என் மலர்
“பிரச்சினைகள் எல்லோருக்கும் வரும். அதுபோல்தான் சந்தோஷமும். சிலர் கஷ்டத்தில் தடுமாறிப்போவார்கள். இன்னும் சிலரோ அதை படிக்கல்லாக்கி வாழ்க்கையில் மேலும் உயர்வார்கள். நான் இதில் இரண்டாவது ரகம். சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் சமமாக எடுத்துக்கொள்வதில்தான் நிஜமான மகிழ்ச்சியே இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன்.
இந்த உயரத்துக்கு எளிதாக வந்து விடவில்லை. நிறைய பிரச்சினைகளையும், போராட்டங்களையும் சந்தித்துத்தான் வளர்ந்து இருக்கிறேன். பிரச்சினைகள் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அது முதிர்ச்சியை கொடுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் கொடுக்கும். நான் வலிமையான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். அப்படி என்னை மாற்றியதற்கு நான் எதிர்கொண்ட பிரச்சினைகள்தான் காரணம். அதுதான் சினிமாவில் என்னை வலுவாக காலூன்றவும் வைத்து இருக்கிறது.
சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சில நேரம் சோர்வு மனநிலையில் இருக்கிறோம். சோர்வு மனநிலை நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது. எந்த துறையாக இருந்தாலும் பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளிக்க தைரியம் வேண்டும். அப்படிபட்டவர்கள்தான் வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறேன். அதனால் எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது. என்னை மற்றவர்கள் அழகான புத்திசாலி என்று அழைக்கிறார்கள். குழப்பம் என்பது எனது வாழ்க்கை அகராதியிலேயே கிடையாது.
புத்திசாலித்தனமான முடிவுகளையே எடுக்கிறேன். பத்து வருடங்கள் தொடர்ந்து நடித்து விட்டேன். இனிமேல் நடிப்புக்கு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது. அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''
என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,
"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.
அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.
"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.
உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.
நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.
மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.
அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.
சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.
சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.
மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.
படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.
என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.
அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.
நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்ïலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.
நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.
"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.
அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.
எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!
இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.
சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.
"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று
சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.
நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.
சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.
பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
தற்போது, அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை, வேறொருவர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதன்பிறகே, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விக்ரம் - தமன்னா நடிக்கும் புதிய படம் வடசென்னை கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் வடசென்னை குப்பத்து பெண்ணாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டு அதில் ஒன்றி விட்டார். இதன் கிளைமாக்சை கேட்டு அவர் கண்கலங்கி விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
வழக்கமாக கவர்ச்சி நாயகியாக வரும் தமன்னா, இந்த படத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “பாகுபலி படத்துக்கு பிறகு இந்த படமும் எனது திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்து இருக்கிறது” என்றார்.
விக்ரம் - தமன்னா நடிக்கும் படத்தை விஜய் சந்தர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே சிம்பு வைத்து ‘வாலு’ என்ற படத்தை இயக்கியவர். தமன்னா தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்.
அப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான்.
இறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார்? அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன? நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது? என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது.
சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை.
இயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ரம்’ கிக் ஏற்றுகிறது.
இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள்.
இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான். தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தனது வீட்டிற்கும் அழைத்து செல்கிறான்.
இதையெல்லாம் உண்மை என்று நம்பி செல்லும் மோனிகாவை, சுரேந்தர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை தன்வசப்படுத்தி நெருக்கமாக இருக்கிறான். அதை வீடியோவும் எடுத்துவிடுகிறான். இதனால், தனது மானம் பறிபோனதே என்று பதறும் மோனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.
தனது தங்கையின் இந்த பரிதாப முடிவுக்கு காரணமான சுரேந்தரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறாள் கௌரி நந்தா. இந்நிலையில், சுரேந்தர் திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க நிழல்கள் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி கமிஷனர் அளவில் போய் பேசுகிறார்.
