என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    திரிவிக்ரம் இயக்கத்தில் பவண்கல்யாண் நடிக்க உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சினிமா பிரபலங்களில் ரோபோ சங்கரும் ஒருவர். பிரபல தனியார்  தொலைக்காட்சியில் காமெடியனாக அறிமுகமாகிய இவருக்கு, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததையடுத்து படங்களில்  தொடர்ந்து நடித்து வருகிறார். 

    தற்போது, `பவர் பாண்டி', `சக்க போடு போடு ராஜா', `வேலைக்காரன்', `மன்னர் வகையறா', `ஜெயிக்கிற குதிர' உள்ளிட்ட பல  படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் திரிவிக்ரம்  இயக்கத்தில் பவண் கல்யாண் நடிக்கும் 'பிஎஸ்பிகே 23' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி  இருப்பதாக கூறப்படுகிறது. 



    பவண் கல்யாண் - சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள `கட்டமராயுடு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. தமிழில் அஜித் நடித்த `வீரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது. அடுத்ததாக பவண்கல்யாண்  அஜித்தின் `வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். 
    நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மைதானா? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக  பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவதுபோலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச்சடங்குகள் செய்வதுபோலவும் இருக்கிறது.

    இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வந்தபோது, ஏ.ஆர்.ரகுமான் விடுத்த அழைப்பின்பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு அவர் சென்றதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருவதாகவும் கூறியுள்ளனர்.



    மேலும், சூர்யா எந்த மதத்திற்கும் மாறவில்லை என்றும், அதுகுறித்து வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா மதம் மாறியதாக கூறி வெளியான வீடியோ


    கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ஊட்டி உசிலமேடு மற்றும் தொட்டபெட்டா சந்திப்பு ஆகிய இடங்களில் தனியார் கல்லூரிகள் இயங்கி வந்தன. இங்கு ஓட்டல் நிர்வாகம், சமையற்கலை மற்றும் பொறியியல் படிப்பு ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை கல்லூரி நிர்வாகத்தினர் புதுப்பிக்காமல் விட்டு, விட்டதாக தெரிகிறது. இதனால் இந்த கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்த கல்லூரியில் படித்த உடுமலைபேட்டையை சேர்ந்த மாணவர் பிருத்திவிராஜ் கடந்த 2012-ம் ஆண்டு ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.


    நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி கோர்ட்டில் ஆஜராக வந்த போது எடுத்த படம்.

    இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கல்லூரி நிர்வாகிகளான நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி, ஷாலினி, கல்லூரி நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் அசோக்சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஊட்டி உரிமையியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் மாமனாருக்கு சம்மன் அனுப்பப்பட்டும், அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதை தொடர்ந்து நேற்று நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி, கல்லூரி நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் அசோக் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த ‘அப்பா’ படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு ‘ஆகாச மிட்டாயீ’ என்று பெயர் வைத்துள்ளனர்.

    சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, வரலட்சுமியே தனது விளக்கத்தை கூறியுள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறும்போது, ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது என்று கூறி வெளியே வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இந்த முடிவுக்கு ஓகே சொன்ன ஜெயராம், சமுத்திரகனி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
    நடிகர் தனுஷ் மீதான வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மாயமாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டதால் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானவை. எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு விசாரணையின்போது தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய, அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த மாற்றுச்சான்றிதழில் அவருடைய அங்க, மச்ச அடையாளங்கள் இடம்பெறவில்லை. இதனையடுத்து அடையாளங்களை அறிய அவர் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் கடந்த 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் தனுஷ் ஆஜரானார். அவரது உடலில் அங்க அடையாளங்களை டாக்டர்கள் குழு பரிசோதித்து, முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் இதுதொடர்பான வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.



    இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தனுஷ் தரப்பு வக்கீல் ஆஜராகி, “எங்கள் தரப்பு வாதம் நிறைவுபெற்றுவிட்டது. எதிர்தரப்பினர் தேவையில்லாமல் வழக்கு விவரங்களை வெளிப்படுத்துகிறார்கள்“ என்று குற்றம் சாட்டினார்.

    மேலூர் தம்பதி தரப்பு வக்கீல், “இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக வேண்டியது இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும்“ என்றார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தனி அறையில் வழக்கை விசாரிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கு தொடர்பான செய்திகள் மக்கள் மனதில் வெவ்வேறு கருத்துகளை எழுப்பச்செய்துள்ளன. கோர்ட்டு உத்தரவுகள் மூடி மறைக்கப்படுபவை அல்ல. எனவே கோர்ட்டு உத்தரவுகளை முறையான ஆவணங்கள் பெற்று வெளியிடலாம்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் இறுதி விசாரணையை அடுத்தமாதம் (ஏப்ரல்) 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
    காமெடி நடிகர் சூரியின் தந்தை நேற்று இரவு உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் சூரியின் தந்தை நேற்று இரவு உடல்நலக்குறைவால்  காலமானார். 75 வயதாகும் முத்துச்சாமி சுவாசக்கோளாறு பிரச்சனையால் தவித்து வந்த அவர், நேற்று இரவு சுமார் 10.15  மணியளவில் உயிரிழந்தார்.



    அவரது இறுதிச்சடங்க மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள தாமரைப்பட்டியில் இன்று மாலை 4 மணியளவில்  நடைபெற உள்ளது.

