என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தனது இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினிகாந்த், இலங்கை தமிழ் மக்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன கூறியுள்ளார் என்பதை கீழே பார்ப்போம்.
    இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்க நடிகர் ரஜினிகாந்த்  இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால் ரஜினி இலங்கை செல்ல தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரஜினி தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். 

    மேலும் நான் ஒரு கலைஞன், எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்றும் ரஜினி கோரியிருந்தார். எதிர்காலத்தில்  நான் இலங்கை செல்ல வாய்ப்பு கிடைத்தால் அரசியல் காரணங்களை கூறி அதனை தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருப்பது  குறிப்பிடத்தக்கது. 



    இதில் ரஜினியின் வருகை ரத்து ஆனதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள், குறிப்பிட்ட தமிழக அரசியல்  கட்சிகளுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றொரு அறிக்கையை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினி கூறியதாவது,

    "நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.  நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை  வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
    சமீபத்தில் வெளியான `பாம்புசட்டை' படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சமீபத்தில் வெளியான `பாம்புசட்டை' திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்  கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என  கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே தன் முதல் திரைப்படம்  மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். 

    இயக்குநர் ஷங்கருடன் `எந்திரன்', `அந்நியன்', `சிவாஜி' படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு  `பாம்புசட்டை' முதல் திரைப்படம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஆடம் தாசன் கூறியதாவது,



    என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச்செல்ல ஒரு இளம்பெண்  வருவாள். மிக அழகாக இருப்பாள். அந்த பெண்ணுக்கு ஒரு காதல் இருந்தால், அது எப்படி இருக்கும் என யோசித்தேன். அதுதான்  பாம்புசட்டையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம். படம் பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷையும் அவரது கதாபாத்திரத்தையும்  கொண்டாடும்போது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எளிய மனிதனாக எளிய மனிதர்களைப்பற்றிய கதையை  சினிமாவாக எடுத்ததில் பெருமைப்படுகிறேன் என்றார்.



    இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியது குறித்து ஆடம் தெரிவித்ததாவது,

    ரஞ்சித் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்தார். 30 நிமிடங்களுக்கும் மேலாக படத்தைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தார். அதிலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைப் பற்றியும், அவரது அப்பாவாக நடித்த சார்லி சார் பற்றியும்  சிலாகித்து பேசினார். கீர்த்தி சுரேஷ் பாத்திரப் படைப்பிற்காக உங்களை நூறு முறை பாராட்டுவேன் என்று கட்டிப்பிடித்துக்  கொண்டார். எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின்  தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்றார் இயக்குனர் பா.ரஞ்சித்.

    ஒரே ஒரு பருக்கையைக்கூட வீணாக்க விரும்பாத ஆடம் தாசனின், முதல் பருக்கையான `பாம்புசட்டை' பலவகையான  விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருப்பதில் ஆடம் தாசன், உற்சாகமாக தனது அடுத்த படத்திற்கான கதை  பற்றிய யோசனையில் இருக்கிறேன் என்கிறார்.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

    கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தவர்.

    கே.ஆர்.ராம்சிங், 1915-ல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால். தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவழியினர்.

    நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் "இன்டர் மீடியட்'' (தற்போதைய "பிளஸ்-2'') வரை படித்தார்.

    பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.

    தனது நடிப்பால், கணீரென்ற குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த "ஸ்ரீராமபால கான வினோத சபா'' என்ற நாடகக் கம்பெனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, "சட்டாம்பிள்ளை'' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

    கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

    நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

    1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

    தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

    டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

    ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

    கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

    பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

    1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

    இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

    சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

    பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

    இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

    ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

    அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

    இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

    பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

    பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

    குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.

    ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.

    இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும், ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' பட்டம் உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர், ராம்சிங்.
    மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்.
    தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘ஒடியன்’ என்ற படத்தில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்குகிறார். மஞ்சு வாரியர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள படங்களிலேயே இதுவரைக்கும் எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் அமைந்துள்ளது. பீட்டர் ஹெயின் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கவுள்ளார். சாபு சிரில் ஆர்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.



