என் மலர்
"முதல்வன்'' படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.
டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.
புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.
முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.
அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.
சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.
ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.
ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.
இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.
ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.
ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.
மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.
அர்ஜீனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.
இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போருக்கு காரணமான ‘காஸி’ என்ற பாக். நீர்மூழ்கி கப்பலை இந்திய கப்பற்படை வீழ்த்தி அழித்ததை மையமாக வைத்து வெளிவந்து படமே ‘காஸி’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ‘காஸி’யை வைத்து INS விக்ராந்த்தை அழிக்க, அது நிறுத்தப்பட்டிருக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இது இந்திய உளவுத்துறை அறிந்து, இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரி மற்றும் நாசருக்கு எச்சரிக்கிறது. அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்கார கேப்டன் கே.கே.மேனன் மற்றும் சாதுர்யமான கேப்டன் ராணா ஆகியோர் பணிபுரியும் எஸ்21 நீர்மூழ்கி கப்பலை, காஸியை எதிர்க்க அனுப்புகிறார்கள்.
காஸியை ஒப்பிடும்போதும் பலம் குறைந்த எஸ்-21 எப்படி பாகிஸ்தானின் சதியை முறியடித்து, அதற்கு கடலுக்குள்ளேயே எப்படி சமாதி கட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி விறுவிறுப்பான கதை.
படத்தின் நாயகன் ராணா டகுபதி, கப்பற்படை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் அறிமுக காட்சியில் நடந்துவரும் கம்பீரமே இதற்கு சாட்சி. அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் நமக்கு வெறி ஏற்றியிருக்கிறார். மற்றொரு கேப்டனாக வரும் கே.கே.மேனன் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். எதிரியை பார்த்தாலே அழித்துவிட வேண்டும் என்கிற இவரது ஆக்ரோஷமான நடிப்பு படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
மற்றபடி, கப்பலின் மற்றொரு கேப்டனாக வரும் அதுல் குல்கர்னியும் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அகதியாக வரும் டாப்சியை பார்க்கும்போதே நமக்கும் சோகம் தொற்றிக் கொள்கிறது. மற்றபடி, எஸ் 21-ல் பணிபுரியும் வீரர்கள், ஓம் பூரி, நாசர் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து நாம் ஒரு ஆழ்கடல் பயணம் செய்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் சங்கல்ப், தான் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒவ்வொரு சம்பவங்களையும் மிகவும் திரில்லாக நகர்த்தியிருக்கிறார். நாம் செய்திதாள்களில் படித்த சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருசில காட்சிகள் நம்மை உணர்ச்சி பரவசத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக, காஸியின் தாக்குதலில் இந்தியாவின் எஸ்-21 நீர்மூழ்கி கப்பல் லேசாக விபத்துக்குள்ளாகி தரை தட்டிவிடும். அப்போது, ஒரு குறிபிட்ட தொலைவு வரையே எஸ்-21-ஆல் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், காஸியோ அந்த எல்லையை தாண்டி நிற்கும். இருப்பினும், இவர்கள் சூழ்ச்சி வலை செய்து காஸியை தாக்கமுடியும் என்ற எல்லைக்கு கொண்டு வர வைக்கும் காட்சிகளில் எல்லாம் கண்ணிமைக்க முடியாமல் வைக்கிறது.
மதியின் ஒளிப்பதிவு நாம் நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக கையாளப்பட்டிருக்கிறது. கே-யின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் தேவையான இசையை மட்டுமே கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில் ‘காஸி’ போர் வீரர்களுக்கு பெருமை சேர்த்தது.

