என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்று நினைத்த நான் சுதா கொங்காரா மூலம் தமிழ் பெண்ணாக மாறி வருவதாக ரித்திகா சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    ‘இறுதிச் சுற்று’ படத்தில் அறிமுகமான ரித்திகா சிங் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து  செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ரித்திகாசிங்...

    என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள், `இறுதிச்சுற்று'  இயக்குனர் சுதா கொங்கரா என்ற தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றிவிட்டார். நான் இப்போது என்னை  தமிழ்பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதற்காக, தமிழ் கற்று மற்றவர்களிடம் முடிந்த அளவு தமிழ் பேசி வருகிறேன்.  இப்போது, தமிழை நன்றாக புரிந்து கொள்கிறேன். நான் திக்கித் திணறி பேசுகிறேன். விரைவில் தமிழை முழுமையாக பேச  கற்றுக்கொள்வேன்.



    தமிழ் கலாச்சாரத்தின் மீது எனக்குபெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பழைய தமிழ் படங்கள் நிறைய பார்க்கிறேன். அதில் கிராமத்து  படங்களில் வரும் பாவாடை-தாவணி அணிந்த பெண்களைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களைப் போல வாழ  முடியாவிட்டாலும், சினிமாவில் பாவாடை-தாவணி அணிந்து நடிக்க விரும்புகிறேன். அந்த அளவு தமிழ் நாட்டு மக்களும், இந்த  ஊரும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    ‘இறுதிச்சுற்று’ படம் என்னை தேசிய விருது வரை கொண்டு சென்றது. எனவே எனது கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன்”  என்றார்.
    8 தோட்டாக்கள் படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். இதுகுறித்து நாசர் அளித்த விரிவான பேட்டியை கீழே பார்ப்போம்.
    இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ள படம் '8 தோட்டாக்கள்'. வெற்றிவேல் சரவணா சினிமாஸ்  சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்- ஐபி கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி  கதாப்பாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா  மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    படத்தின் இசை உரிமையை `யு 1 ரெகார்டஸ்' நிறுவனம் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கியிருப்பதால் இப்படத்தின் மேலான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. இதுகுறித்து நடிகர் நாசர் கூறுகையில்,
     
    இளம் திறமையாளர்களால் தமிழ் திரையுலகமே தற்போது நிரம்பி கொண்டிருக்கின்றது. விரைவில் அந்த வரிசையில் இணைய  இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அவர் என்னிடம் இந்த கதையை கூறும் போது, அவர் மேல் எனக்கு முழு நம்பிக்கை  வரவில்லை. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் படக்குழுவினரை கையாண்ட விதம் என்னை முழுவதுமாக வியப்பில்  ஆழ்த்திவிட்டது. எம் எஸ் பாஸ்கர் நடித்த ஒரு காட்சியை பார்த்து விட்டு நான் மெய் சிலிர்த்து போய்விட்டேன். அவரின் இந்த ஒரு  காட்சிக்கு எம்எஸ் பாஸ்கர் நிச்சயமாக தேசிய விருதை பெறுவார் என்று நாசர் கூறினார்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெருமëபுதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    தனது மேனேஜரால் தனது லீலைகள் எதுவும் வெளிவந்துவிடுமோ? என்ற பதட்டத்தில் ஒரு நடிகை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    சமீபத்தில் பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட திரையுலக பிரபலங்களின் லீலைகள் தமிழ்சினிமாவையே கதிகலங்க வைத்தது. தற்போது ஒரு நடிகை அவருடைய மேனேஜர் மூலமாக தன்னுடைய லீலைகள் வெளியாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவுக்கு பப்ளியான ஜுலியட் நடிகைதான் அவர். தன்னுடைய அம்மாவுடன் பிரச்சினையால் தான் நடிக்கும் படம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் மேனேஜரை நம்பி கொடுத்தார். எந்த நேரத்தில் தன்னுடைய மேனேஜரிடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்தாரோ, நடிகைக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படமும் அமையவில்லை.



    இந்நிலையில், தன்னுடைய மேனேஜரை மாற்றிவிட நினைத்த நடிகைக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம் காதுக்கு வந்துள்ளதாம். அதாவது, அந்த மேனேஜர், பப்ளி நடிகை அவ்வப்போது விளையாடிய சிறு சிறு விளையாட்டுக்களை எல்லாம் வீடியோ எடுத்து வைத்திருக்கிறாராம். அந்த லீலைகளை தற்போது வெளியிடப் போகிறேன் என்று அந்த மேனேஜர் நடிகையை மிரட்டுகிறாராம். இதனால், நடிகை மிகவும் பதட்டத்தில் இருக்கிறாராம். 
    இந்த வருட இறுதிக்குள் தனக்கு திருமணம் நடக்கும் என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதை கீழே பார்ப்போம்.

