என் மலர்
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டதாக நடிகை தன்ஷிகா கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.
'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா, எஸ் பி சரண், ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து தன்சிகா கூறியதாவது,
`கபாலி' படத்தை போல `விழித்திரு' படத்திலும் தன்னுடைய பாத்திரம் பேசப்படும் படி இருக்கும் என்றார். இப்படத்தில் சென்னையில் உள்ள குப்பத்தில் வாழும் பெண்ணாக தான் நடித்திருப்பதாக கூறிய தன்ஷிகா, அதற்காக குப்பம் பகுதியில் வாழும் மக்களிடம் இருந்து அவர்களது வாழ்க்கை, அனுபவம் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொண்டு பின்னரே நடித்தேன் என்றார். மேலும் இப்படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகையாக தான் நடித்திருப்பதாகவும், அவருடைய வலிமை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்த தன்ஷிகா, குறிப்பாக அவரது கொள்கையை தான் விரும்புவதாக தெரிவித்தார்.

அதாவது நான் பார்த்த வரையில், படங்களில் அவர் நடிக்கும் போதும், பாடல்களிலும் பெண்களை தொட்டு நடிப்பது போன்ற காட்சிகளை அவர் தவிர்த்திருப்பார் என்று கூறினார். இப்படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றார். தண்டனைகளை அதிகமாக்குவதன் மூலமே குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறிய தன்ஷிகா ஒருமுறை தான் இரவு நேர படப்பிடிப்பு முடித்து திரும்பிய போது, கேரளாவில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினார்.

குடித்துவிட்டு வந்த மர்ம நபர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அவர்களிடம் இருந்து தன்னை சிலம்பாட்டத்தின் மூலமே காப்பாற்றிக் கொண்டதாகவும் கூறினார். `பேராண்மை' படத்தின் போது தான் சிலம்பாட்டம் கற்றுக்கொண்டதாக தன்ஷிகா தெரிவித்தார். எனவே பெண்கள் அவர்களது இக்கட்டான சூழலில், அவர்களை காப்பாற்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தன்ஷிகா வலியுறுத்தி உள்ளார்.

தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரிய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இருதரப்பினரும் தனுஷ் பெயரிலான பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

அதன்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானபோது, அவருடைய உடலில் அங்க மச்ச அடையாளங்களை டாக்டர்கள் குழுவினர் சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே தனுஷுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று மேலூர் தம்பதி சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மாலை 6 மணிக்கு மேல் நீதிபதியின் அறையில் விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி அறையில் மேலூர் தம்பதி மற்றும் தனுஷ் தரப்பு வக்கீல்கள் ஆஜரானார்கள். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடம் விசாரணை நடந்தது. பின்னர் இந்த வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பெண் கல்வியை வற்புறுத்தும் ‘இலை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
லீப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளபடம் ‘இலை’. இது ஒரு பெண் தனது கல்வியில் சாதிக்கத் தடைகளைத் தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் கதை.
சுவாதி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடிக்கிறார். இவர்களுடன் கன்னட நடிகர் கிங்மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா நடித்துள் ளனர். ஒளிப்பதிவு - சந்தோஷ் அஞ்சல், இசை- விஷ்ணு வி.திவாகரன், வசனம் -ஆர்.வேலுமணி, கலை -ஜைபின் ஜெஸ்மஸ், எடிட்டிங் - டிஜோ ஜோசப். இயக்கம்-பினிஷ்ராஜ்.

“இது 1991-ல் நடக்கும் கதை. அந்த ஊரில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. அந்த ஊரில் வசிக்கும் நாயகிக்கோ படித்து வாழ்வில் உயர வேண்டும் என்பது கனவு. ஆனால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? என்று பெற்ற தாயும், தாய் மாமனும் அவளது படிப்புக்கு குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் நாயகியின் அப்பா, மகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.

நாயகிக்கு வருகிற தடைகள் அவள் தேர்வு எழுத முடியாத அளவுக்குக் குறுக்கே நிற்கின்றன. தடைகளை மீறி அவள் தேர்வு எழுதினாளா, இல்லையா என்பதே கதை. இதில் ஒரு முழு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அப்படி ஒரு வணிக ரீதியிலான படமாக ‘இலை’ உருவாகியுள்ளது” என்றார்.

