என் மலர்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரண உதவிகளை நடிகர் விஷால் வழங்கியுள்ளார். முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார். அங்கே வசித்து வந்த 25 குடும்பங்களில் குழந்தைகள் உட்பட 216 பேர்களுக்கு தேவையான உணவு, போர்வை, சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
விஷாலின் இந்த உடனடி உதவியால் பயனடைந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரை வாழ்த்தினர். இன்னும் அந்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக நடிகர் விஷால் கூறினார். நேதாஜி நகர் மக்களுக்கு உதவும் பணிகளை அம்மக்களோடு இருந்து நடிகர் விஷாலின் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

முக்கிய தலைவர் மரண மர்மத்தை சொல்லும் கதையை ஹாலிவுட் பாணியில் உருவாக்கும் முதல் தமிழ்படம் குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும் காட்சிகளைக் கொண்ட விஷூவல் எபக்ட்ஸ் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுகின்றன.
இந்தநிலையில் தீபன் என்ற இளம் இயக்குனர் ‘மாயா மீடியா வொர்க்’ மற்றும் ஆம்சி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு விஷூவல் எபக்ட்ஸ் சார்ந்த படத்தை தொடங்குகிறார்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான தேசிய தலைவரின் மரணத்தில் உள்ள மர்மங்களை மிகவும் சுவாரஸ்யமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், இந்த திரைக்கதையில் கதாநாயகன் நியூரல் சிமுலேஷன் மூலம் பல்வேறு வித்தியாசமான இடங்களுக்கு பயணம் செய்து பல தடைகளை மீறி அந்த மர்மங்களை கண்டுபிடிக்கிறார். அது போன்ற பாணியில் உருவாக்கும் முதல் தமிழ் படம் இது.
புதுமுகம் வைதேஷ் ஹரிஹரன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது.
இயக்குனர் தீபக் கூறும் போது “இந்த திரைப்படம் தற்போது ஆரம்ப விஷூவல் நிலையில் உள்ளது.
மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்ததாக அமையும். இது அனிமேஷன் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் திரைபடங்களுக்கு ஒரு புரட்சிகரமான தொடக்கமாக அமையும்.
இந்த படத்திற்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்ற ப்ரெட் ஆலன் மற்றும் விஜய் கூட்டணி இசை அமைக்க உள்ளனர்.

சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படமான ‘அறம் செய்து பழகு’ படத்தின் முன்னோட்த்தை கீழே பார்க்கலாம்.
சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘அறம் செய்து பழகு’.
இந்த படத்தை ‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் ஏவிஎம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்களிலும், இயக்குனர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தவர்.
இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தீப் ஜோடி யாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ ரீன் நடிக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதா நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
“வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே.லஷ்மண் மீண்டும் இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். முதல் முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்துபணியாற்றி உள்ளார்.
வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு- காசி விஸ்வநாதன், கலை- சேகர், நடனம்- ஷோபி. இந்த படத்தின் தலைப்பை ஜெயம்ரவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இது ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.

ராணா நடிப்பில் `காஸி' படம் திரைக்கு வந்துள்ள நிலையில், தனுஷ் படம் ஒன்றில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறினார். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
`அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பிறகு, இயக்குநர் கவுதம் மேனன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
முன்னதாக இப்படத்தில் இருந்து "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும் தர்புகி சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இந்நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. எனினும் படக்குழு இதனை உறுதி செய்யாத நிலையில், நடிகர் ராணா தான் இப்படத்தில் ஒரு நிமிட காட்சியில் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக 30 நிமிடங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்ததாகவும் ராணா கூறினார்.
முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரே `விடிவி' படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்தார். அதேபோல் `நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நானீ சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பின்னர் அவரே `நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்திருந்தார். இந்நிலையில், ராணா ஒரு நிமிட காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
ராணா நடிப்பில் நேற்று வெளியான `காஸி' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக ராணா நடிப்பில் `பாகுபலி 2' ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்தி வாசு நடிக்கும் `7 நாட்கள்' என்ற படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `7 நாட்கள்'. இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி - நிகிஷா பட்டேல் நடிக்கும் இப்படத்தில், பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.
`அப்புச்சி கிராமம்` படத்திற்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.
மதன் கார்க்கியின் வரிகளில், டி.ராஜேந்தர் பாடிய பாடலான 'புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் சக்தி, கணேஷ் வெங்கட்ராம், இயக்குனர் கௌதம்.வி.ஆர்., இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாடலை பாடிய டி.ராஜேந்தர் இப்பாடலை வெளியிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர் செய்து பெற்ற வெற்றியையடுத்து, இன்று வெற்றி விழா கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உலக சாதனையும் நிகழ்த்தப்பட உள்ளது. அதனை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர் செய்து பெற்ற வெற்றியை உலக சாதனையாக கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ராகவாலாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை.
எனவே ஜல்லிகட்டு வெற்றியை இன்று (பிப்ரவரி 18) கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலை பேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம்.
மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் இன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும் என்று கூறியிருந்தார்.
அதேநேரத்தில் நமது சந்தோசக்களம் மெரினாதான் என்றாலும், இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அறப்போர் செய்து பெற்ற வெற்றியை 1100 கிலோ கேக்கை வெட்டி உலக சாதனை நிகழ்த்தி கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். செஃப் வினோத் உள்ளிட்ட 40 செஃப்கள் உருவாக்கும் இந்த கேக் 50 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. செஃப் வினோத் உடன் இணைந்து லாரன்ஸ், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் இணைந்து இந்த உலக சாதனை படைக்கின்றனர்.

தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நடிகர் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர்.
அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள் பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் கமல், ஜல்லிக்கட்டு விவகாரம், வர்தா புயல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்த சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்.
என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவரை மர்ம கும்பல் காருடன் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவரை மிரட்டவும் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா.
இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, அசல், ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா நேற்று இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந் தார்.
கார் கொச்சியை அடுத்த அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த கும்பல் திடீரென பாவனாவின் காரை வழி மறித்தனர்.
அவர்கள் பாவனாவை மிரட்டி காருக்குள் ஏற்றிக்கொண்டனர். பின்னர் டிரைவரை மிரட்டி காரை தொடர்ந்து ஓட்டும்படி எச்சரித்தனர்.
அவர், காரை ஓட்டத் தொடங்கியதும் அந்த கும்பல் பாவனாவை மிரட்டியதோடு, அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர். இதை அந்த கும்பல் செல்போனில் படம் எடுத்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க நடிகை பாவனா போராடினார். மேலும் செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்க முயன்றார்.
இதற்குள் கார் கொச்சியை நெருங்கியது. பாலாரி வட்டம் சந்திப்பை அடைந்த போது, அந்த கும்பல் காரை நிறுத்தி கீழே இறங்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள், இன்னொரு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
மர்ம கும்பலின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை பாவனா, கொச்சி பகுதியில் வசித்து வரும் ஒரு டைரக்டரின் வீட்டிற்கு சென்றார்.
அவரிடம் மர்ம கும்பலால் காரில் கடத்தப்பட்ட தகவலையும், தனக்கு நேர்ந்த கொடுமையையும் கூறி அழுதார். அவர் உடனே இதுபற்றி பாலாரி வட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் டைரக்டர் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
அங்கு பீதியில் உறைந்திருந்த பாவனாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். மேலும் பாவனாவை கடத்திச்சென்ற கும்பல் பற்றியும், அதில் இருந்தவர்களின் அங்க அடையாளம் பற்றியும் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், போலீசாருக்கு நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டது. கும்பல் தடுத்ததும் காரை வேகமாக ஓட்டிச் செல்லாமல் உடனே நிறுத்தியது ஏன்? என்று கேட்டனர்.
இதற்கு டிரைவர், அளித்த பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை பிடித்துச் சென்ற போலீசார் அவரை வேலையில் சேர்த்து விட்ட ஏஜெண்டு சுனில் என்பவரையும் பிடித்தனர். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
பாவனா கடத்தப்பட்டதற்கு காரணம் என்ன? முன் விரோதத்தில் இந்த சம்பவம் நடந்ததா? இதற்கு முன்பு பாவனாவிடம் டிரைவராக வேலை பார்த்தவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பிரபல நடிகை ஒருவரை மர்ம கும்பல் காருடன் கடத்திச் சென்று பாலியல் தொல்லைகொடுத்ததோடு, அவரை மிரட்டவும் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை பாவனா விரைவில் திருமணம் செய்ய விருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

“நடிகைகளுக்கு நல்ல படங்கள் அமைவது கஷ்டமாக இருக்கிறது” என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகை டாப்சி தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 என்று தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்தும் தற்போது அவருக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால் இந்திக்கு போய் விட்டார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. ராணாவுடன் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரான காஸி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
ரன்னிங் சாதி டாட்காம், தட்கா, நாம் ஷபானா, ஜாத்வா-2 ஆகிய இந்தி படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா உள்ளிட்ட நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். தனக்கு அதுபோன்ற நல்ல கதை அமையவில்லை என்ற ஆதங்கம் டாப்சிக்கு இருக்கிறது. இதுகுறித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-
“நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் அப்படிபட்ட கதைகள் கிடைப்பது அபூர்வமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறேன். தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறேன். ‘பிங்க்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
சமூகத்தில் பெண்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஈவ் டீசிங் தொல்லைகளால் அவர்கள் வாழ்க்கை எப்படி துயரங்களுக்கு ஆட்படுகிறது என்பதை இந்த படத்தில் நடித்தபோது உணர்ந்து கொள்ள முடிந்தது.
நகைச்சுவை படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுமாதிரி கதைகளை தேடினேன். தற்போது இந்தியில் நான் நடித்துக்கொண்டு இருக்கும் ரன்னிங் சாதி டாட்காம் படம் நகைச்சுவை கதையம்சத்தில் தயாராகி வருகிறது.
படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். தமிழ் படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்தால் நடிப்பேன்.”
இவ்வாறு டாப்சி கூறினார்.

“நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால், வாக்களித்த மக்களிடம் கருத்து கேட்டு மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் முன்பு முதலில் மனசாட்சியிடம் கருத்து கேட்க வேண்டும். அடுத்து உறவினர்களிடமும், பின்னர் தொகுதி மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும். ‘ஜெயலலிதா தான் வேட்பாளர் என்று கருதி ஓட்டு போடுங்கள்’ என நான் கூறினேன். நாளை (இன்று) நீங்கள் அளிக்கப்போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தொகுதிக்கு தான் செல்லப்போகிறீர்களே தவிர, கூவத்தூருக்கு அல்ல.
எனவே, சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.க்கள் செயல்படக்கூடாது. நிரந்தர அரசியல்வாதியாக இருக்க வேண்டுமா? அல்லது இடைப்பட்ட காலத்தில் அரசியல்வாதியாக இருந்துவிட்டு போய்விட வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
“எங்களுக்கு பதவி கிடைத்தால், 2 நல்ல காரியத்தை செய்து விட்டு தப்பித்துவிடுவோம். மக்கள் மறந்துவிடுவார்கள்” என எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனால் முன்புபோல் மக்கள் கிடையாது. இளைஞர்கள் வீறு கொண்டு நடக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் அனைத்து செய்திகளும் பரவுகின்றன.
இன்று உள்ள கொதிப்பு அனைவருக்கும் தெரிகிறது. செய்யக்கூடாதவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செய்கிறார்கள். உண்மையான அ.தி.மு.க. யார் என மக்கள் தான் கூற வேண்டும். அதிக பெண்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் வளர்மதியை யாருக்கு தெரியும்?. அவர் மக்களுக்கு மதிப்பளிப்பாரா? என்று தெரியவில்லை. என்னோடு அவரை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரச் சொல்லுங்கள். அவர் தற்போது எடுத்திருக்கும் முடிவுக்கு 10 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். 90 சதவீத மக்கள் அவர் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக இருக்கிறார்கள்.
வெளிப்படையாகவே சவால் விடுகிறேன். வளர்மதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர். நான் தனி மனிதன். அவர் ஒரு இடைத்தேர்தலை சந்திப்பாரா? என்று கேளுங்கள். தைரியம் இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வரட்டும். அப்படி வரும் தேர்தலில் சுயேச்சையாக நானும் நிற்கிறேன். அவரும் நிற்கட்டும். அவர் வெற்றி பெற மாட்டார். ஏனென்றால், மக்களின் மனநிலை அப்படி இருக்கிறது.
தேர்தலில் நிற்க வேண்டும். பதவியை அனுபவித்துவிட வேண்டும் என்ற சிறு சந்தோஷத்திற்காக அரசியல் அல்ல. நான் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக நானும் வாக்குகளை கேட்டிருக்கிறேன். நாளை (இன்று) ஒரு தினம், ஒரு நிமிடம் சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களியுங்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள். இது என் அன்பு வேண்டுகோள்.
இவ்வாறு நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

“வாழ்க்கையில் பிரச்சினைகளை கண்டு பயப்பட மாட்டேன். நான் தைரியமான பெண்” என்று காஜல் அகர்வால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“பிரச்சினைகள் எல்லோருக்கும் வரும். அதுபோல்தான் சந்தோஷமும். சிலர் கஷ்டத்தில் தடுமாறிப்போவார்கள். இன்னும் சிலரோ அதை படிக்கல்லாக்கி வாழ்க்கையில் மேலும் உயர்வார்கள். நான் இதில் இரண்டாவது ரகம். சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் சமமாக எடுத்துக்கொள்வதில்தான் நிஜமான மகிழ்ச்சியே இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன்.
இந்த உயரத்துக்கு எளிதாக வந்து விடவில்லை. நிறைய பிரச்சினைகளையும், போராட்டங்களையும் சந்தித்துத்தான் வளர்ந்து இருக்கிறேன். பிரச்சினைகள் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அது முதிர்ச்சியை கொடுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் கொடுக்கும். நான் வலிமையான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். அப்படி என்னை மாற்றியதற்கு நான் எதிர்கொண்ட பிரச்சினைகள்தான் காரணம். அதுதான் சினிமாவில் என்னை வலுவாக காலூன்றவும் வைத்து இருக்கிறது.
சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சில நேரம் சோர்வு மனநிலையில் இருக்கிறோம். சோர்வு மனநிலை நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தருகிறது. எந்த துறையாக இருந்தாலும் பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளிக்க தைரியம் வேண்டும். அப்படிபட்டவர்கள்தான் வாழ்க்கையில் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறேன். அதனால் எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது. என்னை மற்றவர்கள் அழகான புத்திசாலி என்று அழைக்கிறார்கள். குழப்பம் என்பது எனது வாழ்க்கை அகராதியிலேயே கிடையாது.
புத்திசாலித்தனமான முடிவுகளையே எடுக்கிறேன். பத்து வருடங்கள் தொடர்ந்து நடித்து விட்டேன். இனிமேல் நடிப்புக்கு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது. அதுபோன்ற கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''
என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,
"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.
அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.
"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.
உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.
நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.
மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.
அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.
சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.
சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.
மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.
படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.
என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.
அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.
நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்ïலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.
நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.
"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.
அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.
எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!
இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.
சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.
"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று
சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.
நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.
சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.
பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.