    சாஷி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது. ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். 
    கார்த்திக் ராஜ் - நிரஞ்சனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘465’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    நாயகன் கார்த்திக் ராஜ் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே மருத்துவமனையில் மனோபாலாவும் பணியாற்றி வருகிறார். நாயகனுடன் பணியாற்றும் பெண் டாக்டர் நாயகனை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், நாயகனோ வேறொரு பெண்ணை காதலிக்கிறார். இருந்தும் அந்த பெண், கார்த்திக்கையே காதலித்து வருகிறாள்.

    ஒருகட்டத்தில், அந்த பெண்ணும், மனோபாலாவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதையடுத்து, நாயகனுக்கு வேறொரு பிரச்சினை வருகிறது. அதாவது, இவரது கையை விட்டு சென்ற பரம்பரை வீடு ஒன்று இன்னும் ஒரு வாரத்திற்குள் அவன் கைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதனால், நாயகனும், இவர்கூடவே தங்கியிருக்கும் உறவுக்கார பையனும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இந்நிலையில், நாயகனுக்கு அடிக்கடி ஒரு பெண்ணின் உருவம் அவருக்கு தெரிகிறது. கடைசியில், அந்த பெண்ணே தனது மனைவியாகவும் வரவே, ஆழ்ந்த குழப்பத்திற்கு போகிறார் நாயகன். இதனால், இவர் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டார் என்று அவரது உறவுக்கார பையன் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்கிறார்.



    இறுதியில், நாயகனுக்கு என்னதான் ஆனது? இவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்த அந்த பெண் யார்? நாயகனின் பரம்பரை வீடு இவர் வசம் வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கார்த்திக் ராஜ் தான் படம் முழுக்க வருகிறார். இவருக்குத்தான் நடிப்பதற்குண்டான வாய்ப்புகளும் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இருந்தாலும், ஒருசில காட்சிகளில் இவரது கதாபாத்திரம் நம்மையும் குழப்பிவிடுகிறது. இதனால், அந்த ஒரு சில காட்சிகள் மட்டும் இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமல் போகிறது.

    நாயகனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண் உருவமாக நடித்திருக்கும் நிரஞ்சனா, அவ்வப்போது வந்து போயிருக்கிறார் என்றாலும், அவருக்கு படத்தில் போதுமான வேலை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதனால், அவரிடமிருந்தும் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. உறவுக்கார பையனாக வரும் இளைஞரின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் நமக்கு தெரிந்த முகம் மனோபாலா மட்டும்தான். அவரும் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்துபோயிருப்பதால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

    இயக்குனர் சாய் சத்யம், சாதாரண ஒரு கதையை கையில் எடுத்து, அதன்பின்னணியில், திரில்லர், வன்மம் ஆகியவற்றை புகுத்தி ஒரு படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது, அனைவருக்கும் இது ஒரு பேய் படம் என்பதுபோல் தோன்றும். ஆனால், பேய் போல் ஒரு பெண்ணை நடமாட்டவிட்டு பேயையே ஏமாற்றி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதை அழகாக அமையாதது படத்திற்கு பெரிய தொய்வு.

    பிலிப் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்கிறது. அதனால், காட்சிகளில் தெளிவில்லாமல் இருக்கிறது. இருப்பினும், ஒரு சில காட்சிகள் பாராட்டும்படி இருக்கிறது. ஜியோப் பாட்டர்சன் மற்றும் சஷாங் ரவிச்சந்திரன் ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் திகிலூட்டவில்லை.