சந்தீப் கிஷன், ஸ்ரீ-ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள மாநகரம் படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ்... இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மாநகரம். சந்தீப் கிஷன் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, எந்த வேலைக்கும் போகாமல் நாயகி ரெஜினாவையே பின்தொடர்ந்து வருகிறார். ஐடி கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கும் ரெஜினாவுக்கு, சந்தீப் மீது பிரியம் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். சந்திப் கிஷன் ‘சத்யா’ படத்தில் கமல் கதாபாத்திரத்தை போன்று மிகவும் துணிச்சலானவர். எந்த விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நினைத்தால் அதை தில்லாக செய்யக்கூடியவர்.
இவர்களுடைய கதை இப்படியாக பயணித்துக் கொண்டிருக்கும், ரொம்பவும் நேர்மையான ஸ்ரீ, திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார். ரெஜினாவின் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு செல்லும், அவருக்கு அங்கேயே வேலையும் கிடைத்து விடுகிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஸ்ரீ, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டி முடிந்து வெளிவரும்போது, ரவுடிகளிடம் ஏற்பட்ட கைகலப்பில், ஸ்ரீ தன்னுடைய ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாவற்றையும் இழக்கிறார். இதை கண்டுபிடித்து திரும்பி அந்த வேலைக்கு சேர்வதா? அல்லது வெறும் கையுடன் ஊருக்கு திரும்புவதா? என்ற குழப்பத்தோடு சென்னையிலேயே சுற்றி வருகிறார்.

இன்னொரு பக்கம், சார்லி தனது 8 வயது பையனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்க்கிறார். சென்னையிலேயே பெரிய தாதாவாக இருக்கும் மதுசூதனனிடம் வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். அதிலேயே தனது மகனின் வைத்திய செலவையும் ஈடுகட்டும் முயற்சியில் இருக்கிறார்.
மற்றொரு பக்கம் ரொம்பவும் அப்பாவியான ராம்தாஸ், பணம் சம்பாதிப்பதற்காக ரவுடி கும்பலிடம் சேர்கிறார். அவர் மிகவும் திறமைசாலி என்று ஒருவரின் அறிமுகத்தோடு ரவுடிகளிடம் வேலைக்கு சேர்கிறார். இவரை வைத்து ஒரு பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தையை கடத்திவர சொல்கிறார்கள். இவர் கடத்தி வரச்செல்லும் பையனின் பெயரில் நிறைய பேர் அந்த பள்ளியில் இருப்பதால், இவர் கடத்திவரும் பையனுக்கு பதிலாக மதுசூதனன் பையனை கடத்தி வந்துவிடுகிறார்.

இந்த பையனை கடத்திய சம்பவத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ் என நான்கு பேருமே பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் சந்தீப் கிஷனுக்கு ரொம்பவும் துணிச்சல் மிக்க கதாபாத்திரம். தன்னுடைய தோற்றத்திலேயே அனைவரையும் ரசிக்க வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும் ரொம்பவும் வழிந்து நடிக்காமல், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வரும் என்று நம்பலாம்.
இதுவரை வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரீக்கு இப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களம்தான். தன்னுடைய கதாபாத்திரத்தில் எந்த இடத்திலும் மிகையான நடிப்பை கொடுக்காமல் அழகாகவும், நேர்த்தியாகவும் தனது கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். ஐ.டி. பையனாக அழகாக அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் நகரும் கதையின் ஊடே, வரும் ராமதாஸின் காமெடி படத்தின் சுவாரஸ்யத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பது சிறப்பு. இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கலகலப்பாகிவிடுகிறார்கள். தனி ஒரு ஆளாக இப்படத்தின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
ஐடி கம்பெனியில் பணிபுரிபவராக வரும ரெஜினா, தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை ரொம்பவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சார்லியும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

