண்டும்.
பெண்கள் அதிக மரக்கன்றுகளை நட்டு சுகாதாரமான வாழ்வாதாரத்தை பேணி பாதுகாத்திட முன்வர வேண்டும். பெண்கள் வரலாறு படைக்க வேண்டும். வரலாறாக மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மிகச்சிறந்த சேவைகள் செய்த 213 பெண்களுக்கு கிராம உதயம் சார்பில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கப்பட்டது. மா, நெல்லி, அசோகம், சீதா, பலா, வேம்பு, கொய்யா, பாதாம், எலுமிச்சை, பாக்கு, மஞ்சள் கொன்றை, மகிலம், சப்போட்டா, மலேசியா தேக்கு, புங்கை உள்ளிட்ட 5000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. முடிவில் சுசீலா நன்றி கூறினார்.
“நான் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களை தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக்கிறது. வாழ்க்கையும் தெளிவாகி இருக்கிறது. பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இருக்கிறது. அவற்றை சாதகமாகவே எடுத்துக்கொள்கிறேன்.
படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடித்த கதாநாயகனை புகழ்ந்து பேசுவதையும் கதாநாயகியை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதையும் சகஜமாக பார்க்க முடிகிறது. அதுபற்றி நான் பொருட்படுத்துவது இல்லை. என்னுடையை கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததா? நான் நன்றாக நடித்து இருக்கிறேனா? என்றுதான் சிந்திக்கிறேன்.
இப்போது சினிமாவில் பெண்களும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்க தொடங்கி விட்டனர்.
என் தந்தையை விட்டு கவுதமி பிரிவதற்கு நீங்கள்தான் காரணமா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக நான் பேச விரும்பவில்லை. மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பற்றியும் பேசும் பழக்கம் இல்லை.
இதுபோன்ற எதிர்மறை கருத்துக்களில் இருந்து மீண்டு வருவதற்கு கற்றுக்கொண்டு இருக்கிறேன். பாராட்டுகளை எதிர்பார்த்தால்தான் பிரச்சினை. விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் சிக்கலே இல்லை. நான் இப்போதெல்லாம் என் தந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். வளர வளரத்தான் குழந்தைகளுக்கு தாய்-தந்தையரின் மதிப்பு தெரிகிறது.
எனது திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதற்கான நேரம் வரும்போது நடக்கும். திருமணமானதும் நடிகைகள் பலர் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். செய்யும் தொழிலுக்கு திருமணம் தடையாக இருக்க கூடாது என்பது எனது கருத்து. கணவர், மாமனார், மாமியார் விரும்பவில்லை என்பதற்காக நடிப்பை தியாகம் செய்யக்கூடாது.
எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். மனைவியானாலும் தாய் ஆனாலும் சினிமாவை விட்டு விலகமாட்டேன் என்று நினைக்கிறேன். பெண்களை உடல் ரீதியாக பலம் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலமான பெண்களை நினைத்து பார்க்க வேண்டும். உடல் ரீதியான பலத்தை விட பெண்களிடம் இருக்கும் மானசீகமான பலமே சிறந்தது. பெண்களுக்கு ஆண்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்
விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ்,ஆர்.கே.விஜய்முருகன், கதிர், சவுந்தர்ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
“உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பின்புலத்தில் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. ஆக்ஷனுக்கும்,காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக ‘சத்ரியன்’ தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இசை-யுவன்சங்கர் ராஜா,ஒளிப்பதிவு-சிவக்குமார் விஜயன்,கலை-ஆர்.கே.விஜய் முருகன், படத்தொகுப்பு-வெங்கட்ராம் மோகன், பாடல்கள் -வைரமுத்து, சினேகன்,விவேக்,சண்டை- அன்பறிவ்,நடனம்-செரிப், தயாரிப்பு- செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.ஆர். பிரபாகரன்.
ரஜினி பற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"நான் முதலில் தங்கியிருந்த புதுப்பேட்டை முரளி வீட்டில்தான் பின்னாளில் ரஜினியும் தங்கியிருக்கிறார். பிறகு நான் புரசைவாக்கம் விடுதிக்கு வந்துவிட்டேன்.
ஒருநாள் படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டது. படப்பிடிப்பில் ரஜினியும் இருந்தார். "நான் உங்களை `டிராப்' பண்ணிடறேன்'' என்று சொல்லி எனது காரில் ஏற்றிக்கொண்டேன்.
புதுப்பேட்டையில் காரை ரஜினி நிறுத்தச்சொன்ன இடம், முன்பு நான் தங்கியிருந்த அதே இடம்! ரஜினியிடம் இதைச் சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார்.
1976-ல் டைரக்டர் பீம்சிங் இயக்கிய "உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தில் என்னுடன் ரஜினியும் நடித்தார். அப்போதெல்லாம் தூங்காமல் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டிருந்தேன்.
