என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `விஐபி-2' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லாப் பட்டதாரி' படத்தின் இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.



    இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கஜோல் நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜுலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று பார்த்து வாழ்த்தி உள்ளார். இந்த தகவலை நடிகர் தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 



    இதுகுறித்து சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, சூப்பர் ஸ்டாரும், எனது அப்பாவுமான ரஜினிகாந்த் `விஐபி 2' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பங்கேற்று வாழ்த்தினார். இதை விட சிறந்ததை இனி என் வாழ்வில் பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷ் கூறும் போது, கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்தது. கடைசி நாளில் தலைவரின் ஆசியும் கிடைத்தது சிறப்பு. நன்றி சவுந்தர்யா ரஜினிகாந்த், தாணு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
    தான் நடிகையாக இருந்தாலும் பார்ட்டிகளுக்கு போவது இல்லை. புகை, மது பழக்கம் கிடையாது என்று நடிகை நீது சந்திரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருபவர் நீது சந்திரா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே.ஹீரோவாக நடித்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

    அந்த அனுபவம் குறித்து கூறிய அவர்...



    “நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ‘விஷ்ணு’ என்ற தெலுங்கு படத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் என்னை அறிமுகம் செய்தார். பல ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்தது சந்தோ‌ஷம். ‘எல்லாம் அவன் செயல்’ என்ற வெற்றி படத்துக்கு பின் ஷாஜி இயக்கும் படம் இது.

    கொஞ்சம் முரட்டு குணமுள்ள அக்கா. அப்பாவியான தங்கை என இரண்டு வேடத்தில் நடித்ததை மறக்க முடியாது. இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்த எனக்கே சவாலாக இருந்தது. ரெயில் சம்பந்தப்பட்ட படம் என்பதால், ரெயிலை கவுரவிக்கும் வகையில் படக்குழு ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது. அடிப்படையில் நான் பீகாரி. போஜ்புரி மொழியில் ‘தேஸ்வா’ என்ற படம் தயாரித்தேன். என் தம்பி நிதின் இயக்கினார். அந்த படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன. நான் தயாரித்த இன்னொரு படத்துக்கு ‘தேசிய விருது' கிடைத்தது.



    பெண்களை பொறுத்தவரை, தங்கள் உடல் நலத்தை பேண வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நான் நடிகையாக இருந்தாலும் பார்ட்டிகளுக்கு போவது இல்லை. புகை, மது பழக்கம் கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்தாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்” என்றார்.
    பிரபுதேவா படப்பிடிப்பில் உயிரிழந்த துணை நடிகர் குடும்பத்துக்கு பிரகாஷ்ராஜ் ரூ.1 லட்சம் உதவி
    நடிகர் பிரபுதேவா, லட்சுமி மேனன், பிரகாஷ்ராஜ் நடிக்கும் படம் ‘யங் மங் சங்’. இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு தேவையான உணவை நேற்று ஒரு வேனில் கொண்டு சென்றனர்.



    பாபநாசம் அருகே உள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் சென்றபோது, கும்பகோணத்துக்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் துணை நடிகர் ஆறுமுகம், வேன் டிரைவர் விஜி ஆகியோர் உயிர் இழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இதில் உயிர்இழந்த ஆறுமுகம் ‘பெப்சி’ தொழிலாளி. சாலி கிராமத்தில் அவரது குடும்பத்துக்கு பிரகாஷ்ராஜ் ரூ.1 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
    ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் எனக்கு அரசியல் தெரியாது என்றும், தொண்டனாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறினார். அந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா தெய்வசிகாமணி வரவேற்றார்.

    விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 25 பேருக்கு நிதிஉதவி மற்றும் தலா 2 கறவை மாடுகள் வழங்கினார்.



    எனது தாயை எனது கண்எதிரில் பார்க்கும் தெய்வமாக பார்க்கிறேன். அடுத்து எனது ரசிகர்களையும், விவசாயிகளையும் எனது தெய்வங்களாக நினைக்கிறேன்.

    வறட்சி காரணமாக இறந்த விவசாயிகளின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கொடுத்தேன்.

    இந்த பணம் ரசிகர்கள் கொடுத்த பணம். எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் உதவுவது என்று முடிவு செய்தேன். இதற்கான முதல் கட்ட உதவி தான் இது.

