என் மலர்
விஷால் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் படத்திற்கு அஜித் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அது என்ன தலைப்பு என்பதை கீழே விரிவாக பார்பபோம்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படங்கள் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் `துப்பறிவாளன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பி.உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஷால் முதன்முறையாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து நடிக்கிறார்.
மேலும், ஹன்சிகா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், மஞ்ச வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு வில்லன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழில் அஜித் நடித்து 2002-ல் `வில்லன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதே தலைப்பில் மலையாளத்தில் விஷால் நடிக்கும் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ராக்லைன் நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நடிகர்கள் ஆர்யா, விவேக் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை வீடியோக்களும், மது அருந்தி நடனம் ஆடும் படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலரது பெயர்களை பதிவு செய்து இந்த படங்கள் வெளிவந்தன.
அமலாபால், பார்வதி நாயர் உள்பட மேலும் சில நடிகைகள் படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அறிவிப்பு வந்தது. இதனால் நடிகர்-நடிகைகள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த படங்களை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி டுவிட்டரை மூடிவிட்டு வெளியேறி விட்டார். ஆனாலும் அவரது பெயரில் புதிய டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகின்றன.

இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது:-
“நடிகர்-நடிகைகள் பெயரில் ஆபாச படங்களும் வீடியோக்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. விளம்பரம் தேடுவதற்காகவே இவற்றை வெளியிடுகிறார்கள். புதிய டிரென்ட்டாக மாறிவரும் இந்த கலாசாரத்தை தடுக்க வேண்டும். பிரபலமானவர்கள் பெயரில் வரும் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தும் போலியானவை.
எதிர்காலத்தில் இதுபோல் நிறைய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இது சமூகத்துக்கு நல்லது அல்ல”.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

நகைச்சுவை நடிகர் விவேக் கூறியதாவது:-
“அறிவுப்பெருவெளியாக இருக்க வேண்டிய பொது வெளி தற்போது காமக்கழிவிடமாய் மாறி வருகிறது. இது விபரீதம். தனி மனித ஆசாபாசங்கள் அவரவர் உரிமை. அவற்றை திருடி இணையத்தில் கொண்டு வந்து கொட்டுவது பெரும் வக்கிரம். இதை குழந்தைகளும், மாணவர்களும், குடும்ப பெண்டிரும் பார்க்கும் அவலம்.
உடனடியாக அரசு சைபர் கிரைம் உதவியுடன் இதை தடுக்கவும் நெறியாளவும் வேண்டும். இந்திய கலாசாரமே தாய்மை, பெண்மை போற்றுதல்தான். அதை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’.
இவ்வாறு விவேக் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விவகாரத்தில் உண்மையை கண்டறிவதற்காக உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் நடிகர் விஷால் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை பெங்களூருவில் உள்ள ஜெம் நிறுவனத்துக்கு வழங்கலாம் என்று பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கேபினட் குழு முடிவு செய்து அதற்கான அறிக்கையை பிப்ரவரி 15-ந் தேதி வெளியிட்டது.
மத்திய சுற்றுச்சூழல் மந்திரி இந்த குழுவில் இல்லாத நிலையில், அதற்கான அனுமதியை அந்த துறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து நெடுவாசல் மக்கள் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். அங்கு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக நிலத்தை மிக ஆழமாக தோண்ட வேண்டியதிருக்கும். இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அறிக்கையில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 20 கிணறுகள் தோண்டப்பட வேண்டும் என்ற தகவல் அதில் இடம்பெற்றுள்ளதே தவிர, புதுக்கோட்டை மாவட்டத்தில் என்ன சுற்றுச்சூழல் தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த கிணறு தோண்டுவதற்கு தண்ணீரும், சகதியும் பயன்படுத்தப்படும் என்றும், நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டேங்கர் லாரி மூலம் நீர் கொண்டுவரப்படும் என்று இருக்கிறதே தவிர, எங்கிருந்து பெறப்படும் என்ற விவரம் கூறப்படவில்லை. இதுவே அந்த மாவட்டத்தில் நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். நீர் ஆதார பாதுகாப்புக்கு எந்த வழியையும் ஏற்படுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, எப்படிப்பட்ட, எத்தனை வேலை தரப்படும் என்பதை குறிப்பிடவில்லை. குத்தாலம் உள்பட பல இடங்களில் இதுபோன்ற திட்டத்தின் காரணமாக நிலப்பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு விவசாயிகளுக்கு சொற்ப இழப்பீடே வழங்கப்பட்டது.
எனவே அந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் சேதம், தேவைப்படும் நீருக்கான ஆதாரம் ஆகியவை பற்றிய உண்மை கண்டறியும் உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு துறைகள், ஓ.என்.ஜி.சி., ஜெம் நிறுவனம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.
நெடுவாசலில் தோண்டப்பட்டுள்ள கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பதால் அந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி நம்பியார், பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கை ஏப்ரல் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்த உறுப்பினர்கள், இந்த மனுவுக்கு பதிலளிக்க ஓ.என்.ஜி.சி., ஜெம் நிறுவனம் உள்பட மத்திய அரசு துறைகளுக்கு நோட்டீசு பிறப்பித்து உத்தரவிட்டனர்.