    மொத்தத்தில் ‘465’ சுவாரஸ்யம் இல்லை.
    சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான `கபாலி' படத்தை தொடர்ந்து, அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்திற்கும் அதே போல் புரமோஷன் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் `கபாலி'. பா.ரஞ்சித் இயக்கிய  இப்படத்தில் ரஜினிகாந்த் மலேசியா டானாக வருவார். இப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, படத்தின் புரமொஷன்  வேலைகளுக்காக மெனக்கிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பெரிய அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யும்  நோக்கில் `கபாலி' போஸ்டருடனான விமானம் உள்ளிட்ட பல்வேறு விதமான புரமொஷன் வேலைகளை மேற்கொண்டார்.



    மேலும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று `கபாலி' படத்தில் ரஜினி கோட்டுடன் நிற்கும்படியான பொம்மை ஒன்றை செய்து  விற்பனை செய்தது. இவ்வாறு சுமார் 40,000 பொம்மைகள் விற்பனையானதாக அந்த நிறுவனம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல், `விவேகம்' படத்தில் அஜித்தின் சிக்ஸ்பேக் பொம்மை தற்போது தயாராகி வருகிறது. முன்னதாக, இப்படத்தின் முதல்  போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித் சிக்ஸ் பேக்குடன் கோபமாக நிற்கும் படி  வெளியான போஸ்டர் மாதிரியான பொம்மைகளை அஜித் ரசிகர் ஒருவர் செய்துள்ளார். மதுரையை சேர்ந்த இளைஞர் உருவாக்கி  உள்ள இந்த பொம்மை விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.



    `விவேகம்' படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில்  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
    ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ஆந்திராவை சேர்ந்தவர் சசின் ஜோஷி. பிரபல தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ஓட்டல்களை நடத்தி வருகிறார்.  மதுபான ஆலையும் நடத்துகிறார். இதனால், எப்போதும் விமானத்தில் நாடுநாடாக பறந்து கொண்டிருப்பவர்.

    கோடீஸ்வரர் என்றாலும், தொழில் நடத்தும் நேரம் போக மீதி நேரத்தில் சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில  தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் இந்தி பட உலகுக்கு சென்றார். அங்கும் 5 படங்களில் நடித்தார். இப்போது தமிழ் படத்தில்  நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார்.



    ‘யார் இவன்’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் சசின் ஜோடியாக இந்தி நடிகை இஷாகுப்தா நடிக்கிறார். பிரபு, கிஷோர்,  சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். டி. சத்யா இயக்கும் இந்த படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

    இது பாரா கபடி போட்டியை பின்னணியாக கொண்டு தயாராகும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. இந்த படம் வெற்றி பெற்றால்  தொடர்ந்து தமிழில் படம் தயாரித்து நடிக்க சசின் ஜோஷி திட்ட மிட்டுள்ளார்.
    கணவரை பிரிந்த துக்கத்தில், நடிகை அமலாபால் மன அமைதிக்காக தினமும் யோகா செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம்  ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக அமலாபால்  நடிக்கிறார்.

    இயக்குனர் சரண்தேஜ் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது இவர் இயக்கி நடிக்கும் முதல் தெலுங்கு  படம். இந்த படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கிறார்.



    இதற்கிடையே அமலாபால் மன நிம்மதிக்காக யோகா, தியானம் ஆகியவற்றில் அமலாபால் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.  தினமும் யோகா, தியானம் ஆகியவற்றை தவறாமல் செய்து வருகிறார். இதனால் மன அமைதி கிடைப்பதாகவும், கவலைகளை  மறக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

    அமலாபால் தினம் காலையில் விதம் விதமாக யோகாசனம் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.  அதில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து யோகாசனம் செய்வதை வற்புறுத்தி இருக்கிறார்.
    தொடர் பிரச்சனைகளால் பட்டதாரி நடிகர் ஆன்மீகம் பக்கம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்து வந்த  பட்டதாரி நடிகர், தற்போது இயக்கத்தில் இறங்கி உள்ளார். அவரது இயக்கத்தில் முதல் படம் ஒன்று உருவாகி விரைவில்  ரிலீசாக உள்ளது. 