காதலர்கள் தினத்தினை முன்னிட்டு இலங்கையின் சுகந்திர இசைக்கலைஞர்களில் பாடலாசிரியரான எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக் கலைஞனாக அறிமுகமாகும் “என் கண்ணம்மா” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளரான யஜீவன் இசையமைத்து பாடியுள்ள “என் கண்ணம்மா” பாடலில் கடந்த காலங்களில் பாடலாசிரியராக செயற்பட்டு வந்த எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக்கலைஞனாக அறிமுகமாகியுள்ளார்.
இப்பாடலின் இசைக்கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவினை பிரவீன் செய்துள்ளார். குறித்த பாடலினை கஜன் கே கலையமுதன் இயக்கியதோடு பாடலின் தொகுப்பாக்கம் பணியினையும் செய்துள்ளார்.
காதலர் தினத்தன்று வெளியான இப்பாடல் காதலில் ஏற்படும் சில உண்மை சம்பவங்களை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சம் கோபம் நிறைய காதல் என்பதை மையப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் காணொளியில் டிலானி மற்றும் யஜீவன் நடித்துள்ளனர். இந்தப் பாடல் முற்றிலும் இளம் வயதினரின் படைப்பாகவுள்ளது சிறப்பம்சமாகும். மேலும், இப்பாடல் இந்தியாவின் பிரபலமான DIVO யூடியூப் அலைவரிசையில் வெளியிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறும்போது, நான் விஜய் நடிக்கும் படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்ததன் மூலம் விஜய் படத்தின் முழு நாள் சூட்டிங்கை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் தளபதியின் பக்கத்திலேயே நிற்பது மாதிரியான காட்சி இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அப்போது, விஜய, தன்னுடைய நடிப்பால் அந்த முழு யூனிட்டையும் கைதட்ட வைக்கிற அளவுக்கு ஒரு காட்சியில் நடித்து முடித்தார். அதேபோல், அவர் படப்பிடிப்பு தளத்திற்குள் வருகிறபோது ரசிகர்களை தனது சிரிப்பாலும், கைகளை அசைத்தும் சந்தோஷப்படுத்தினார்.
ரொம்பவும் ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமலும், ரோப் இல்லாமலும், சேப்டி பெல்ட் இல்லாமலும் செய்தார். அவருக்கான குடையை பிடிப்பதற்குக்கூட இன்னொரு ஆள் வைத்துக் கொள்ளாமல், அவரே முழு நாளும் வைத்திருந்தார். இவ்வளவு எளிமையாக ஒரு மனிதர் இருக்கலாம். ஆனால், ஒரு பிரபலம் இப்படி இருப்பது மிகவும் அரிது. அவருடைய ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது ரெயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.
இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலை யங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில் இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கைய சைத்தார்.
ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள் திரண்டதால் நெரிசல் உருவானது.
நெரிசலின் போது ரெயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமானது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
அங்கு கடை வைத்து நடத்தி வரும் விக்ரம்சிங் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாக சேதமானது. பணமும் திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் கோடா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஷாருக்கான் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் சிறப்பான விருந்து ஒன்றை படைக்கவுள்ளார்.
அது வேறொன்றுமில்லை, சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் தலைப்பைத்தான் நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் நரேன் இயக்க உள்ள அடுத்த படமான நரகாசுரன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தெலுங்கு நடிகர் யார் என்பதை கீழே பார்க்கலாம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளியான `துருவங்கள் பதினாறு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு' முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்' என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னதாக கார்த்திக் நரேன் அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா சார்பில் நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். அவரைத்தொடர்ந்து மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவின் வருங்கால கணவரான நாக சைதன்யா `நரகாசுரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாக சைதன்யா அறிமுகமாகும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா நடித்திருந்தார்.
மலையாள நடிகர் யார் நடிக்க உள்ளார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபாலி படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவலை கீழே பார்க்கலாம்.
ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் முன்னதாக வெளியிடப்பட்டது.
`2.ஓ' படத்திற்கு பிறகு ரஜினி எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவித்திருந்தார்.
‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக வந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்று வரும் `2.ஓ' படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. அதனைதொடர்ந்து, ரஜினி-பா.ரஞ்சித் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

`யாதுமாகி நின்றால்' என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.
ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்'. பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.
இந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.
குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.
தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றால்'.

தனுஷ் எனது மகன் என்று கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடுத்த வழக்கில் இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சினிமா நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். வயதான எங்களுக்கு அவர் பராமரிப்பு செலவுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
அவர்கள் பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பினரும், தனுஷ் படித்ததாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச்சான்றிதழ்களின் நகல்களை சமர்பித்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளை (17-ந்தேதி)க்கு ஒத்திவைத்தார்.

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ஜாலி எல்.எல்.பி-2 என்ற படத்திற்கு எதிரான வழக்கில் அக்ஷய் குமாருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து இருந்த ஜாலி எல்.எல்.பி-2 என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் கோர்ட்டில் நடைபெறும் காட்சி ஒன்றில் நடிகர் அன்னுகபூர் ஒரு நிறுவனத்தின் செருப்பு குறித்து பேசி இருந்த ஒரு வசனம் இழிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் அந்த செருப்பை கொண்டு ஒருவரை அடிக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. இதனால் அந்த தனியார் செருப்பு நிறுவனத்தினர் தங்களின் உற்பத்தி பொருளை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, திரைப்பட நடிகர் அக்ஷய் குமார், படத்தயாரிப்பாளர் நரேன் குமார், நடிகர் அன்னு கபூர், இயக்குனர் சுபாஷ் கபூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக வருகிற 22-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு நடிகர் அக்ஷய் குமார் உள்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

`சி3' படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கத்தின் அடுத்த பாகமாக `சி4' வரும் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்க்கலாம்.
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்துள்ளது.
`சி3' படம் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரிக்கு, நடிகர் சூர்யா டொயோடா ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் ஹரி அளித்த பேட்டியில் சூர்யாவுடன் இணைந்து `சிங்கம்' படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க உள்ளதாக கூறினார். சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
ஹரி அடுத்ததாக விக்ரமை இயக்க உள்ளார். `சாமி' படத்தின் அடுத்த பாகமாக `சாமி 2' படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சிங்கம் படத்தைப் போன்று வேறொரு கதைக்களத்தில் சூர்யாவுடன் இணையவுள்ள ஹரி, அதன்பின்னர் `சி4' படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.