இந்த படத்தை கதையாக விவரிக்கமுடியாது. ஆனால், முழுக்க முழுக்க திரையரங்கில் அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இதை கொடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை அமைத்து, அழகான திரைக்கதையில் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டே நாட்கள் நடக்கிற கதைதான். படத்தில் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்.
படத்தில் காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றையும் சமமாக வைத்து, சமார்த்தியமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக, ராம்தாஸ் கதாபாத்திரத்தை விறுவிறுப்பிற்கு நடுவிலும், நகைச்சுவையுடன் கொண்டு போயிருப்பது படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது. முதல் படத்திலேயே தனது அழகான திரைக்கதையால் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்களை சுற்றி நகரும் நிகழ்வுகளை படமாக்கியிருந்தாலும், எங்கேயும் குழப்பம் வராமல், படம் பார்க்கும் ரசிகனுக்கு ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார். படம் ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து, இறுதியில் விறுவிறுப்பாக சென்று முடிகிறது. டைட்டில் கார்டு போடும்போது வரும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
செல்வகுமாரின் ஒளிப்பதிவில் நிறைய காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாகியிருப்பதாலும், ரசிகர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கதைக்கு தேவையான ஒளியமைப்பை வைத்து கைதட்டல் பெறுகிறார். விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவருடைய கேமராவும் அழகாக கைகொடுத்திருக்கிறது.
ஜாவித் ரியாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். டைட்டில் கார்டில் அனிமேஷனோடு வரும் பாடல் சிறப்பு. மற்றபடி, பிற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங், கதையின் விறுவிறுப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருக்கிறது.
மொத்தத்தில் ‘மாநகரம்’ புதுமையானது.

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "களத்தூர் கண்ணம்மா'' (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.
இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-
"ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது, "அன்னை வேளாங்கண்ணி'' படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, "என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.
"நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!'' என்றேன்.
உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். "ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!'' என்றார், பாலசந்தர்.
உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, "இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?'' என்று கேட்டார்.
பாலசந்தர், "எனக்கு கண் தெரியவில்லையே!'' என்றார். ஒரே சிரிப்பு.
இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.
சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். "அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்'' என்று கூறி ஆள் அனுப்பினார்.
அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.
"கமலஹாசன் ஒரு ஆக்டர்'' என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.
நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு... இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த "ஆய்னா''வில் (இந்தி "அரங்கேற்றம்'') கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்.... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.
அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.
எனக்கு வந்த கடிதங்களில் "பொக்கிஷம்'' என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.
நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து "இங்கேயே படி'' என்றார். அந்தக் கடிதம்:-
எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.
கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.
வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!
வாழ்த்துக்களுடன்
அன்பன்,
கே.பாலசந்தர்.''
இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.
மற்றொரு கடிதம்: "பதினாறு வயதினிலே'' படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் "மை டியர் ராஸ்கல்'' என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.
அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் "திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கே.பாலசந்தர்'' என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.
"என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்'' என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.''
இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கியது குறித்து ராகவா லாரன்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதை கீழே பார்ப்போம்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்கு முன்பு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அவர் கொடுத்திருந்தார்.
உண்மையிலேயே இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் இல்லை என்றே நான் நம்புகிறேன். சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும். அதுவும் நம்முடைய தலைவர் ரஜினிகாந்த் தான். நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். என்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். ராகவேந்திரா சுவாமியை நான் அவர் உருவத்தில் காண்கிறேன். நான் அவருக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். என்றுமே அவருடைய ரசிகனாகவே இருப்பேன்.