    பிரபல நடிகை பாவனா ‘ஹனிபீ-2’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக நடிகை பாவனா முதலில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அதன்பிறகு அதிலிருந்து அவர் மீண்டு தனது இயல்பு நிலைக்கு மாறினார். இதை தொடர்ந்து அவர் ‘ஹனிபீ-2’ படத்தில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும் தனது காதலரும் கன்னட சினிமா தயாரிப்பாளருமான நவீனுடன் நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

    இதற்கிடையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ‘ஹனிபீ-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று உள்ளது. இதுபற்றி நடிகை பாவனா ஒரு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-


    எனது வாழ்க்கை எதையெல்லாம் தரப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன். மன நிம்மதியாகவும் உள்ளேன். எனது புதிய படமான ‘ஹனிபீ-2’-க்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவு எனக்கு சந்தோ‌ஷத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் திருமணத்திற்கு முன்பு 2 மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து கொடுத்துவிடுவேன்.

    எனது திருமண ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. எங்கள் இருவீட்டாரின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து இந்த ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் எங்கள் திருமணம் நடைபெறும். நிச்சயதார்த்திற்கு நிறைய பேரை அழைக்கவில்லை. ஆனால் திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பேன். திருமணத்திற்கு பிறகு நான் பெங்களூரில் வசிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாதனை படைத்த மாணவி ஒருத்திக்கு விஜய் சர்ப்ரைஸான ஒன்றை கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4-வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதில் வென்றதன் மூலம் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017’ ல் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றரை வயதுள்ள ஏ.பி.நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை நடிகர் விஜய்யிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர்.



    இதையறிந்த விஜய், நேத்திரா மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர்களையும், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து மனமார பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து ஊக்குவித்தார். 
    மகாபாரதத்தை அவமதித்ததாக தமிழகத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடகத்திலும் அவருககு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
    அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பின.

    இதைத்தொடர்ந்து, வள்ளியூர், கும்பகோணம் ஆகிய நீதிமன்றங்களில் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக இந்து அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை விரைவாக தொடங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.



    இந்நிலையில், பெங்களூரிலும் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரணவநந்தா என்ற சாமியார், பெங்களூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், விரைவில் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த புகார்களை தொடர்ந்து கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
    விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் சிம்பு இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நடிகராக இருந்தபோதும் அஜித் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் பிரச்சினையின்போது விஜய் தலையிட்டு அந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வழிவகுத்தார்.

    அன்றுமுதல் விஜய் - சிம்புவின் நெருக்கம் அதிகமாகியுள்ளது. விஜய்யை தனது அண்ணன் என்று குறிப்பிட்டு வரும் சிம்பு, அதேவேளையில், தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்று ஒருபக்கம் கூறி வருகிறார். இந்நிலையில், விஜய்யும் சிம்புவும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    அதாவது, சிம்பு ஒரு நடிகராக இல்லாமல் அவ்வப்போது நட்பு அடிப்படையில் மற்ற நடிகர்களின் படங்களுக்கு பாடலும் பாடி வருகிறார். தற்போது நண்பர் சந்தானத்துக்காக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார். இந்நிலையில், விஜய் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.

    ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் சிம்பு இசையமைக்கப்போகிறார் என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விஜய் - சிம்பு ரசிகர்கள் இந்த செய்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். 
    விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்துக்காக தணிக்கை குழுவை விமர்சித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கை குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ். துருவங்கள் பதினாறு, மாநகரம் படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் ‘யு’ சான்றிதழ். சென்சார் போர்டு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.



    நயன்தாராவும்-விக்னேஷ்சிவனும் காதலர்களாக வலம் வந்துகொண்டிருப்பதாக கோலிவுட் ஒரு செய்தி பரவி வருகிறது. இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு பேரும் தாங்கள் காதலர்கள்தான் என்பதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள்தான் அவர்களின் நெருக்கத்தை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது.
    சமுத்திரகனி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘அப்பா’ படத்தின் மலையாள ரீமேக்கில் வரலட்சுமி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி.இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் ‘அப்பா’.  பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார்.  இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி. ‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.



    இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அப்பாவில் நடித்த யுவலட்சுமி, நஷாத் உள்பட பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இயக்கம் சமுத்திரக்கனி
    இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 10-ந் தேதி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு தமிழர்களுக்கு வீடு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பவே ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

    ரஜினியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த லைக்கா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து லைக்கா நிறுவனம் சார்பில் கூறும்போது, எங்களது திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணத்தில்தான் வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம்.

    ரஜினியின் வருகையின்போது பல்வேறு நலத்திட்டங்களையும் தொடர இருந்தோம். இருப்பினும், திட்டமிட்டபடி ஏப்ரல் 10-ந் தேதி தமிழர்களுக்கு வீடுகளை வழங்கும்போம். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அரசியல் தலைவர்களுக்கு நன்றி. இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் பாடுபட வேண்டும்.



    தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பியே ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை அரசியல்வாதிகளும் ஆதரிக்கின்றனர். ராஜபக்சேவுக்கும் எங்களுக்கும் தொழில் தொடர்பு இருப்பதாக கூறுவதெல்லாம் வெறும் வதந்திதான்.

    தொழில் போட்டியாளர்களும் எங்களுக்கு எதிராக கட்டுக்கதைகளை சொல்லி வருகின்றனர். அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்ததில்லை என்று தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.

    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    ×