என் மலர்
கோச்சடையான் கூட்டணியில் இணைந்த இரண்டு பேர் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய படம் ‘கோச்சடையான்’. மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் நடிகர் ஆதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஆதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரிக்வேதா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த மேலும் தகவல்கள் மற்றும் நடிகர், நடிகையர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘முடிஞ்சா இவன புடி’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், வெற்றி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இப்படத்தை இயக்கவுள்ளார். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது (IIFA) களில் ‘தெறி’, ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா 3 விருதுகளை வாங்கியுள்ளது. மேலும், விருதுகள் பெற்றவர்களின் முழு விவரங்களை கீழே பார்ப்போம்.
சர்வதேச இந்திய சினிமா அகாடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடமும் இந்த விருது வழங்கும் விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்காக நடந்த இந்த விழாவில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’, மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா மூன்று விருதுகளை வாங்கியுள்ளன. ‘தெறி’ படம் சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளை வாங்கியுள்ளது. ‘இறுதிசுற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் விருது பெற்றிருக்கிறது.
மேலும், விருது பெற்றவர்களின் முழு பட்டியல் கீழே:-
சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிசுற்று)
சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிசுற்று)
சிறந்த இயக்குனர் - அட்லி (தெறி)
சிறந்த துணை நடிகர் - நாகர்ஜுனா (தோழ)
சிறந்த துணை நடிகை - பேபி நைனிகா (தெறி)
சிறந்த காமெடியன் - ஆர்.ஜே.பாலாஜி (தேவி)
சிறந்த வில்லன் - மகேந்திரன் (தெறி)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் - அருண் ராஜா காமராஜ் (நெருப்புடா - கபாலி)
சிறந்த பின்னணி பாடகர் - அனிருத் (தங்கமே, நீயும் நானும் - நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணி பாடகி - நீதி மோகன் (நீயும் நானும் - நானும் ரவுடிதான்)
சிறந்த கதை - கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)

வடசென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்ட செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக பேச்சு அடிபட்டது. ஒருதரப்பில் இந்த செய்தி பொய் என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் இது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய் சேதுபதி ‘வடசென்னை’ படத்தில் விலகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விலகியதற்கு யாருடனும் எந்த மனஸ்தாபம் இல்லை என்றும், கால்ஷீட் பிரச்சினையாலேயே இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

‘வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை. விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால், இப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட தேதியும் தள்ளிப்போனதால், இதில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென ரசிகர் மன்ற கூட்டத்தை கூட்டியுள்ளதால் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். ரஜினி அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது வற்புறுத்தி வருகிறார்கள். போஸ்டர் அடித்து ஓட்டு கிறார்கள்.
இதுமட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகளும் ரஜினியை தனது பக்கம் இழுக்க முயன்று வருகின்றன. 1996-ம் ஆண்டு தி.மு.க.-த.மா.கா. கூட்டணி அமைத்த போது அவர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா தலைமையில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு ரஜினி எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. பல்வேறு சூழ்நிலைகளில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தது. ஆனால் அரசியலுக்கு வருவதை ரஜினி தவிர்த்தார். அரசியல் தனக்கு சரிப்பட்டு வராது என்றும் கருத்து தெரிவித்தார்.
பாரதீய ஜனதா இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் கட்சியாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. உத்திர காண்டிலும் வெற்றியை ருசித்தது. காங்கிரசுக்கு சாதகமாக இருந்த கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.

தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறது. என்றாலும் இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலமான கட்சியாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டு கிடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். எனவே, இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி சென்னை வந்தார். அப்போது ரஜினியை சந்தித்து பேசினார். என்றாலும், பா.ஜனதாவுக்கு ஆதர வாக அவர் குரல் கொடுக்கவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ரஜினியை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி நடந்தது. ஆனால் அவர் அதில் இருந்து நழுவி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இப்போது நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர் ரஜினியை சந்தித்தார். பின்னர் ‘‘இது டிரைலர். இனிதான் மெயின் பிக்சர் இருக்கிறது’’ என்று பேட்டி அளித்தார்.
இதையடுத்து ரஜினி ‘‘நான் இந்த இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை’’ என்று அறிக்கை வெளியிட்டார். என்றாலும், ரஜினி பா.ஜனதாவுக்கு வரவேண்டும் என்று கட்சியின் மேலிடம் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் 10 வருடங்களுக்கு பிறகு ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை வருகிற 2-ந்தேதி கூட்டி இருக்கிறார். இதற்கான கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற தலைவர்கள், செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி என்ன சொல்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் சமீபத்தில் இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களை சந்திக்கவும், அவர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகளை வழங்கவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் அந்த பயணம் ரத்து ஆனது.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரசிகர்மன்றத்தின் எதிர்கால திட்டம் மற்றும் நடவடிக்கைகள் பற்றி ரசிகர்களின் கருத்தை ரஜினி கேட்டு அறிவார். அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்று கூறப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் வற்புறுத்தி வரும் நிலையில், ரசிகர்களுடன் ரஜினி நடத்தும் ஆலோசனை கூட்டம் அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது தனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ படங்களில் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்துள்ள அவர் அடுத்து விஜய்யின் புதிய படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாக குடும்பபெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். அதில் குடும்பம் சார்ந்த சென்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு உண்டு. அடுத்து விஜய் படத்தில் நடிக்கிறேன்.

விஜய்யுடன் நடிக்கும் படங்களில் எனக்கு எப்போதுமே வெயிட்டான வேடம் கிடைத்து வருகிறது. அதுபோல இந்த படத்திலும் எனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த படத்திலும் நான் அவருடைய காதலிதான். என்றாலும், முக்கியமான வேடம். ஆரம்பத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் புதுமையாக இருக்கும்.
அதுபோல் வித்தியாசமான சூழலில் எங்களுக்குள் காதல் மலர்வது போல காட்சிகள் உள்ளன. விஜய்யுடன் நான் நடிக்கும் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன. நான் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.
இந்த 2017-ம் ஆண்டு தமிழின் முன்னணி நாயகர்களான விஜய், அஜீத் ஆகியோருடன் நடிப்பதை ஜாக்பாட் பரிசுபோல உணர்கிறேன்’’ என்றார்.
‘நான் தான் ஷபானா’ படத்தில் சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்ததாக டாப்ஸி கூறியுள்ளார். இதுகுறித்து டாப்ஸி தெரிவித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
‘ஆடுகளம்’ படத்தில் நடித்த டாப்ஸி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தி படம் ‘நாம் ஷபானா’. இது தமிழில் ‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் திரைக்கு வருகிறது. இதில் டாப்ஸியுடன் அக்ஷய்குமார், பிரிதிவிராஜ், மனோஜ்பாஜ்பாய், அனுபம்கேர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற டாப்ஸி பேசும்போது....
‘‘இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பெண் உளவாளியாக நடிக்கிறேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். `டோனி' படத்தை இயக்கிய நீரஜ்பாண்டே இந்த கதையை எழுதி தயாரித்திருக்கிறார். இது நான் இந்தியில் நடிக்கும் 6-வது படம். தமிழிலும் இந்த படம் ‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் வருவது மகிழ்ச்சி.

இந்த படத்தில் அக்ஷய் குமார் கவுரவ வேடத்தில் வருகிறார். உளவாளி வேடத்துக்காக ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன். 4 சண்டைகாட்சிகள் வருகின்றன. இதற்காக ஜப்பானிய மார்ஷல் ஆர்ட்ஸ் படித்தேன். ஹார்மகா, ஜப்பான், ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றேன். அனைத்து சண்டை காட்சியிலும் டூப்போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்தேன். சண்டை காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு தற்காப்புகலை கற்கும் ஆர்வம் வரும்.