எனது பெயருக்கு முன்னால் நானே எனக்கு ஒரு அடைமொழி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இனிமேல், எனது நடிப்பில் வெளிவரும் படங்களில் எனது பெயர் ‘கண்மணி ராகவா லாரன்ஸ்’ என்றே திரையில் வரும். என்னுடைய தாயின் பெயரை என்னுடைய பெயருக்கு முன்னால் வைப்பதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. இதற்கு எந்த அடைமொழியும் நிகராகாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவுக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாவனாவின் இந்த துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பாவான விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பாவனாவுக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, ‘தீபாவளி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர்., அனிருத்தை தொடர்ந்து சிம்புவுக்காக அவரது அம்மா ஒரு விஷயத்தை செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் எடுத்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாவது இந்த படத்தில்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய இசையில் இந்த படத்திற்காக சிம்பு 5 பாடல்களை அமைத்துள்ளார். அதில் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். சந்தானம் படத்தில் அறிமுகமாகும் பாடலைத்தான் அனிருத் பாடியுள்ளார். அதைத் தொடர்ந்து யுவன் ‘காதல் தேவதை’ என தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல பின்னணி இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

மேலும், இரண்டு பாடகர்களையும் சிம்பு இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் கீர்த்தனா ஆகிய இரண்டு பேரையும் இந்த படத்தில் தனித்தனி பாடல்களாக பாடவைத்துள்ளார்.
இதில் ஹைலைட்டாக தனது பெற்றோரான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோரையும் இப்படத்தில் பாட வைத்துள்ளார். ‘வா முனிமா வா’ என தொடங்கும் பாடலை இருவரும் சேர்ந்து பாடியுள்ளார். டி.ராஜேந்தர் ஏற்கெனவே பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும், உஷா டி.ராஜேந்தர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடல் பாடியுள்ளார். அவர் ஏற்கெனவே ‘தாய் தங்கை பாசம்’ படத்தில் ‘உட்டாலக்கடி அம்மா’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல், கொள்ளையடிப்பவர்களிடம் கமிஷன் வாங்குவதும், கொலை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதுமாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், ஒருநாள் டிவி ரிப்போர்ட்டராக வரும் நாயகி நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். தனது தங்கையான நிக்கி கல்ராணிக்கு போலீஸ் அதிகாரியைத்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் தேவதர்ஷினியையும் சந்தித்து, தனது காதலுக்கு ஓகே வாங்குகிறார்.

இந்நிலையில், அரசியலில் மிகப்பெரிய புள்ளியான அசுதோஸ் ராணாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ். அசுதோஸ் ராணா அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்து வருகிறார். இதற்கிடையில், தனது தம்பியான வம்சி கிருஷ்ணாவையும் அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் வம்சி கிருஷ்ணா போதையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அதை பார்க்கும் வாய்பேச முடியாத ஒரு பெண், அந்த பெண்ணை காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால், வம்சி கிருஷ்ணாவோ ஐடி பெண்ணை விட்டுவிட்டு, வாய் பேசமுடியாத அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விடுகிறார்.
தனது அரசியல் பலத்தால் இந்த வழக்கிலிருந்து தனது தம்பியை வெளியே கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்கிறார் அசுதோஸ் ராணா. ஆனால், சத்யராஜோ அசுதோஸ் ராணாவை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துவிட வேண்டும் நினைக்கிறார். அதற்கு, லாரன்சின் உதவியை நாட நினைக்கும் சத்யராஜுக்கு லாரன்ஸ் தன்னுடைய மகன் என்பது தெரிய வருகிறது.

சிறுவயதில், சத்யராஜ் பணியில் ஈடுபாடு காட்டியதன் விளைவால் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது. இதை அருகில் இருந்து பார்த்த ராகவா லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறை அதிகாரியாக உருவெடுத்து, தனது அப்பா பணியாற்றிவரும் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டும் என்ற நினைப்போடு வந்திருப்பது சத்யராஜுக்கு தெரிய வருகிறது.
எனவே, சத்யராஜ், உடனடியாக ராகவா லாரன்ஸை சந்தித்து, அன்று தனக்கு நேர்ந்த நிலைமையை புரிய வைக்கிறார். இதனால், சத்யராஜ் மீதிருந்த தவறான அபிப்ராயம் ராகவா லாரன்ஸ் மனதில் மறைய ஆரம்பிக்கிறது. அதன்பிறகு, இறந்த அந்த பெண்ணிற்கு நீதி தேடி புறப்படுகிறார்.
இறுதியில், அதற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோருடன் இணைந்து இவருடைய காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. பிற்பாதிக்கு பிறகு ஆக்ஷனில் களமிறங்கி மாஸ் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்திருக்கிறார். இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.

