என் மலர்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள `கவண்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.
அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.

இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.
இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.

இதனையடுத்து, முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.
இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.

வெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவதுடன், ஆர்வத்தையும் கூட்டுகிறது. முதல்பாதியில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரையை கலக்கியதுடன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெகுநாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், முந்தைய படங்களில் வருவது போல இப்படத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் போல அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடிப்பில் பாராட்டு பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது.

மீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மடோனா நடிப்பில் ஒருபடி மேல சென்றுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது. விக்ராந்த் தனக்குரிய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. மேலும் அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்படி உள்ளது. குறைவான நேரங்களில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நின்றிருக்கிறார்.
அயன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.

சில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கும் கே.வி.ஆனந்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.
தனக்குரிய தனித்துவமான இசையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் சரியான இடைவெளியில் அமைந்துள்ளது. குறிப்பாக "ஆக்ஸிஜன் தந்தாலே", "ஹேப்பி ஹேப்பி நியூ இயர்" உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது.
திரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மொத்தத்தில் `கவண்' குறி தப்பாது.

பாலிவுட் நடிகை ஒருவர், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது ஹோட்டல் அறைக்கு வெளியே நடிகர் ஒருவரிடம் கெஞ்சியுள்ளார். அந்த நடிகர், நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படம் மூலம் இந்தி பட உலகில் காலடி வைத்தவர் மாஹிராகான். இந்தி படங்களில் நடித்தாலும் இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். பாகிஸ்தான் கலைஞர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியதால் சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

சமீபத்தில், துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், நடிகை மாஹிராகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஓட்டல் அறை வாசலில் நிற்கும் ரன்பீர் கபூரிடம் மாஹிரா கும்பிட்டபடியே கெஞ்சுவது போன்ற வீடியோ வெளியாகி பரவி வருகிறது. ரன்பீரை சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அப்படி பேசுகிறார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்றுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற சம்பவம் வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மலேசிய பிரதமர் பதவிக்கான தேர்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கோலாலம்பூர்:
பிரபல சினிமா இயக்குனர் மணிரத்தினம் வீட்டின் மீது குண்டு வெடித்தபோது, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஊழலும் அராஜகமும் பெருகி விட்டதாகவும் கொதித்தெழுந்த நடிகர் ரஜினிகாந்த், இதே நிலைமை நீடித்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேட்டியளித்திருந்தார்.
அப்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது பெரும் முழக்கமாக ஒலித்த இந்த ‘ரஜினி வாய்ஸ்’ அப்போது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து தந்ததாக அரசியல் நோக்கர்கள் இன்றளவும் கருதுகின்றனர்.
அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வியுடன் ஊடகவியலாளர்கள் அவரை மொய்க்கத் தொடங்கினார்கள். வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரை ரஜினியின் நிலைப்பாடு என்ன? என்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்பதை அவர் சமீபத்தில் தெளிவுப்படுத்தி விட்டார்.
ஆக, தேர்தல்களின்போது அநேகமாக வெற்றி-தோல்வியை ஓரளவுக்கு நிர்ணயிக்கும் கணிப்புக்கு ரஜினியின் குரல் எப்போதுமே உறுதுணையாக இருப்பதாக தமிழக வாக்காளர்கள் நினைக்கின்றனர்.
இது தமிழக வாக்காளர்களுக்கு மட்டுமல்ல; மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது இனிவரும் நாட்களில் உறுதிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான, அச்சாரமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டுக்கு இன்று காலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்தாருடன் சென்று அளவளாவி விட்டு வந்த சந்திப்பை எடுத்து கொள்ளலாம்.
‘முத்து’ படத்துக்கு பின்னர் ஜப்பானில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகர் ரஜினிகாந்த், அதிரடி நாயகன் ஜாக்கி சானுக்கு இணையாக ஆசிய நாடுகளில் உள்ள ரசிகர்களின் மனதில் நீக்கமற இடம்பிடித்துள்ளார்.
குறிப்பாக, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதால் பின்னர் வெளியான சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட ரஜினிகாந்தின் படங்களுக்கு அந்நாடுகளில் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
இதை மனதில் வைத்தோ.., என்னவோ.., அவரது நடிப்பில் உருவான ‘கபாலி’ திரைப்படத்தின் கதைக்களம் மலேசியாவை மையமாக வைத்து அமைக்கப்பட்டது. பெரும்பான்மையான காட்சிகளும் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டன.
அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட ‘கபாலி’ மலேசிய தமிழர்களிடையே மிகச் சிறந்த முறையில் ஆரவாரமான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ‘பிரமோட்’ செய்வதற்காக மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனம் ‘கபாலி’ பட விளம்பரங்களுடன் தங்களது விமானங்களின் வெளிப்புறத்தை அலங்கரித்திருந்தது.

கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் போலீசில் சரணடைந்ததாக படத்தின் திரையில் தோன்றும் எழுத்துகளை மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரிமாறினர்.
பொதுவாக எல்லா சினிமாக்களின் கிளைமாக்ஸ்களும் அநீதி தோற்பது போலவும், நீதியும் தர்மமும் வெற்றி பெறுவதாகவும் முடிவதுதான் வாடிக்கை. அவ்வகையில், மலேசிய மண்ணில் நடப்பதாக பின்னப்பட்ட ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ‘கேங்க்ஸ்டரின் முடிவு’ ‘மீண்டும் தொடரும்’ பாணியில் அமைவது அந்நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் மட்டும் அவர் போலீசில் சரணடைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி அப்போது எழுந்தது.

இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளைக் கொண்டதாகும்.
கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேமு–அம்னோ கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் நஜீப் துன் ரசாக் மீது சமீபகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, அரசு நிதிக்காக அந்நாட்டின் தலைமை வங்கி ஒதுக்கீடு செய்த நூறு கோடி அமெரிக்க டாலர்கள் பிரதமர் ரஜாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் மடைமாற்றி திருப்பி விடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை நஜீப் ரஜாக் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுதொடர்பான எந்த விசாரணைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் மலேசிய மக்களில் சிலரது மனங்களில் நஜீப் ரஜாக் மீது ஒருவித அதிருப்தி உருவாகி வருவதை ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இதனால், சரிவில் இருந்து தனது செல்வாக்கை பாதுகாத்துகொள்ள அவர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாகதான் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் - நஜீப் ரஜாக் இடையே இன்று நிகழ்ந்த சந்திப்பை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.

குறிப்பாக, மலேசிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான சுமார் 3 கோடி பேர்களில் இங்கு வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை தனக்கு சாதகமான வாக்கு சதவீதமாக மாற்றிகொள்ளும் நோக்கத்தில் தமிழர்களின் அபிமான திரை நட்சத்திரமான ரஜினிகாந்தை பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்தித்ததாக மலேசிய தமிழர்களில் சிலர் கருதுகின்றனர்.
ஒருகாலத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது இங்குள்ள மக்களிடம் எடுபட்ட ரஜினியின் குரல் மலேசிய தேர்தலில் எடுபடுமா?, சரிவில் இருந்து நஜீப் ரசாக்கை காப்பாற்றுமா? மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமைய்யா நடிப்பில் திகில் பின்னணியில் உருவாகி உள்ள `டோரா' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள். செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்.

அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அவளது கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஆர்டர்கள் வருகிறது. அப்படி ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்கள் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.
கொடைக்கானலுக்கு செல்லும்போது, அங்கு வழியில் செல்லும் ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.

இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு சிக்கலில் மாட்டிக் கொண்ட நயன்தாரா அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்? அது கொலை செய்ய துடிக்கும் நபர்கள் யார்? நயன்தாராவை வைத்து ஏன் அந்த நபர்களை பழி வாங்குகிறது? என்பது படத்தின் மீதிக்கதை.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவுக்கு இப்படம் நல்ல தீனியாக அமைந்துள்ளது. முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தம்பி ராமையா உடனான காட்சிகளில் கலகலப்பான மகளாக வரும் நயன்தாரா, திகில் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

தம்பி ராமையா தனக்கே உரித்தான ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது சிறப்பு. அவரது ஒவ்வொரு வசனங்களும், செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. தந்தை-மகள் பாசத்திலும் கலக்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் பிரமாதம். பிளாஸ்பேக்கில் வரும் சிறுமியின் நடிப்பும் சிறப்பு. இவர்களை தவிர படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருப்பினும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குநர் தாஸ் ராமசாமி தனது முதல் படத்திலேயே காமெடி கலந்த திகில் படத்தை கொடுத்திருப்பதற்காக அவரை பாராட்டலாம். முதல் பாதி காமெடியாக மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், திகில் கொடுத்து நம்மை பயமுறுத்திருக்கிறார். அந்த அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். காரை வைத்துக் கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. கார் தானாகவே இயங்குவது உள்ளிட்ட ஒருசில காட்சிகள் மட்டும் படத்தை ஒரு பேண்டஸி படமாக காண்பித்துள்ளது.