    எனக்கு அரசியல் தெரியாது. தெரியாத வி‌ஷயத்துக்குள் போகமாட்டேன். ஆனால் எனக்கு தர்மம் செய்ய தெரியும். விவசாயிகள் தங்களது மனைவியின் தாலியை பாங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி விட்டு அதை திருப்ப முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களில் முதல் கட்டமாக 2 பேருக்கு வங்கியில் இருந்த தாலிக்கொடியை மீட்டு கொடுத்து இருக்கிறேன்.



    நான் எப்போதும் தலைவனாக வேண்டும் என்று நினைத்தது இல்லை. தலைவனாக இருந்தால் தலைக்கனம் வந்து விடும். இதனால் எப்போதும் தொண்டனாக இருந்து நீண்ட நாள் மக்களுக்கு தொண்டு செய்யவே விரும்புகிறேன்.

    எனது `மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் வருமானத்தில் ரூ. 1 கோடியை இளைஞர்களுக்காக ஆனந்த விகடன் அறகட்டளை மூலம் வழங்கினேன்.

    அடுத்து வரும் `சிவலிங்கா' படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்காக நானே நேரடியாக வழங்குவேன்.

    என்னை சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் சினிமாவுக்கு அழைத்து வந்தனர். தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சினிமா டைரக்டர் கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
    `பாகுபலி-2' ரிலீஸ் தேதிக்கு முன்பாக வருகிற ஏப்ரல் 7-ல் `பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை படக்குழு மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி-2' வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 

    அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். 


     
    எனவே, `பாகுபலி-2' வெளியாவதற்கு முன்பாக `பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாகுபலியின் முதல் பாகத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி மீண்டும் வெளியிட உள்ளதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்வதன் மூலம் படத்தின் இரு பாகங்களின் தொடர்ச்சியையும் மக்கள் கண்டுகளிக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தை திரையரங்குகளில் காண நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 



    பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்தது. எனவே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி உள்ள `பாகுபலி-2' மாபெரும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகி உள்ளது. மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
    பாபா பாஸ்கர் இயக்க உள்ள குப்பத்து ராஜா படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகராக தற்போது வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள்  இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

    அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `புரூஸ் லீ' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர்  `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே' `செம' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதே நேரத்தில் தேசிய விருது இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிவுடன் இணைந்து `நாச்சியார்' என்ற மாறுபட்ட கதைகளத்திலும் நடித்து வருகிறார்.



    மேலும் ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்', சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன்  இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினி நடிப்பில் 1979-ல் வெளியான `குப்பத்து ராஜா' என்ற படத்தின் தலைப்பை, இப்படத்திற்காக படக்குழு கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். `முத்தின கத்திரிக்கா' படத்தை தொடர்ந்து பூனம் பாஜ்வா இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக ‘அண்ணாத்துரை’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 



    சீனு வாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது பேனரில் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். `காளி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தானே தயாரிக்க உள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. `அண்ணாதுரை' படத்திற்கு பின்னர் `காளி' படம் வெளியாகும் என்றும் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான `எமன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. கடந்த 1980-ல் மகேந்திரன் இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் ரஜினி, நடித்திருந்தார். இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    `2.0' படத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் கதாபாத்திரங்கள் குறித்து வெளியான தகவல்களுக்கு இயக்குநர் ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் பல ஸ்வாரஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம், இப்படம் குறித்த புதுமையான தகவல் ஒன்று இணையதளங்களில் பகிரப்பட்டு வந்தது. 



    அதாவது, இப்படத்தில் ரஜினி 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் அக்ஷய்குமார் 12 விதவிதமான லுக்கில் வருவதாகவும் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. ஏற்கனெவே, பறவை போன்ற ஒரு உருவத்தில் அவருடைய தோற்றத்தை போஸ்டராக வெளியிட்டிருந்தனர். அதோடு சேர்ந்து மொத்தம் 12 லுக்கில் இந்த படத்தில் அக்ஷய்குமார் வருவதாக கூறப்பட்டிருந்தது. 

    அதுமட்டுமில்லாமல், ஏமி ஜாக்சனுக்கும் இரண்டு கெட்டப்புகள் இருப்பதாகவும் கூற, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "நோ" என்ற ஒரே வார்த்தையை பகிர்ந்து அனைத்து வித தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    எனினும் இப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய நாம் பொறுத்திருக்க தான் வேண்டும். இப்படம் தீபாவளி ரீலீசாக வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. 
    லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கிராமத்து கதையாக உருவாகியுள்ள ‘விருத்தாசலம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’.