காலையில் ஒரு படப்பிடிப்பை முடித்து விட்டு வந்தவன், வாகினியில் இருந்த செட்டுக்கு மதியம்
2 மணிக்கு வந்தேன். முந்தின இரவு தூங்காததால் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்க விரும்பி மேக்கப் ரூமுக்கு போனேன்.
அங்கே ரஜினி இருந்தார். அடுத்த காட்சியில் அவருக்கு நடிக்க வேண்டிய பேண்ட் - ஜிப்பா கொடுத்திருந்தார்கள். ஜிப்பாவை போட ரஜினி முயற்சிக்கிறார்; முடியவில்லை! ரஜினியும் எப்படியாவது அந்த ஜிப்பாவை உடம்புக்குள் நுழைத்துவிட முயன்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த நான் ரஜினியிடம், "இந்த சின்ன ஜிப்பா, உங்கள் உடம்புக்கு எப்படிப் பொருந்தும்'' என்று கேட்டேன்.
"காஸ்ட்ïமர்'' இதைத்தான் கொடுத்திட்டுப் போனார்'' என்றார், ரஜினி.
நான் உடனே காஸ்ட்ïமரை அழைத்து, "இந்த ஜிப்பா இவருக்குப் பொருந்தவில்லை. வேறு ஜிப்பா கொண்டு வந்து கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக காஸ்ட்ïமர் வேறு ஜிப்பா வாங்கி வந்து கொடுத்தார். அது ரஜினிக்கு பொருத்தமாக இருந்தது. அதை அணிந்து கொண்டு, அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அன்றைய படப்பிடிப்பில் ஒரே ஷாட்டில் 4 பக்க வசனம் அவருக்கு கொடுத்திருந்தார்கள். `கடகட'வென அவருக்கே உரிய பாணியில் ஒரே டேக்கில் பேசி, காட்சியை ஓ.கே. பண்ணினார் ரஜினி.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், ஆந்திர மாநிலம் நகரியில் "என் கேள்விக்கென்ன பதில்'' படப்பிடிப்பு நடந்தபோது, ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார்.
"நகரியில் நான், ரஜினி உள்ளிட்ட நடிகர் குழுவினர் நடித்துக்கொண்டிருந்தோம். டைரக்டர் பி.மாதவன் டைரக்ட் செய்தார்.
திடீரென பொதுமக்கள் கூட்டத்தில் நின்ற சிலர் வேண்டுமென்றே எங்களிடம் தகராறு செய்தார்கள். படப்பிடிப்பு கேமராவை பிடுங்கிக் கொண்டார்கள்.
நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். அவர்களோ வேறு ஏதோ நோக்கம் வைத்துக் கொண்டு எங்களிடம் தகராறு செய்து
கொண்டிருந்தார்கள்.இனியும் இங்கே இருந்தால், அடுத்த கட்ட பிரச்சினை உருவாகலாம் என்று நினைத்து, டைரக்டரின் யோசனைப்படி அங்கிருந்து காரில் புறப்பட்டோம். ஒரு பியட் காரில் என்னையும், ரஜினியையும் டைரக்டர் பி.மாதவன் சார் சென்னைக்கு அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டதும் கூடியிருந்த கும்பலை விலக்கும் பொருட்டு, ஜன்னலுக்கு வெளியே நானும், ரஜினியும் கைகளை நீட்டி `ஓரம்போ ஓரம்போ' என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.
`இனி பிரச்சினையில்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், `கார்' மக்கர் செய்து ஒரு இடத்தில் நின்று விட்டது. என்ன முயற்சி செய்தும் கார் நகரவில்லை.
உடனே, அந்த ஊரில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, பஸ்சில் ஏறினோம். டாக்சி ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு பஸ் வந்தபோது, அங்கே நிறுத்தி இறங்கிக் கொண்டு, டாக்சி பிடித்தோம். அம்பத்தூர் வரை அந்த டாக்சியில் பயணம் செய்தோம்.
ரஜினியைப் பொறுத்தமட்டில் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு அவருக்கு உள்ள பெயரும், புகழும் வேறு. இப்போதும் நண்பர்களிடம் முன்பு காட்டிய அதே அன்புதான்; அதே பண்புதான். எப்போதாவது சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும்போது, அவராகவே பழைய நாட்கள் பற்றி நினைவுபடுத்துவார்.
ஒரு கட்டத்தில் நான் அவருக்கே அப்பாவாக நடிக்க வேண்டி வந்தது. கமலுக்கும் நான் அப்பாவாக நடித்திருக்கிறேன். இப்போதும் எங்களுக்குள் அதே அன்புதான் நீடிக்கிறது.
நாட்டாமை படத்தில் நான் நடித்த `நாட்டாமை' கேரக்டர் பற்றி ரஜினி ரொம்பவும் புகழ்ந்து பேசினார். `அமைந்தால் இப்படி கேரக்டர் அமையவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கேரக்டர் அப்படியே அவருக்குள் ஊடுருவி, நாட்டாமையை தெலுங்கில் `பெத்தராயுடு' என்ற பெயரில் எடுக்கச் செய்து, அதில் நான் நடித்த நாட்டாமை கேரக்டரையும் செய்து அசத்தினார்.
