என் மலர்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் பிரம்மாண்டம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொண்டே செல்கிறது. அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து கீழே பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 2.ஓ. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினி 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கெனவே எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, வசீகரன் என்ற இரண்டு கெட்டப்புகளில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து வில்லத்தனமான ஒரு கெட்டப்பிலும் ரஜினி இப்படத்தில் வருகிறாராம். அதுமட்டுமில்லாம், ‘அபூர்வ சகோதரர்கள்’ குட்டை கமல் மாதிரி இரண்டு கதாபாத்திரங்களும் ரஜினிக்கு இருக்கிறதாம்.

ரஜினி 5 கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றால், அவருக்கு போட்டியாக அக்ஷய்குமாருக்கும் இந்த படத்தில் 12 விதவிதமான லுக்கில் வருகிறாராம். ஏற்கனெவே, பறவை போன்ற ஒரு உருவத்தில் அவருடைய தோற்றத்தை போஸ்டராக வெளியிட்டிருந்தனர். அதோடு சேர்ந்து மொத்தம் 12 லுக்கில் இந்த படத்தில் அக்ஷய்குமார் வருவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், ஏமி ஜாக்சனுக்கும் இரண்டு கெட்டப்புகள் உள்ளதாம். அதில் ஒன்றுதான் ரோபோ கெட்டப்பாம். இப்படியாக, படத்திற்கு மேலும் மேலும் பிரம்மாண்டம் கூடிக்கொண்டே போவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆசியா கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்டங்கள் எல்லாம் ரசிகர்களை எந்தளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்போம்.
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். இது உலகின் ‘டாப்-10’ டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது.
‘பாகுபலி-2’ படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரபல இந்தி டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி இருக்கும் ‘பாகுபலி-2’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும் நவீன தொழில்நுட்பமான ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோணத்தில் பார்க்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

யுடியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பான இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடிந்தது. அடுத்து சென்னையில் ரஜினி பங்கேற்கும் ‘பாகுபலி-2’ பாடல் வெளியீட்டு விழாவிலும், இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நயன்தாராவின் அப்பாவாக நடித்தவர் பிரபுதேவா படத்தில் நடிக்கிறார். அவர் யார்? என்ன படம்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
‘தேவி’ படத்திற்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. இப்படத்தை 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அர்ஜுன் இயக்குகிறார். கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், ‘பாகுபலி காலக்கேயா’ பிரபாகர், கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயண மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார். இப்படத்தில் லட்சுமிமேனனின் அப்பாவாக இவர் நடிக்கிறார்.

சித்ரா லட்சுமணன் ஏற்கெனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

நயன்தாராவை புகழ்வது ஏன் என்பதற்கு நடிகர் ஹரிஷ் உத்தமன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை கீழே பார்ப்போம்.
நயன்தாரா நடிப்பில் உருவான ‘டோரா’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் நயன்தாராவை சுற்றியே கதை நகர்கிறது. சென்சார், இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுடன் நடித்த ஹரிஷ் உத்தமன் தனது அனுபவத்தை கூறும் போது...
“நயன்தாரா படத்தில் நடிக்கும் போது, தனது காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார்.

படப்பிடிப்பு தாமதமானால் அவர் கோபப்படமாட்டார். பொறுமையாக காத்திருப்பார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதை பழக்கமாக வைத்திருக்கிறார். இது போன்ற காரணங்களால் தான் நயன்தாராவை அனைவரும் புகழ்கிறார்கள்” என்றார்.
டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி, “பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் நயன்தாரா சொன்னபடி காட்சிகளை நடித்துக் கொடுத்தார்” என்று புகழ்ந்தார்.

பரத் நடிப்பில் உருவாகிவரும் ‘பொட்டு’ படம் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பரத், நமீதா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள படம் ‘பொட்டு’. இப்படத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், சாமிநாதன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வடிவுடையான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும இப்படத்தில் பரத், நமீதா ஆகியோர் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார்கள். பரத் இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்களே நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இனியன் ஹரிஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்களை நடிகர் ரஜினிகாந்த், விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
2017-ஆம் ஆண்டின் பிரம்மாண்ட படங்களுள் ஒன்றான ‘பாகுபலி 2’ ஏப்ரல் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ‘டிரைலர்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது உலக அளவில் அதிகமாக பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து, தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து தமிழில் ஏப்ரல் 8-ந்தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படகலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ‘பாகுபலி-2’ இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 6 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்படுவது குறி்ப்பிடத்தக்கது.

உடனே பணக்காரனாக ஆகவேண்டும் என்றும் ஆசைப்படுகிற நாலுபேரின் வாழ்க்கையை மையப்படுத்தி புதிய கதை உருவாகியுள்ளது. அதை பற்றி கீழே பார்ப்போம்.
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின், எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திகேயன், ஷாரியா, அருள் ஜோதி, ஜார்ஜ் உள்ளிட் பலர் நடித்துள்ளனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களுடன் தன்னை ஆறாவதாய் இணைத்துக்கொண்ட மெகா பூதம் ‘பணம்’. இதுதான் நாம் தூக்கத்தில்கூட முணுமுணுக்கிற வார்த்தை. நமக்கு நடக்கத் தெரியாமல் இருக்கலாம், ஓடத் தெரியாமல் இருக்கலாம், நீந்தத் தெரியாமல் இருக்கலாம், எது தெரியாமல் இருந்தாலும் நம்மால் வாழ முடியும். பணம் சம்பாதிக்க தெரியாமல் இருந்தால் நம்மால் வாழவே முடியாது.