நிக்கி கல்ராணி, அழகு பதுமையாக வந்து போயிருக்கிறார். ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஏனோ, அந்த கதாபாத்திரத்தோடு இவரை ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை. ராகவா லாரன்சுடன் சேர்ந்து ஆடும்போதும் கொஞ்சம் திணறியிருக்கிறார். மற்றபடி, அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோரின் காமெடி படத்தில் ஓரளவுக்குத்தான் எடுபட்டிருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், கம்பீரமான தோற்றம், சாந்தமான முகம் என ரசிக்க வைக்கிறார். வில்லனாக வரும் அசுதோஸ் ராணா, இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வம்சி கிருஷ்ணா சமீபகாலமாக அவர் நடித்த படங்களிலிருந்து இதில் மாறுபட்டு தெரிகிறார்.
இயக்குனர் சாய் ரமணி, முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் முதல்பாதியில் காவல்துறையையும், பத்திரிகையாளர்களையும் கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் காமெடியாக கொண்டுபோக முயன்றிருக்கிறார். அந்த காமெடியெல்லாம் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆனால், பிற்பாதியில் ஆக்ஷன் என களமிறங்கியதும் படம் விறுவிறுப்படைகிறது. ராகவா லாரன்ஸுக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மேலும் சிறப்பு. சண்டை காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு ரொம்பவும் உதவியிருக்கிறது.

அம்ரீஷ் கணேஷ் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அறிமுக பாடலில் ராகவா லாரன்ஸ் ஆடும் ஆட்டம் ரசிகர்கள் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல், ‘ஹர ஹர மகாதேவி’ பாடலுக்கு ராகவா லாரன்ஸும், ராய் லட்சுமியும் போட்ட குத்தாட்டம் தியேட்டரில் விசிலை பறக்க விட்டிருக்கிறது. பின்னணி இசையிலும் அம்ரீஷ் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எல்லாம் பளிச்சிடுகிறது. சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. சாதாரண காட்சியைக்கூட இவரது கேமரா ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஒருமுறை தரிசிக்கலாம்.

அமீர் இயக்கி வரும் `சந்தனத்தேவன்' படத்தில் நடிக்க இனியா மறுத்ததாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு அமீர் ஆர்யாவை வைத்து `சந்தனத்தேவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா, சத்யா, அமீர் மூவரும் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கின்றனர். இப்படத்தை அமீரின், அமீர் பிலிம் கார்பரேசன்(ஏஎப்சி) நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் நடிக்க இனியாவிடம் கேட்கப்பட்டது. அவரும் நடிக்க சம்மதித்து நடிப்பதாக இருந்தது. அந்த வேடத்தில் நடிக்க உடல் கொஞ்சம் குண்டாக இருக்க வேண்டும் என்று அமீர் கேட்டுக் கொண்டார். உடலை குண்டாக்கினால் மெலிவது சாதாரண விஷயம் அல்ல என்று யோசித்த இனியா, அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு வேறு கதாநாயகியை அமீர் தேடி வருகிறார்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் மக்கள் சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கும் ராகவா லாரன்ஸ். அது எப்படி என்பதை கீழே பார்ப்போம்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பல்வேறு தடைகளை தாண்டி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படத்திற்கு திரையரங்கிலும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கான தனி அமைப்பு, இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆதரவற்றோர்களுக்கு காப்பகம் என மக்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.
ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனி அடைமொழி வைத்து அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் வரிசையில் லாரன்ஸ் தற்போது மக்கள் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாய் ரமணி இயக்கியுள்ள இப்படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், அசுதோஷ் ராணா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நித்யா மேனன் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது.

தலைப்பு வைக்கப்படாமலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதில் 80-களில் உள்ளது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிக்காக விஜய் முறுக்கு மீசையுடன் வரும் விஜய், ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதில் விஜய் அப்பாவாகவும் இரண்டு மகன்களாகவும் 3 வேடங்களில் நடிக்கிறார். இவர்களில் அப்பா விஜய்யின் ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.