    சூரியின் தந்தை மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    இயக்குநர் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
    இயக்குநர் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன் நேற்று(27.3.2017) இரவு சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேசன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெங்கடேசன் அவர்களது நல்லடக்கம் அடையாரில் உள்ள கே.வி.ஆனந்தின் வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளது.  அவருக்கு அனுஷ்யா என்ற மனைவியும், கே.வி.ஆனந்த், கமல் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.



    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `கவண்' படம் வருகிற மார்ச்  31-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவரது தந்தையின் மறைவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    `வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    `வட சென்னை' படத்தில் தனுஷ் - விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம்  நடைபெற இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முடியவுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால்  `வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.



    முன்னதாக முதற்கட்ட படப்பிடிப்பின் போதே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை  மறுத்த படக்குழு, விஜய் சேதுபதி மார்ச்சில் பங்கேற்பார் என்று கூறியிருந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போவதாலும்,  மற்ற படங்களில் தான் ஒப்பந்தமாகி இருப்பதாலும் `வடசென்னை' படத்தில் நடிக்க தேதி இல்லை என்று கூறி படத்தில் இருந்து  விஜய் சேதுபதி விலகியதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும்  வெளியிடவில்லை.

    விஜய் சேதுபதி நடிப்பில் 'கவண்' மார்ச் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்'  உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். 'புரியாத புதிர்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அனிருத்திடம் இதுகுறித்த கேட்ட போது அவர் என்ன பதில் கூறினார் என்பதை கீழே பார்ப்போம்.
    தனுஷ் நடிப்பில் வெளியான `3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதே  படத்தில் வெளியான "ஒய் திஸ் கொலவெறி" என்ற பாடலின் மூலம் உலகளவிலும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து விஜய்,  அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

    மேலும், நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததாக இவரது புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை  கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் இணைந்து பீப் பாடல் சர்ச்சையிலும் சிக்கித் தவித்தார். இந்நிலையில், இவரது  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது குடும்பத்தினர் அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு  செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.



    சென்னையில் நகைக்கடை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் மகளை அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க  பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தகவல்களை தொடர்ந்து, இதுகுறித்து அனிருத்திடம் கேட்டபோது, அவர் சிரித்துவிட்டு, அந்த தகவல் உண்மையல்ல என்று  கூறியுள்ளார். அதே நேரத்தில் உடனடி திருமணம் குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.



    அனிருத் தற்போது அஜித்தின் `விவேகம்', சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்', சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' உள்ளிட்ட  படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.

    தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.

    முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.

    ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.

    முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.

    அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.

    ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

    பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.

    1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.

    1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.

    பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)

    வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.

    1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.

    இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.

    சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

    "அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

    மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

    பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    "தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

    "டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

    நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.

    அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''

    இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

    முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.
    ரஜினி குறித்து ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரஜினி தற்போது நடித்துவரும் 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரஜினியை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி லைக்கா நிறுவனமும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, ரஜினியும் இலங்கை பயணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், ரஜினி இலங்கை செல்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இருப்பினும், ரஜினி குறித்து ஒரு சில தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.



    அதில் அவர் கூறியிருப்பதாவது: கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர் ரஜினிகாந்த் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அவரது ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், அவர் ஏன் என்னுடைய தலைவராக இருக்கிறார் என்பது குறித்து இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    பத்து பேர் இருந்தாலே கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர். இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் என் தலைவர், ஆறு மாதத்திற்குள் ஒரு படம் நடித்து, அதை வெளியிட்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.



    ஆனால், ஒரு படத்திற்காக இரண்டு அல்லது மூன்று வருடம் வரை அவர் எடுத்துக்கொள்வதில் இருந்தே அவர் பணத்தின் மீது ஆசை இல்லாதவர் என்று தெரிகிறது. நம்முடைய பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவரும் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கும். இதிலிருந்தே அவருடைய நல்ல எண்ணமும், தூய உள்ளமும் தெரிய வருகிறது.

    இந்தியாவிலேயே நட்சத்திர அந்தஸ்தில் உச்சத்தில் இருக்கும்போதும், நாட்டிலேயே மிகப் பிரபலமான நடிகராக இருக்கும்போதும் எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர் ரஜினி. இதுவெல்லாம் தலைவரை மதித்து வணக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணம் இதுதான்.

    சிலர், அவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு தெரிந்தவர்கள் அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற ரகசியத்தை சத்யராஜ் போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி-2’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், அதற்கு முன்னதாக இப்படத்தில் அந்த கேள்விக்கான விடையை இப்படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜே அறிவித்துள்ளார். நேற்று, ‘பாகுபலி-2’ படம் ரிலீசாவதற்கு முன்பாக படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.



    அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘பாகுபலி’ படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இப்போது பதில் சொல்லிவிடுகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் சோபு எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து பிரபாஸை கொல்லச் சொன்னார். எனது இயக்குனர் ராஜமௌலியும் பாகுபலியை கொல்ல எனக்கு உத்தரவிட்டார். அவர்கள் சொன்னபடி நான் செய்தேன். இல்லையென்றால், பிரபாஸை நான் எதற்கு கொல்லப் போகிறேன்? என்று அவர் தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த பேச்சும் அனைவரையும் கலகலக்க வைத்தது.

    இந்நிகழ்ச்சியில், இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி 360 டிகிரி தொழில்நுட்பத்தில் பார்க்கும்படி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் ‘பாகுபலி-2’ தெலுங்கு பதிப்பின் பாடல்களும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×