என் மலர்
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக செல்வராகவன் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். அதேபோல், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், அந்த படங்கள் அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படமாக அமைந்தது.
‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘கான்’ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இவருடைய இயக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் இயக்காமல் இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவருக்கு வேறு பணிகள் இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் இயக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

உகாதி பரிசாக நானி-அஞ்சனா ஜோடிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நானி `வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் `நான் ஈ', `ஆஹா கல்யாணம்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். இதில் `நான் ஈ' படத்தில் இவரது கதாபாத்திரம் பேசுப்படியாக அமைந்தது.
தனது தோழியான அஞ்சனாவை, 5 வருடங்களாக காதலித்து வந்த நானி கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. நேற்று உகாதி திருநாள் பரிசாக அவருக்கு குழந்தை பிறந்ததால், உகாதி கொண்டாட்டத்துடன் தனது குழந்தை பிறந்ததையும் நானி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான `நேனு லோக்கல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது `நின்னுக்கோரி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஷிவா நிர்வானா இயக்கி வரும் இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு `மிடில் கிளாஸ் அப்பாயி' என்ற படத்தில் நானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில், நாளை நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினி, கமல் இருவரும் முதல் செங்கலை எடுத்து வைத்து கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், 'நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்' என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தை ரூ.26 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 4 மாடிகளை கொண்டது. இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி மையம், நடன அரங்கம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள், சங்க அலுவலகம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. துணைத் தலைவர் பொன்வண்ணன், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் நிர்வாகிகள் சங்க கட்டிட அறங்காவலர்கள் பங்கேற்றனர்.
இதில் நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவை நாளை (31-ந்தேதி) நடத்துவது, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், திரைப்பட துறையினர் அனைவரையும் இதற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதுதவிர தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்பட திரை உலகத்தை சேர்ந்த 24 அமைப்புகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான அழைப்பிதழை விஷால் நேரில் சென்று வழங்கினார்.

நாளை காலை 9 மணிக்கு சங்க வளாகத்தில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.
விஷால், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். ரஜினி, கமல் இருவரும் முதல் செங்கலை எடுத்து வைத்து கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார்கள்.
மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை அறங்காவலர் குழு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகக்குழு, செயற்குழு, நியமனக்குழு, கட்டிட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
திருநங்கைகளுக்காக மீண்டும் படம் எடுப்பேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை சங்கீதசபாவில் நேற்று மாலை “மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்“ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கினார். திருநங்கைகள் கங்கா நாயக், சீமாநாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி ஆனந்தன் வரவேற்று பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், டாக்டர் அன்புராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
எனது தாய் தான் எனக்கு முதல் நண்பர், அவரின் வழிகாட்டுதலின் பேரில் திருநங்கைகளுக்காக காஞ்சனா படத்தில் நடித்தேன். திருநங்கைகளாக பிறப்பது சாபம் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் நம்மை போன்றவர்கள் தான். ஒரு திருநங்கையை மற்றொரு திருநங்கை தத்து எடுப்பது பாராட்டுக்குரியதாகும்.
திருநங்கைகள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அஷ்ட லட்சுமிகள். டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் குழந்தை பிறந்தோலோ, வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்தாலோ, எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றாலும் இவர்களை அழைத்து தான் விளக்கு ஏற்றி வைக்க சொல்வார்கள். அந்த நிலை தமிழகத்திற்கு வரவேண்டும்.

இனி நான் நடிக்கும் படங்களின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமித்து திருநங்கைகளுக்காக வங்கி கணக்கு தொடங்கி சேமித்த பணத்தை போட்டு வைப்பேன். அந்த பணத்தை திருநங்கைகளின் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துவேன்.
திருநங்கைகளுக்கு ஒரு கட்டிடம் கட்டிக்கொடுப்பேன். திருநங்கைகளுக்காக மீண்டும் படம் எடுப்பேன். அவர்களை மக்கள் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கும் வரை போராட்டம் நடத்துவேன்.
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளேன். இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு மாடுகள் வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருநங்கைகளின் நடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நடிகர் ராகவா லாரன்சும், திருநங்கைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். சுத்தமல்லியை சேர்ந்த திருநங்கை ரேணுகா, மிஸ் திருநெல்வேலியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அஜித் நடித்த `பில்லா 2' படத்தில் நடித்த புரூனா அப்துல்லா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை சூடேற்றி வருகிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
இந்தி படங்களில் நடிக்கும் பிரேசிலை சேர்ந்த நடிகை புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தபோது மாடலிங் செய்து பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அஜித்தின் ‘பில்லா-2’ படத்திலும் நடித்ததின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார்.