ஜெய்-அஞ்சலி இருவரும் தற்போது பலூன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். அதனோடு அவர்களின் காதலும் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது. அதற்கு ஏற்ப இருவரும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்' படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார். இப்படத்திலும் ஜெய்-அஞ்சலி இணைந்து நடத்திருப்பதால் அவர்களை வைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளன. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர். குறிப்பாக தோசை சேலன்ஜ் போட்டியில் ஜெய் பங்கேற்றார். அதேபோல் அஞ்சலியும் தனது டுவிட்டர் பக்கத்தில் மனதிற்கு பிடித்தவரை தான் சந்தித்து விட்டதாகவும், கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவேன் என்றும் பகிர்ந்திருந்தார்.

ஜெய்யும் அதனை முன்மொழிவது போல தனது கருத்துக்களை தெரிவித்து வருவதால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், `பலூன்' படத்தில் அஞ்சலியின் பாகங்கள் அனைத்தும் படமாக்கப்பட்டுள் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி, "பலூன் படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்ததாகவும், கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் அருமையாக அமைந்ததாகவும் படக்குழுவை தான் மிஸ் பண்ணுவதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் டுவிட் போட்டுள்ள ஜெய், "படப்பிடிப்பு தளத்தில் நானும், படக்குழுவும் உன்னை மிஸ் பண்ணுகிறோம் அஞ்சு...." என்று கணிந்துள்ளார்.
ஜெய்யின் டுவிட்டுக்கு பதில் அளித்த அஞ்சலி, "நாம் மீண்டும் இணையும் தருவாயில் பல நியாபகங்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும், `பலூன்' படத்தை திரையில் காண ஆவலோடு காத்திருப்பதாகவும்" அஞ்சலி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களை கவுரப்படுத்தும் வகையில் `ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவின் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அது என்னவென்பதை விரிவாக பார்ப்போம்.
'ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' தயாரிப்பில், 'காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. இப்படத்தில் விதார்த் மற்றும் ரவீனா(டப்பிங் கலைஞர்) முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநராக டி கிராபோர்ட் பணியாற்றி உள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு, 'ஒரு கிடாயின் கருணை மனு' குழுவினர், தங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவிற்காக ஒரு குறும் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், 'ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு, ரஜினியின் வெற்றிப் படத் தலைப்பை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன தலைப்பு என்பதை கீழே பார்ப்போம்.
விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போ இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளமான பின்னி மில்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தனது 100-வது படமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில், விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், ரஜினி நடிப்பில் 1982-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `மூன்று முகம்' படத்தின் தலைப்பையே `விஜய் 61' படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புக்காக தமிழ் புத்தாண்டு வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.
"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.
இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.
கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.
அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.
அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.
ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.
அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.
நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.
"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.
"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.
இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-
"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''
- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.
நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.
"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.
எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.
"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.
அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி சமீபத்தில் அஜித்தை சந்தித்துள்ளார். இது அவரது மனைவிக்கு மிகப்பெரிய கோபத்தை கொடுத்துள்ளதாம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார்.
அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தாராம்.

அஜித்துடனான சந்திப்பு விஜய் சேதுபதிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள சமயத்தில், அவரது மனைவிக்கு பெரும் கோபத்தை கொடுத்துள்ளதாம். ஏனென்றால், விஜய் சேதுபதியின் மனைவி அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தை சந்திப்பதற்கு தன்னை அழைத்துப் போகாததுதான் அந்த கோபத்திற்கு காரணமாம். இருந்தும், கூடிய சீக்கிரத்தில் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் முடிவில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

பிரபல சிங்கப்பூர் நடிகர் ஒருவர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? எந்த படத்தில் நடிக்கிறார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி - சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். விண்வெளியை மையப்படுத்தி உருவாகிவரும் முதல் இந்திய படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு பிரம்மாண்ட பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரோன் அஜீஸ் ‘கே.எல்.கேங்ஸ்டர்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர். பல இந்தியப் படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புக்கொள்ளாத அஜீஸ் ‘டிக் டிக் டிக்’ படத்தின் திரைக்கதையை படித்ததும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆரோன் அஜீஸின் வருகை இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இப்படத்தை நேமிசந்த் ஐபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ளார்.

நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை என்று சுஜா வருணி கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
2002-ம் ஆண்டு தமிழ் பட உலகில் காலடி வைத்தவர் சுஜா வருணி. முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் இவருக்கு இன்னும் நாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலபடங்களில் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி சுஜா வருணி கூறும்போது,
நடிகர், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறோம். ஆனால் சில சமயம் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது இல்லை. எல்லா நடிகர், நடிகைகளும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். படத்தின் நேரத்தை மனதில் வைத்து கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகளை அதில் நடித்தவர்களிடம் கேட்காமலேயே கத்தரித்து விடுகிறார்கள்.

இதுபோல பலமுறை எனக்கு நடந்து இருக்கிறது. இன்னும் எனக்கும் பல நடிகர், நடிகைகளுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. காட்சிக்கு எது தேவை என்பது இவர்களுக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் ஏன் பணத்தையும், நடிகர்களின் திறமையையும் வீணாக படமாக்குகிறீர்கள்.
வளர்ந்து வரும் நடிகைகள் கவுரவ தோற்றத்தில் நடிப்பது வீண். கவுரவ தோற்றம் எல்லாம் பிரபலமான நடிகர்களுக்குத்தான் சரி. இதுபோன்ற விஷயங்கள் வளரும் நடிகர்களை காயப்படுத்துகிறது. பாடம் கற்றுக் கொண்டேன். விரைவில் ஜெயிப்பேன். யாரும் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலனுக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையான ‘குழலோசை’ நடத்திய விழாவில் நடிகர், நடிகைகள் பங்கேற்று சிறப்பித்தனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
அனாதை குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இவர்களை பாதுகாப்பதற்காக சமூக நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் குழலோசை அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையை எம்.ராஜேஷ் என்பவர் உருவாக்கினார். இதன் நிர்வாகிகளாக வி.கோபாலகிருஷ்ணன் (செயலாளர்), ஜே.ராஜேஷ் (பொருளாளர்) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
சென்னையை அடுத்துள்ள பாடியில் இந்த அறக்கட்டளை சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் உதவி வருகிறார்கள். இந்த அறக்கட்டளையின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இசைக்கச்சேரி, ஆடல் பாடல், பாட்டு போட்டி, நடனப் போட்டி, மிமிக்ரி என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலம் வரும் நன்கொடை தொகையில் நிதி சேர்த்து நடத்தி வருகிறார்கள்.

சென்ற ஆண்டு இதேபோன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் சமீபத்தில் மியூசிக் அகாடமியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ‘டார்லிங் 2’, ‘விதிமதி உல்டா’ படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா தலைமை தாங்கி ரூ.1 லட்சம் நன்கொடையாக ‘குழலோசை’ அறக்கட்டளைக்கு வழங்கினார். விழா நிகழ்ச்சியை நடிகர் ரமீஸ் ராஜாவின் துணைவியார் ஜெனீபர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
நடிகர்கள் கலையரசன், மைம் கோபி, அஸ்வின், ஷிரிஷ், சந்தோஷ் பிரதாப், சென்ராயன், காளி வெங்கட், நடிகை மாயா, இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, சதீஷ் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

சுசித்ரா, திரிஷாவுக்கு ஏற்பட்டதுபோல் மடோனா செபஸ்டியானுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்பபோம்.
நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை தொடங்கி, அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்மை என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் அவர்களுக்கு எதிராக திரும்பக்கூடிய நிலைமையும் ஒருசில நேரங்களில் நேர்ந்துவிடுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் சூடுபிடித்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, திரிஷாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. திரிஷாவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.

கடைசியில், திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர் ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாகவும், அதில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த கருத்துக்களை திரிஷா பதிவு செய்யவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இதன்பிறகே, திரிஷா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது.
அதேபோல், தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிவந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்தது. இறுதியில் பார்த்தால் அவருடைய டுவிட்டர் பக்கமும் யாரோ ஒருவரால் ஹேக்கிங் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, அந்த பக்கம் தற்போது மூடப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது இதேபோன்ற பிரச்சினையில் மடோனா செபஸ்டியானும் சிக்கிக் கொண்டுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹேக்கிங் செய்துவிட்டதாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹேக்கிங் செய்தவர் இதுவரை அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான பதிவும் போடவில்லை என்பது சந்தோஷமான ஒன்று. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மடோனா செபஸ்டியான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தவறான கருத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார்.