விவசாயம் பண்ணினால்தானே அறுவடை செய்ய முடியும். வேர்வை சிந்தி உழைத்தால்தானே பணம் சம்பாதிக்க முடியும். அந்தளவுக்கு சிலருக்கு இங்கே பொறுமையில்லை. பசிக்கும்போது பாஸ்ட் புட் சாப்பாடு சாப்பிடுவது மாதிரி, உடனே பணக்காரனாகணும்னு நினைக்கிற நாலு பேர், கடைசியில் நோ எண்ட்ரியில் போகிற சம்பவம்தான் இந்த படத்தின் மையக்கரு.
எல்லா விளையாட்டிலும் ஒரு விதி இருக்கும், எல்லைக்கோடு இருக்கும். அதை மீறினால் ஆட்டத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதுபோல வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான். வாழ்க்கையின் விதியை மதிக்காமல், எல்லையை தாண்டி விளையாடுற நாலு போரோட கதைதான் இந்த ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தின் கதை என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.

`பெல்லி சூப்புலு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இப்படத்தை கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' என்ற படத்திலும், பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களை முடித்த பின்னர், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் `முண்டாசுப்பட்டி' படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் விஷ்ணு ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். கவுதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கவுதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக எல்.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் சென்னையில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் எல்.சுரேஷ் 1,259 ஓட்டுகள் பெற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆனந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் `பில்லா' படத்தை தயாரித்தவர்.
இந்த நிறுவனம் `நாடோடி மன்னன்', `ஒளிவிளக்கு', `மனோகரா' உள்பட 700-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவர்களாக சாய்பிரசாத், ஏ.கணேஷ், வி.பி.மாதவன் நாயர், ஏ.வி.எம்.கே.சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக ரவி கொட்டாரக்கரா, என்.ராமசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள். பொருளாளராக கே.கிருஷ்ணா ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்களாக குட்டி பத்மினி, கே.எஸ்.ராமகிருஷ்ணா, பி.ரவிகுமார், வெங்கடாத்ரி, கே.நந்தகுமார், கோபால்தாஸ், ஜெகநாததாஸ், டி.எஸ்.ராம்பிரசாத், அம்பிகாபதி, ஜெயசிம்மலு, சீனிவாசன், சத்யசீலன் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல என்று நடிகை டாப்சி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை டாப்சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். ரசிகர்களும் வரவேற்பு அளித்தார்கள். இந்தியில் 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படம் திருப்புமுனையாக அமைந்தது. நான் பெண் உளவாளியாக நடித்துள்ள ‘நாம் சபானா’ இந்தி படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. தமிழில் இந்த படம் ‘நான்தான் சபானா’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதில் அக்ஷய்குமார், பிரித்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம்கேர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷிவம் நாயர் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. நான் பெண் உளவாளியாக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு வருடம் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றேன். இந்தியில் கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இதுபோன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்னணி கதாநாயகர்களும் உதவுகிறார்கள். இது நல்ல மாற்றமாக தெரிகிறது.

சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு சினிமா காரணமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்படுவதை ஏற்க முடியாது. சினிமாவில் நல்ல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும். மோசமான கருத்துக்களை ஒதுக்க வேண்டும். பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களே, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்காக தற்காப்பு கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாலியல் தொல்லைகள் நேரும்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ படமொன்றை வெளியிட்டு இருக்கிறேன். பாலியல் துன்புறுத்தல்கள் நேரும்போது பெண்கள் பயந்து விடுகிறார்கள். இதனால் எதிர்த்து போராட வேண்டும் என்கிற தைரியத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர். பெண்கள் பயப்படாமல் அதனை சந்திக்க வேண்டும், பாலியல் தொல்லை கொடுப்பவனை அடித்து தாக்கி விரட்ட வேண்டும். இதற்காக எளிமையான தற்காப்பு கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு டாப்சி கூறினார்.

விஷால் பட நாயகி ஒருவர் சிம்பு படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்புகேற்றவாறு இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதில், ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய இரண்டு கெட்டப்புகள் பற்றிய செய்திகளும், டீசரும் வெளிவந்துவிட்டது.
அதேபோல், மதுர மைக்கேல் கெட்டப்புக்கு ஸ்ரேயா கதாநாயகியாகவும், அஸ்வின் தாத்தா கெட்டப்புக்கு தமன்னா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது கெட்டப் பற்றியும், அந்த கெட்டப்புக்கு யார் ஹீரோயின் என்பதையும் சஸ்பென்ஸாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், சிம்புவின் மூன்றாவது கெட்டப்புக்கான கதாநாயகி யார்? என்பதற்கு விடை தெரிந்துள்ளது. விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, ஜெயம் ரவி நடித்த ‘ஆதிபகவன்’ ஆகிய படங்களில் நடித்த நீது சந்திரா தான் சிம்பு படத்தின் மூன்றாவது கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நீது சந்திரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்படத்தக்கது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘போகன்’ படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக்காகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி - அரவிந்த்சாமி - ஹன்சிகா நடித்து வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘போகன்’. கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பதும் மர்மமாகவே இருக்கிறது. அதற்குள், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வை நடத்திவிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றிநடை போட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.