இதனால், சுரேந்தரை கண்டுபிடிக்க அசிஸ்டென்ட் கமிஷனரான ரகுமான் நியமிக்கப்படுகிறார். அவர் சுரேந்தரை தனது போலீஸ் மூளையால் கண்டுபிடித்தாரா? காணாமல் போன சுரேந்தர் என்ன ஆனார்? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
சுரேந்தர் பெண்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு ரோமியோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், நாயகியான மோனிகாவும் தோற்றத்திலேயே நம்மை கவர்கிறார். பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில் உள்ள பெண்ணுக்குண்டான உடல்மொழியில் தனது நடிப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரகுமான், இந்த படத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். காணாமல் போன சுரேந்தரை கண்டுபிடிக்க இவர் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ராஜஸ்ரீ, பையன் என்ன தவறு செய்தாலும், அது தனது மகன் செய்யவில்லை என்பதுபோன்ற வெகுளியான அம்மாவாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுரேந்தரின் தந்தையாக வரும் நிழல்கள் ரவி, தனது அதிகாரப் பலத்தால் ஆணவத்துடன் பேசும் இடங்களில் எல்லாம் மிளிர்கிறார்.
இயக்குனர் ராம் கே.சந்திரன், காதல் என்ற போர்வையில் பெண்களை நாசம் செய்யும் மோசமான இளைஞர்களுக்கு கடைசியில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதி, சுரேந்தர் மற்றும் மோனிகாவின் பின்புலம் இதைப்பற்றியே கதை நகர்வதால், படம் மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறது. ஆனால், பிற்பாதியில் ரகுமான் வந்தபிறகு, காணாமல் போனவனை கண்டுபிடிக்கும் விசாரணையில் படம் நகர்வதே தெரியாமல் செல்கிறது. முடிவும் எதிர்பார்த்தபடி அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
கார்த்திக் ராஜா இசையில் அவரது அப்பா இளையராஜாவின் பாடல்களில் இரண்டை தனது பாணியில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் கிரைம் திரில்லருக்குண்டான உணர்வை கொடுத்திருக்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பகடி ஆட்டம்’ ஆடலாம்.
இந்நிலையில், தற்போது பழனி கோவிலுக்கு முகத்தில் துணியை கட்டியவாறு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் காவி வேஷ்டி அணிந்துள்ளார். காவி துண்டால் தனது முகத்தை மூடியாவாறு கட்டியுள்ளார். விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இது அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், வடிவேலு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
“எனக்கு என்னுடைய அப்பா, அம்மா, என் சகோதரி, என் மனைவி எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கும் ஒரு நல்ல வெற்றியை பெற விரும்புகிறேன்.
ஒரு விழாவில் விஷால் பேசும் போது, ‘சாந்தனு ஜெயிச்சா இந்த பட உலகே ஜெயிச்ச மாதிரி என்றார். அந்த அளவுக்கு எனக்கு பொறுமையும், திறமையும் இருக்கிறது’ என்றார். எல்லோருடைய வாழ்த்துக்களும் எனக்கு இருக்கிறது.
‘முப்பரிமாணம்’ படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நான் கடுமையான உழைப்பை கொடுப்பேன். நான் இதுவரை நடித்த படங்களில் ஆழமான கதை, கருத்து உள்ள படம் இது. எனவே, இந்த படம் நிச்சயம் எனக்கு திருப்பத்தை தரும்.
இனி எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்த படத்தின் இயக்குனர் அதிரூபன் என்னிடம், நீங்க ஹீரோ இல்லை. ஒரு குணசித்திர நடிகர் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றார். அது போல் தான் இதில் நடித்திருக்கிறேன். இதன் டீசரை பார்த்து ரஜினி பாராட்டினார். இனி எல்லா படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இன்று ரசிகர்களின் ரசிப்பு தன்மை மாறி விட்டது. அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டு பையனாக நடிகர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவே விரும்புகிறேன்” என்றார்.
சிருஷ்டி டாங்கே பேசும் போது, “இந்த படத்தில் இயக்குனர் என்னிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்த்தார். அதற்காக கடுமையாக உழைக்க வைத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.
படம் பற்றி கூறிய இயக்குனர் சாய்பரத்....
“‘ரம்’ என்று பெயர் வைத்திருப்பதால் இது மதுவுடன் தொடர்புடைய படம் அல்ல. ரம் என்றால் தமிழ் அகராதிப்படி தீர்ப்பு என்பது பொருள். இது ஆக்ஷன் கலந்த திகில் படம்.
நரேன் வில்லனாக அசத்தி இருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அனைவரையும் கவரும் வித்தியாசமான படம்” என்றார்.