படத்தின் பாடல்களும் நன்றாக உள்ளது. குறிப்பாக பிளாஸ்பேக்கில் வரும் பாடல் பார்க்கவும், கேட்கவும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையை பொறுத்தவரை விவேக் மெர்வின் மிரட்டியிருக்கிறார். காருக்கென்று தனியாக இவர் கொடுத்துள்ள தீம் மியூசிக் சபாஷ். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திரையில் பிரமாண்டம் காட்டுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் காட்சிகளை அவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘டோரா’ அனைவருக்கும் பிடித்தமானவள்.

கார்த்திகேயன், ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள வரும் ஷாரியா அண்ணனின் நண்பர்களான கார்த்திக்கேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரின் நட்பு ஷாரியாவுக்கு கிடைக்கிறது. அன்றுமுதல், இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள்.
கார்த்திகேயன், ஷாரியாவுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்கிறார். கார்த்திகேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் மூன்று பேரும் தங்களது கைசெலவுக்காக அவ்வப்போது சிறுசிறு வழிப்பறி கொள்ளைகள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் செய்யும் வேலை ஒருநாள் ஷாரியாவுக்கு தெரிய வருகிறது.

உடனே, நண்பர்கள் தாங்கள் வழிப்பறி கொள்ளை செய்வதற்கான காரணத்தை ஷாரியாவுக்கு விளக்கிச்சொல்ல அதையும் அவர் நம்புகிறார். இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆசைப்படும் ஷாரியாவுக்கு போதிய பணம் இல்லாததால், இவர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில், இவர்களுக்கு பேங்கில் இருந்து ஒருவர் ரூ.5 லட்சம் எடுக்கப் போவதாக தெரிய வருகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் அதை திருடுவதற்கான திட்டம் போடுகின்றனர். அதன்படி, அந்த பணத்தை அவரிடமிருந்து திருடிக் கொண்டு செல்லும்போது, கடைசியில் ஷாரியாவின் கைக்கு அந்த பணம் முழுவதும் கிடைக்கிறது.
இந்நிலையில், போலீஸ்காரர் ஒருவர் ஷாரியாவை பின்தொடர, பதட்டத்தில் கையில் இருக்கும் பணப்பையை ஒரு காலி மைதானத்தில் போட்டுவிட்டு செல்கிறார். பின்னர், திரும்பி வந்து பார்க்கும்போது, அந்த பணப்பை காணாமல் போகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் ஷாரியா மீது சந்தேகப்படுகிறார்கள்.
அவர்களில் கார்த்திகேயன், ஷாரியாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் ரூ.5 லட்சம் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார்.

ஷாரியாவும் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டுக்கு வருகிறார். திருடு போன பணத்தை திருப்பி கொடுக்க ஷாரியா என்ன செய்தார்? நண்பர்களால் இவருக்கு என்ன நேர்ந்தது? கடைசியில் திருடு போன பணம் இவர்களுக்கு கிடைத்தா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கதாநாயகன் கார்த்திகேயனுக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும், அவரது நடிப்பிலேயே வில்லத்தனம் கலந்து நடித்திருப்பது சிறப்பு. வில்லத்தனமான கதாபாத்திரத்தை இவர் ரொம்பவும் அழகாக ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க Life is Good என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறார். அவர், சொல்லுகிற இடம், சொல்லுகிற ஸ்டைல் எல்லாமே நன்றாகவே இருக்கிறது.
நண்பர்களாக வரும் ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரில், இவன்ஸ்ரீ சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். ஷாரியா, வெகுளியான இளைஞன் எப்படி நடந்துகொள்வானோ அதற்கேற்ற நடிப்பை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தனது நடிப்பில் எதார்த்தம் மாறாமல் அழகாக நடித்திருக்கிறார். ஜெகதீஷும் தனது கதாபாத்திரத்திற்கேற்ற சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளன. ஒரு கிரைம் கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். கிரைம் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு கொடுத்து அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
நவீன் மற்றும் பியோன் சரோவின் இசையில் கதையோடு ஒட்டிய ஒரேயொரு பாடல்தான். மற்றபடி, பின்னணி இசையில் கிரைம் கதைக்கு தேவையான விறுவிறுப்பை அழகாக கொடுத்திருக்கிறது. பகத்சிங் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த படம் பழைய படத்தை பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ நல்லா இருக்கு.

நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினியும், கமலும் சற்று தாமதமாக கலந்துகொண்டனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, அவர்களும் அடிக்கல்லை நாட்டினர். ரஜினி, கமல் இவ்விழாவில் தாமதமாக கலந்துகொள்வார்கள் என்று கூறினர். இந்நிலையில், சரியாக 11.30 மணியளவில் இந்த விழாவில் கமல் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

மலேசியா பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு 12.00 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வருகை தந்த ரஜினியும், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்து கமல் பேசும்போது, நடிகர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த கட்டிடம் கலைஞர்களின் கோட்டையாக மாறும் என்றும் கூறினார்.
பின்னர் ரஜினி பேசும்போது, அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, இனி அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் என்று பேசினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஜீவா, பிரகாஷ் ராஜ், விஜயகுமார், செந்தில், நடிகைகள் சிம்ரன், கோவை சரளா, சோனா, சாக்ஷி அகர்வால், நந்திதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 2-ந் தேதி சென்னையில் ரஜினி ரசிகர் மன்றம் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இது எதற்காக என்பதற்கான காரணத்தை ரஜினி தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரஜினியின் ‘கபாலி’ படம் மலேசியாவில் நடைபெற்ற போது, அங்கு தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க மலேசியாவின் பிரமரான நஜீப் ரஸாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினியின் தீவிர ரசிகர்களாம். இந்நிலையில், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தரும் மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் ரஜினியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

அதன்படி, இன்று சென்னை வந்த மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது, இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர், ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசிய அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. அதனடிப்படையில், என்னுடைய அழைப்பை ஏற்று என்னை சந்திக்க வந்த மலேசியா பிரதமருக்கு நன்றி. மலாக்கா நகரின் சுற்றுலா தூதராக என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்திதான்.

ரசிகர்கள் மன்ற கூட்டம் கூடுவது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடி என்று கூறுவதெல்லாம் பொய்யானது. ரசிகர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். அதற்காகத்தான் ஏப்ரல் 2-ந் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவிருக்கிறது. ‘2.ஓ’ படத்தில் என்னுடைய பகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். வரும் தீபாவளிக்கு படம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

குவாலியர் மகாராணி விஜய ராஜே சிந்தியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா எழுதிய நூலை தழுவி தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்தின் டிரெயிலரை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.
மும்பை:
மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது.
15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பலமுறை பாராளுமன்ற எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
12-10-1919 அன்று பிறந்த விஜய ராஜே சிந்தியா கடந்த 25-01-2001 அன்று டெல்லியில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாக ‘ராஜபாதையில் இருந்து மக்கள் மன்றம் நோக்கி’ ("Rajpath Se Lok PathPar") என்ற தலைப்பில் மிருதுளா சின்ஹா என்பவர் நூலாக எழுதியிருந்தார்.

இந்த நூலை தழுவி "Ek Thi Rani Aisi Bhi", இப்படியும் ஒரு ராணி இருந்தார் என்ற திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா என்பவர் உருவாக்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பிரத்யேகமாக திரையிடப்பட்ட இந்தப் படத்தை வர்த்தக ரீதியாக திரையிட படக்குழுவினர் சமீபத்தில் தீர்மானித்தனர்.
கதாநாயகனாக வினோத் கண்ணாவும், மகாராணி பாத்திரத்தில் கதாநாயகியாக ஹேமா மாலினியும் நடித்துள்ள இந்தப் படத்தின் வர்த்தகரீதியான டிரெய்லர் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

தற்போது கோவா கவர்னராக பொறுப்பு வகிக்கும் மிருதுளா சென்னின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டு இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக இவ்விழாவில் பேசிய நடிகர் அமித்தாப் பச்சன் கூறினார்.

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடதுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. 4 மாடிகளாக உருவாகும் இந்த கட்டிடம் ரூ.26 கோடி செலவில் உருவாகவிருக்கிறது. 1000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவை இங்கு அமையவுள்ளன.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது, 2018 செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும். இந்த கட்டிடத்திற்காக நானும் கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி அளித்துள்ளோம். ரஜினி, கமல் ஆகியோர் இன்று பிற்பகல் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்தால் நலிந்த கலைஞர்கள் பலனடைவார்கள். எங்களை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று பேசி முடித்தார்.