    சமீபத்தில் திரையுலக பிரபலங்களின் லீலைகளை பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்டு தமிழ்சினிமாவையே கதிகலங்க  வைத்தார். அதில் பட்டதாரி நடிகரின் படங்களும் வெளியாகி தீயாக பரவி வந்தது. அதனால் அவரது குடும்பத்தில் இவரை  பயங்கரமாக திட்டவிட, என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறாராம்.



    அதற்கு முன்பே பால் நடிகை, தனது கணவரை பிரிய இவரே காரணம் என்று கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, நடிகரை  தங்களது மகன் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது. தொடர்ந்து தன்னை வாட்டிவதைக்கும் இந்த  பிரச்சனைகளில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நடிகருக்கு தற்போது அவரது குடும்ப  ஜோசியர் ஒருவர் மூலமாக புதிய யோசனை ஒன்று முளைத்துள்ளதாம்.

    அதாவது, நடிகரின் குடும்ப ஜோசியர் ஒருவர் அவரை ஆன்மீகத்தில் ஈடுபட அறிவுரை வழங்கி உள்ளாராம். ஜோசியரின் அறிவுரை நடிகருக்கும் பிடித்துப்போக விரைவில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இருக்கட்டும், அங்கேயாவது சர்ச்சையை கிளப்பாமல் இருப்பாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. 
    நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல படத்தின் இயக்குனரான தினேஷ் செல்வராஜை இயக்குனர் பாரதிராஜா பாராட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. கார்த்திகேயன், ஷாரியா, அருள்ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, கதைகளின் கருபூலம், கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் ஆர்.செல்வராஜின் கடைக்குட்டியே. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’  ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல, உயர பறக்க துடிக்கும் இன்றயை இளைஞர்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது.



    இந்த துணிச்சலும், சமூக சிந்தனையும் மதிப்புக்குரிய மணிரத்னம் அவர்களின் மாணவன் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் காணமுடிகிறது. நேர்த்தியான திரைக்கதை, நுணுக்கமான இயக்கம் என்று சினிமாவின் அத்தனை கிராப்ட்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

    இந்திய சினிமாவில் நாற்பது ஆண்டுகளாக எழுத்தாளனாய் என் நண்பன் செல்வராஜ் தவிர யாரும் ஆட்சி புரிந்ததில்லை. என் நண்பனோடு இணைந்து நீ பணியாற்றியதை மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன். உன்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால் என் நண்பனின் மகிழ்ச்சியை காணமுடிகிறது. குடும்ப நண்பன் என்ற முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
    ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பொன்ராம் பேசியதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, நடிகர்கள் பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது, ‘இந்த ஆல்பத்தின் இயக்குனர் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீரோ, எல்லாமே. அதை மறந்துவிடக் கூடாது.



    இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள்.  அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன. இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான்.

    எஸ்.எம் எஸ்.ராஜேஷ்கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான் படவாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள் என்று கூறி வாழ்த்தினார்.
    ‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள ‘களத்தூர் கிராமம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ‘ஏஆர்மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘களத்தூர் கிராமம்’.

    இந்த படத்தில் கிஷோர் குமார், புதுமுகம் யக்னா ஷெட்டி ஆகியோர் நாயகன் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சுலீல்  குமார், மிதுன்குமார், ரஜினி மகா தேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு- புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பு- சுரேஷ் உர்ஸ், பாடல்கள்-  இளையராஜா கண்மணி சுப்பு, ஸ்டண்ட்- மகேஷ், ஓம் பிரகாஷ், இயக்கம்-சரண் கே.அத்வைத்தன். படம் பற்றி கூறிய அவர்...



    “இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த உடனே, ராஜாசாரின் இசை தான் இதற்கு மிக சரியாக இருக்கும்  என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா சார் எங்கள் படத்திற்கு  இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.

    போலீசாருக்கும், களத்தூர் கிராம மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சினை தான் இந்த படத்தின் கதை கரு. கதாநாயகன்  கிஷோர், இளைஞர், முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980-ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை  மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘களத்தூர் கிராமம்’ நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.

    ×