படத்தின் நாயகன் ரிஷிகேஷ், “ இந்தபடத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறேன். வித்தியாசமான கதை. சிறப்பாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது,
“ஒரு கொள்ளை கூட்டதின் கதை என்றாலும், இதில் ஹாரர் உண்டு. ரிஷிகேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். விவேக் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். காமெடியில் கலக்கி இருக்கிறார். குணசித்திர வேடத்திலும் அசத்தி இருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் அவருடன் பேசிக் கொண்டே இருப்பேன். இதில் நடித்தது நல்ல அனுபவம். இந்த படம் வரும் நாளில் நான் நடித்த ‘என்னோடு விளையாடு’ படமும் வெளியாகிறது. அடுத்த மாதம் நட்டி ஜோடியாக நான் நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் வெளியாகிறது. நான் பெங்களூர் பொண்ணு, என்றாலும் `ரம்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருப்பதால் நன்றாக தமிழ் பேசுகிறேன். இப்போது வேலையை மட்டும் காதலிக்கிறேன். வேறு யாரையும் காதலிக்க வில்லை” காதலர் தினத்தில் கூட ‘ரம்’ பட நிகழ்ச்சியில் இருந்தேன் என்றார்.
ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வரும் ராதாரவி, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். இதை அறியும் பரத், அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு முனையில் பெண்களே பிடிக்காத கதிர், வேலை விஷயமாக சென்னை வரும்போது, கட்டாயத்தின் பேரில் சஞ்சிதா ஷெட்டியுடன் ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் அப்பா, வீட்டின் பேரில் வாங்கிய கடனால், வீடு ஏலத்துக்குப் போகவே, அந்த வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். இதை அறியும் கதிர், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளுக்காக அந்த பணத்தை தயார் செய்து அந்த வீட்டை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.
இறுதியில், பரத், கதிர் இருவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததா? இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை இதுவரை தமிழ் சினிமாவில் ஒருசில காட்சிகள்தான் பெயரளவிற்கு வைத்திருந்தார்கள். குதிரை பந்தயத்தை மையமாக வைத்து முழுநீள படமாக இதுவரை எடுத்ததில்லை. இப்படியொரு கதையை தேர்வு செய்ததற்காகவே இயக்குனர் அருண் கிருஷ்ணசாமியை பாராட்டலாம். குதிரை பந்தயத்துக்கு பின் இருக்கும் அரசியல், பந்தயத்தில் வெல்லத் தேவையான சாதுர்யம் ஆகியவற்றை கதையாக்கி, குழப்பாத திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
நாயகன் பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பந்தயத்தில் பணத்தை இழந்தாலும் அதை மீட்பதற்காக இவர் சாதுர்யமாக காய் நகர்த்தும் பாணி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பெண்களை கண்டாலே எட்டி நிற்கும் கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அசத்துகிறது. அதேநேரத்தில், ஒரு பெண்ணுக்காக அவர் படும் கஷ்டங்களையும் படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
நாயகிகளான சாந்தினிக்கும், சஞ்சிதா ஷெட்டிக்கும் சரிசமமான கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ராதாரவி படத்தில் வந்தாலே போதும் என்று கூறும் அளவிற்கு, இந்த படத்திலும் ரொம்பவும் அசால்ட்டாக வந்து மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.
யுவாவின் கேமரா, குதிரை பந்தயத்தில் புகுந்து விளையாடியிருக்கிறது. மற்ற காட்சிகளையும் ரொம்பவும் துல்லியமாக படமாக்கியிருக்கிறது. மோசஸ், சுதர்சன் எம்.குமார் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும்படி அமைந்திருப்பது பலம்.
படத்தில் ஆங்காங்கே ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் அனுபவத்தை அது கெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு திருப்தியான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறது.
மொத்தத்தில் ‘என்னோடு விளையாடு’ விளையாடலாம்.
இன்று காலை 8 மணிக்கு மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் தொடங்கியது. அதன் பிறகு மயிலாப்பூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப் படுகிறது.
பாலமுரளிகிருஷ்ணா - அன்னபூர்ணா தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள் களும் உள்ளனர். அன்ன பூர்ணாவுக்கு 14 வயதிலேயே பாலமுரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்தது.
பாலமுரளி கிருஷ்ணா 3 மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் நிலையும் மோசம் அடைந்தது.
இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
மேலும், பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்' படத்தை கமல் ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2' படம் தயாராகி வருகிறது.
`விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களை மட்டுமே சமாளிக்க வேண்டியிருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
`விஸ்வரூபம்' முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்துளனர். இப்படத்தை கமல் அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், 6 மாதங்களில் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.