தற்போது இவர் பிரேசிலில் தனது விடுமுறை நாட்களை தனது நண்பர்களுடன் கழித்து வருகிறார். அங்கு அவர் பிகினி உடையில் விதவிதமாக எடுத்த புகை படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே உடையில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக நிற்கும் படங்களையும் அதில் பதிவேற்றம் செய்து தனது இணையதள பக்கத்தை சூடேற்றி இருக்கிறார்.
2 நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகின்றனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். மலேசியாவில் இருந்து நேராக சென்னை வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகிறார்.
உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் `கபாலி' படத்தில் ரஜினி மலேசியா டானாக வருவார். இதற்காக முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அப்போது மலேசியாவில் அவர் தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர். அது ஒருபுறம் இருக்க மலேசியாவின் பிரமரான நஜீப் ரஸாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினியின் தீவிர ரசிகர்களாம்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும் ரஸாக், பிரதமர் மோடியை சந்திக்கும் முன், சூப்பர் ஸ்டாரை சந்திக்க விரும்புகிறாராம். ஆனால், மலேசிய பிரதமருடனான சந்திப்புக்கு குறித்து ரஜினி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் உள்ள மலாக்கா நகரின் சுற்றுலாத் தூதராக ரஜினியை நியமிக்க அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த, துல்கர் சல்மான் படத்தின் கதையாசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
துல்கர் சல்மான் - சன்னி வெய்ன் நடிப்பில் கடந்த 2013-ஆம் வெளியான படம் `நீலகாசம் பச்சகடல் சுவ்வன்ன பூமி'. சமீர் தாஹீர் இயக்கிய இப்படத்திற்கு திரைக்கதையை ஹாசீர் முகமது எழுதியிருந்தார். படம் வெளியான சில நாட்களிலேயே முகமது மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதில் நிர்வாணமாக வந்த முகமது, தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த வழக்கு பதிந்த போலீசார், 3 வருடங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் முகமது போதைமருந்து பருகி இருந்த போது, தனது வீட்டிற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள படம் ‘8 தோட்டாக்கள்’.
இதில், புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகி அபர்ணா பாலமுரளி கேரள வரவு. இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, அம்மா கிரியேஷன் சிவா, சார்லஸ் விநோத், ஆர்.எஸ். சிவாஜி, தேனிமுருகன், மணிகண்டன் உள்பட பலர் நடித் திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-தினேஷ்கே.பாபு, இசை-கே.எஸ்.சுந்தர மூர்த்தி, எடிட்டிங்-நாகூரான், ஸ்டண்ட்-திலீப்சுப்புராயன், நடனம்-தினேஷ்,நந்தா, தயாரிப்பு- வெள்ளைப் பாண்டியன், இயக்கம்- ஸ்ரீகணேஷ்.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது.....
“இது கிரைம் திரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது. போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு துப்பாக்கி மாயமாகிறது. அதில் உள்ள 8 தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில் வெடிக்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு காரணம் யார்? என்பது கதை. இதில் நாயகன் வெற்றி, சப்-இன்ஸ் பெக்டராக நடித்திருக்கிறார்.இவர் தயாரிப்பாளர் மகன். என்றாலும், கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
நாயகி அபர்ணா பத்திரிகை நிருபராக வருகிறார். எம்.எஸ்.பாஸ்கருக்கு இதில் அற்புதமான கதாபாத் திரம். அருமையாக நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும். அவர் நிச்சயம் ஒரு படி மேலே போவார். அவரது பாத்திரம் அதிகமாக பேசப்படும்” என்றார்.
`இருவர்' படத்தில் இணைந்து நடித்த மோகன்லால், பிரகாஷ் ராஜ் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் `இருவர்'. மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். `ஒடியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளார்.

மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்திற்கு, எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க உள்ளார். வருகிற 2018-ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
நயன்தாரா நடிப்பில் `மாயா' படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் தனது அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை இயக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
அஷ்வின் சரவணன் தமிழில் இயக்குநராக அறிமுகமான படம் `மாயா'. இப்படத்தில் நயன்தாரா, ஆரி, ரேஷ்மி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திகில் த்ரில்லர் பின்னணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபீசிலும் தொடர்ந்து முன்னிலை பெற்றது. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துள்ள அஷ்வின் அதற்கான கலைஞர்கள் வேட்டையில் இறங்கி உள்ளார்.
இப்படத்தில் முன்னணி வேடத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அஷ்வின்தெரிவித்துள்ளார். இயக்கத்தில் இருந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர எஸ்.ஜே.சூர்யா விஜய்-அட்லி படம், ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷிவதா நாயரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. `மாயா' படத்திற்கு இசையமைத்த ரான் ஈத்தன் யோகான் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட இயக்குநர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.
வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.
இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், "வாலி'' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?'' என்று கேலி செய்தார்.
உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, "வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?'' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.
அதைப் படித்த ஆசிரியர், "பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.
நண்பர்களுடன் சேர்ந்து "நேதாஜி'' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் "கல்கி'', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.
இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் "சில்பி'' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். "கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்'' என்று சில்பி ஆலோசனை கூறினார்.
இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.
வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, "அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே'' என்று வாலியைப் பாராட்டியதுடன், "பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்'' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.
கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.
ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-
"ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.
`மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.
அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.
நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.
ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.
காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.
ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது "கமர்ஷியல் ஆர்ட்.'' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.
ஸ்ரீரங்கத்தில், "வாலி பப்ளிசிட்டீஸ்'' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. "கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.''
எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.''
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.

ஜித்தன் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பேய் படமான ‘1 ஏஎம்’, எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுசில் தங்கியிருக்கும் 3 பேரில் இரண்டு பேர் நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். கதாநாயகன் மோகன் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைக்கிறார்.
இந்த கொலை குறித்து துப்பு துலக்க வரும் போலீஸ் அதிகாரி பிரதீப், முதற்கட்டமாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரிக்கிறார். அப்போது, அப்பகுதியில் ஒரு பெண் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி திகிலை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் அந்தப் பேய், அந்த வழியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதாகவும், லிப்ட் கொடுப்பவர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும் கூற, விசாரணையை கெஸ்ட் அவுஸ் பக்கம் திருப்புகிறார் பிரதீப். கெஸ்ட் அவுஸ் வாட்ச்மேனை விசாரிக்கும்போது, சம்பவம் நடந்த அன்று 3 பேரும் ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவிக்கிறார்.
அவர்கள் அழைத்து வந்த பெண் யார்? கெஸ்ட் அவுசில் 2 பேரையும் கொன்றது அவர்தானா? இந்த கொலையின் பின்னணி? என்பதை படத்தின் மீதி கதை.
மிரட்டும் பேய், கெஸ்ட் அவுஸ் திகில் காட்சிகளுடன் கூடிய பதைபதைப்பான சூழ்நிலையை திரில்லிங்காக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராகுல். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து, திரில் கதையை படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. ஆனால், ரத்தினச் சுருக்கமான கதையை, 2 மணி நேரத்திற்கு இழுப்பதற்காக தேவையில்லாத காட்சிகளை அதிகமாக திணித்திருக்கிறார். அதுவும் வந்த காட்சிபோன்றே வருவதால் போரடிக்கிறது.
ரசிகர்களுக்கு திரில் அனுபவத்தை கொடுக்க வேண்டிய காட்சிகள்கூட, எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதால், ‘இவ்வளவுதானா?’ என எண்ணத் தோன்றுகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் காண முடிகிறது.
நாயகனாக வரும் மோகன் உள்பட அனைவரும் புதுமுகங்கள் என்பதால் தங்களுக்கு ஏற்ற வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகி சஸ்வதா, அழகான பேயாக வந்து மிரட்டுகிறார். இருந்தாலும், நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் பிரதீப், போலீஸ் கெட்டப்பில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் போலீஸ் கதாபாத்திரத்துக்குண்டான கம்பீரம் வரவில்லை.

படத்தில் பாடல்கள், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லை. சீரியசாக செல்லும் இப்படத்தின் மொத்த நம்பிக்கையே பின்னணி இசைதான். முக்கியமான தருணங்களில் திரில்லிங் காட்சியமைப்புக்கு ஏற்ப இசையில் மிரட்டல் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அரங்கம் அதிரும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒளிப்பதிவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண். ஒரு சில காட்சிகளில் சிறப்பாக வந்திருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நகர்வதால் சரியான ஒளியமைப்பு இல்லை.
மொத்தத்தில் 1 ஏஎம், ‘முயற்சி’