‘ஆடுகளம்’, ‘காஞ்சனா-2’ படம் பற்றி இப்போதும் பேசுகிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கால்ஷீட் உடனே கொடுக்க முடியாததால் அது நடக்கவில்லை. இனி வருடத்துக்கு ஒரு தமிழ் படத்திலாவது நடிக்க விரும்புகிறேன்.
பிரபல மலையாள ஹீரோ பிரித்விராஜ் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். இது என் திரையுலக வாழ்வில் முக்கியமான பலம்’’ என்றார்.
ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் `2.ஓ' படத்தின் முக்கிய பணி ஒன்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி ரிலீசாக வெளிவர இருக்கிறது. `3டி' வடிவிலும் வெளிவர இருக்கும் இப்படத்தை, ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியிட திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தான் கர்ப்பிணியாக இருப்பதாக பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், குழந்தை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் நடிகை பிபாஷா பாசு தெரிவித்து உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ராஸ், தூம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை பிபாஷா பாசு. இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 38-வது வயதில் கரண்சிங் குரோவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பிபாஷா பாசு கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இதை நடிகை பிபாஷா பாசு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை பற்றி பரப்பப்படும் எந்த தகவலையும் நம்பவேண்டாம். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என சிலர் சிறுபிள்ளைதனமாக கூறுவது எரிச்சலூட்டுகிறது. என்னிடமிருந்து இதுபோன்ற இனிப்பான செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கும் என் நலம் விரும்பிகளிடம் இந்த தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கர்ப்பிணியாக இல்லை. தற்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நடக்கும்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை நிச்சயமாக என் நலம் விரும்பிகளுக்கு தெரியப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது காதலனுடன் உறவு கொள்ளப் போவதை லைவ்வாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது, அவருடைய ரசிகர்களுக்கு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது அபார்ட்மெண்ட் மாடியில் தனது காதலருடன் அவர் உறவு கொள்வதை பெரிஸ்கோப் மூலமாக லைவ் வீடியோவாக வெளியிடப் போகிறாராம். இன்னும் 7 நாட்களில் அந்த லைவ் வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று சமூகத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு நிம்மதி வேண்டுமென்றால் அது காதலால் மட்டுமே முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோவை அவர் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
கவிதா ராதேஷ்யாமின் இந்த அறிவிப்பு பாலிவுட் வட்டாரத்தில் பலரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

`குக்கூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா நாயர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான `குக்கூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா நாயர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். `குக்கூ' படத்தில் தினேஷ் ஜோடியாக கண் தெரியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சையும் உருகச் செய்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், தனது கல்லூரி படிப்பை முடித்த மாளவிகா, மீண்டும் தமிழில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவினாஷ் ஹரிஹரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் `ராஜதந்திரம்' பட புகழ் வீரா ஜோடியாக மாளவிகா நடிக்கிறார்.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தை, ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். கடந்த வாரம் பாண்டிச்சேரியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எனது தந்தை(கமல்ஹாசனின்) எதையும் யோசித்தே பேசுவார். வாழ்க்கையில் இதுபோல் நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார் என்று அக்ஷராஹாசன் கூறியுள்ளார். இது அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வியொன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதில் அளித்து இருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டின.
கமல்ஹாசன் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
“மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக உங்கள் தந்தை கமல்ஹாசன் மீது கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்படுகிறதே?” என்று ஐதராபாத் வந்த கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனிடம் நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து அக்ஷராஹாசன் கூறியதாவது:-
“எனது தந்தை எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் அதுகுறித்து நிறைய யோசிப்பார். ஆழமாக சிந்திப்பார். அதன்பிறகுதான் தனது கருத்தை வெளியிடுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது வாழ்க்கை பயணத்தில் இதுபோல் நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார்.
எனது தந்தை நடிப்பில் ‘சபாஷ்நாயுடு’ படம் தற்போது தயாராகி வருகிறது. இதில் எனது அக்கா சுருதிஹாசனும் நடிக்கிறார். இந்த படத்தில் எனக்கும் நடிக்க ஆர்வம் இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டால் நானும் நடிப்பேன். அஜித்குமாருடன் விவேகம் படத்தில் நடித்து வருகிறேன். இது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இந்தி படமொன்றில் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் பெண் வேடத்தில் நடிக்கிறேன். இது ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும்”.
இவ்வாறு அக்ஷராஹாசன் கூறினார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள `சங்கமித்ரா' படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி உள்ளார். அவர் யார்? விலகியதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101வது படமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு, ஸ்ருதி ஹாசனை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக மிகப்ரெிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாக உள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருந்த, `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் `பத்மாவதி' படத்தில் பிசியாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சங்கமித்ராவில் தன்னால் பணியாற்ற முடியவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.
`சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.