இந்த கேரக்டர் பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது, "விஜி! உங்க ஸ்டைல் எனக்கு வரலை. அதனால் நாட்டாமை கேரக்டரில் சுருட்டு பிடிக்கும் மேனரிசத்தை சேர்த்துக் கொண்டேன்.''
மற்றவர்களின் திறமையை மதிக்கும் பண்பு, அவருக்கு எப்போதுமே உண்டு. என்னுடன் சேர்ந்து நடித்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக வந்து நான் பார்த்ததே இல்லை. இப்போதும் இந்த நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தொழிலை நேசிக்கத் தெரிந்தவர். அதனால்தான் அவரது தொழிலான சினிமாவும் அவரை சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
‘சிறுத்தை’ படத்தில் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக வந்த கார்த்தி, இப்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதை ‘சதுரங்க வேட்டை’ டைரக்டர் வினோத் இயக்குகிறார்.
மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து முடித்த பிறகு இந்த படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் சென்னையில் நடந்தது. வருகிற 14-ந் தேதி முதல் 2-ம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 29-ந் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் இங்கு தான் படமாகிறது. இது மட்டுமல்ல இரண்டு பாடல்காட்சிகளும் ராஜஸ்தான் மாநிலத்தின் எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.
இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். அபிமன்யூ சிங் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே, தலைவா, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர். மேலும், தெலுங்கு காமெடியன் நர ஸ்ரீனிவாஸ் இப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இவரும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சென்னை ஐகோர்ட்டில், பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நடிகர் சூர்யா, அனுஷ்கா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிங்கம் 3’ என்ற ‘எஸ்.ஐ.3’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படம் வெளியிடப்படும் அதே நாளில், காலை 11 மணிக்கு திருட்டுத்தனமாக இந்த திரைப்படத்தை நாங்களும் வெளியிடுவோம் என்று சில இணையதளங்கள் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ‘கபாலி’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து இணையதளங்களுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதேபோன்ற தடை உத்தரவை, 186 இணையதள சேவை நிறுவனங்களுக்கு பிறப்பிக்கவேண்டும். சிங்கம் 3 திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தான் தொடர வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை திரும்ப பெறுவதாக மனு தாரர் தரப்பு வக்கீல் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இப்போது, விஷால் மீதான சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதையடுத்து விஷால் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு கமல் முன்மொழிந்திருக்கிறார்.
இதற்கிடையே, குஷ்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. அதை மறுத்த குஷ்பு, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை. என்னால் 100 சதவீதம் நேரம் ஒதுக்க முடியாது. விஷால் அணிதான் சிறந்ததை செய்யும் சிறந்த அணி’ என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் நேரடி முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருதுகள் பற்றி கூறும்போது...“விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவோர் விழாவில் ஆடினால் பாதி பணமாகவும் மீதியை விருதாகவும் தருவோம் என்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கும் விருது தேவை இல்லை என்பதால் விருது வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லி விடுகிறேன். எனக்கு விருது முக்கியமல்ல என் ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவு போதும்” என்றார்.
‘2.ஓ’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
காஜல் அகர்வால் தற்போது விஜய்,அஜித் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் எப்போது என்று அடிக்கடி பத்திரிகையாளர்கள் கேட்பது குறித்து காஜல் அளித்த பதில்...
“பொதுவாக நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்கிறார்கள். என்னிடமும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. கோபமாக வருகிறது.
திருமணத்துக்குப்பிறகு நடிகைகளுக்கு நாயகி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடம் தான் கொடுக்கிறார்கள்.
நடிப்பையும் திருமணத்தையும் முடிச்சு போட்டு பார்க்க கூடாது .நடிப்பும் ஒரு வேலை தான். திருமணம் ஆன பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். நடிகைகளும் அது போல் தான். திருமணத்துப்பிறகும் சினிமாவில் தகுந்த வாய்ப்பு வழங்க வேண்டும்”.
அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா அவசர அவசரமாக முதல்வராவதற்கு அவசியம் என்ன? இதனால், சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று கூறிவந்தார். அவர் தனக்கு யாரும் சொந்தம் இல்லை என்றுதான் சொன்னார்.
ஆனால், அவர் மறைந்த பிறகு சசிகலா போயஸ் தோட்டத்தில் யாரை சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். போயஸ் தோட்டத்தில் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் உரிமை கொண்டாடுவது என்ன நியாயம்?
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கெனவே, இப்படத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் ஆர்யாவுக்கு இதில் நடிக்க முடியாமல் போனதால், அர்ஜுனை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரி, தலைப்புக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விஷால் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, அர்ஜுன் இயக்கி, நடித்த ‘வேதம்’ படத்தில் அவருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
‘இரும்புத்திரை’ படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.