ரத்தன் லிங்கா இயக்கத்தில் ரிஷி ரித்விக், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அட்டு' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள குப்பமேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதேநேரத்தில், அந்த பகுதியின் கவுன்சிலர் இவர்களுக்கு ஒருசில வேலைகளை கொடுக்கிறார். அதேபோல் பிரச்சனைகளில் சிக்கும் இவர்களை காப்பாற்றவும் செய்கிறார்.
நாயகியான அர்ச்சனா ரவியை அவளது பள்ளிப்பருவத்தில் நடந்த பிரச்சினையில் இருந்து ரிஷி காப்பாற்றியதால், அர்ச்சனாவுக்கு அவர்மீது காதல் வருகிறது. முதலில் அவளது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ரிஷி, பின்னர் தனது நண்பர்களின் வற்புறுத்தலால் சம்மதம் தெரிவிக்கிறான்.
இந்நிலையில், போதைபொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒன்று, போலீசிடம் இருந்து தப்பிக்க குப்பைமேட்டில் போதைபொருட்களை வீசிச் செல்கிறது. இந்த போதைபொருட்கள் நாயகனான ரிஷியிடம் சிக்குகிறது. அவனிடம் போதை பொருள் சிக்கிக் கொண்ட அறிவும் அந்த கும்பல், அதை மீட்க ரிஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி தோல்வியடைந்ததால், ரிஷிக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலருக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இதிலிருந்து தப்பிக்கும் அட்டுவும் அவர்களது நண்பர்களும், கவுன்சிலர் செய்த துரோகத்திற்காக அவரை கொன்றுவிடுகிறார்கள்.

இதனால், போலீஸ் இவர்களை கைது செய்ய தேடிவருகிறது. இந்த கொலை பழியில் இருந்து தப்பிக்க வடசென்னையின் முக்கிய தாதாவிடம் ரிஷி மற்றும் அவரது நண்பர்கள் அடைக்கலமாகிறார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த தாதாவின் மகளை நண்பர்களில் ஒருவர் காதலித்து இழுத்து செல்கிறார். இதனால் கடும் கோபத்திற்குள்ளான தாதா அவர்களை என்ன செய்தார்? நண்பர்கள் 4 பேரும் என்ன ஆனார்கள்? ரிஷி, அர்ச்சனாவுடன் சேர்ந்தாரா? அர்ச்சனாவுக்கு என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
படத்தில் அட்டு என்ற கதாபாத்திரத்தில் வரும் ரிஷி ரித்விக் வடசென்னையை சேர்ந்த ஒரு இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும், நடையும், பாவனைகளும் அதற்கு சிறந்த உதாரணம். குறிப்பாக குப்பைமேட்டில் இருப்பது போல வரும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் அந்த இடத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்.

நாயகியாக வரும் அர்ச்சனாவுக்கு இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும், தான் வரும் காட்சிகளில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அட்டுவுடனான காதல் காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.
யோகிபாபு மற்றும் அவரது நண்பர்கள் அனைவருமே வடசென்னை வாலிபர்களாக கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக யோகிபாபு ஒரு ரவுடியாகவும், காமெடியனாகவும் சிரிக்க வைக்கிறார். அதுதவிர கவுன்சிலர் கதாபாத்திரம் மற்றும் தாதா கதாபாத்திரத்தின் மூலம் வடசென்னை தாதாக்களையும், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.
வடசென்னையை மையமாக வைத்து படம் இயக்கிய இயக்குநர் ரத்தன் லிங்காவின் முயற்சியை முதலில் பாராட்டலாம். வடசென்னையில் நடக்கும் சம்பவங்களை அப்படியே திரையில் காட்டிய அவரது திரைக்கதை ரசிக்கும்படி உள்ளது. அதேபோல் நாயகர்கள் தேர்வும் அதற்கேற்றாற்போல் சிறப்பாக செய்திருக்கிறார்.

படம் முழுக்க வடசென்னையிலேயே எடுக்கப்பட்டிருப்பதால், மத்திய சென்னையை பார்த்த மற்ற ஊர் மக்கள், சென்னையின் மற்றொரு தோற்றத்தை இந்த படத்தின் மூலம் காண முடிகிறது. அதேபோல் படத்தின் வசனங்களும், சண்டைக்காட்சிகளும் பார்க்கும்படி இருக்கிறது. வடசென்னையில் நடக்கும் சண்டை, பஞ்சாயத்து, குற்றங்கள், குரோதம், விரோதம், வெறுப்பு உள்ளிட்டவற்றை இயக்குநர் தெளிவாக விவரித்திருக்கிறார்.
போபோ சசியின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்ட, பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது. வடசென்னையை தனது கேமரா மூலம் சிறப்பாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம்.
மொத்தத்தில் ‘அட்டு’ வடசென்னையின் பொட்டு.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர்.
கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன.

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 31-ந் தேதி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முதல் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.
வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி, திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.
நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.
அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.
வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.
ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.
அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலிïர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.
வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.
முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.
திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.
ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.
அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
(ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)
1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.
அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.
அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-
"குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.
இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.
பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!
பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.
பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''
இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.
"பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.
அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.
கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.