    இதில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராய நத்தம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். சிறந்த நிர்வாகத்துக்காக ஜனாதிபதி விருது பெற்றவர். கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, நெல்லை சிவா, டைரக்டர் நாராயணமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள்.



    ஒளிப்பதிவு -சிவ நேசன், உமாசங்கர், இசை-ஸ்ரீராம், பாடல்கள்- இளையகம்பன், எடிட்டிங் -வி.டி.விஜயன் சுனில், கலை- நா.கருப் பையன்,நடனம்-சதீஷ் , ஸ்டண்ட்-பயர் கார்த்திக்,தயாரிப்பு பி.செந்தில்முருகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தன்கணபதி. படம் பற்றி இயக்குனர் கூறும் போது....

    “சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக, 14 வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். இளமையை இழந்து வெளியே வரும் அவன் பெற்ற தாயையும், காதலியையும் இழக்க நேரிடுகிறது.

    ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்க வில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை” என்றார்.

    கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7-ந் தேதி வெளியாகிறது.
    ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சுரேஷ் ரவி-இஷாரா நாயர் நடிப்பில் உருவாகியுள்ள `அதி மேதாவிகள்' படம் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு சமர்பணம் செய்யப்படுவதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது அதி மேதாவிகள். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் இப்படத்தை 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நிகழச்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி, 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது(கோலி சோடா) மற்றும் `மாரி' படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.



    இப்படம் குறித்து படத்தின் நாயகன் சுரேஷ் ரவி கூறியதாவது,

    "நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம் என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.

    "பெற்றோர்களின் வற்புறுத்தலால்  இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் 'அதி மேதாவிகள்' படத்தின் கதை. விரைவில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் கூறுகிறார்.
    பிரபுதேவா நடித்து வரும் `யங்மங்சங்' படப்பிடிப்பின் போது, படப்பிடிப்பு வேன் மீது லாரி மோதல் பிரபுதேவா படத்தில் நடித்த துணை நடிகர், டிரைவர் பலியாகினர்.
    சிவசக்தி புரோடக்‌ஷன் கம்பெனி தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா, லட்சுமிமேனன் நடிக்கும் `யங்மங்சங்' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்கும் துணை நடிகர்கள் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர்.

    இதற்காக 10 வேன்களில் 100-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் வேனில் சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றனர்.



    இதில் ஒரு வேன் இன்று காலை 6 மணியளவில் கும்பகோணம் - திருவையாறு சாலையில் பாபநாசம் அருகே உள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பெரம்பலூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் வேன் நொறுங்கியது. அதில் இருந்த சென்னையை சேர்ந்த துணை நடிகர் ஆறுமுகம், வேன் டிரைவர் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த விஜி ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.

    துணை நடிகர்கள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    லாரியை ஓட்டி வந்த பெரம்பலூரை சேர்ந்த சுரேஷ். தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனாகைப், மீண்டும் சல்மான்கானிடம் காதலில் விழுந்ததாக ஒரு செய்தி வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    இங்கிலாந்தில் இருந்து இந்தி பட உலகில் காலடி வைத்து முன்னணி நடிகை ஆனவர் கத்ரீனா கைப். ஆரம்பத்தில் இவர் இந்தி நடிகர் சல்மான்கானின் காதலி ஆனார்.

    ‘மார்க்கெட்,’ சூடு பிடித்ததால் சல்மான்கானிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். பின்னர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது கத்ரீனாகைப், ரன்பீர் கபூரையும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.



    இந்த நிலையில், சல்மான்கானும் கத்ரீனாகைப்பும் நடித்து வெற்றிபெற்ற ‘ஏக் தா டைகர்’ படத்தின் இரண்டாம்பாகம் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இதிலும் சல்மான்கானும் கத்ரீனா கைப்பும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த நிலையில், படப்பிடிப்பின்போது சல்மான்கானிடம் கத்ரீனா கைப் மிகவும் பாசமாக பழகி வருகிறார். சல்மான் கானும் அதிக பாசம் காட்டுகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இருவரும் பழகும் விதத்தை பாக்கும் போது கத்ரீனா கைப் மீண்டும் சல்மான்கானிடம் காதலில் விழுந்து விட்டார் என்பது உறுதியாகி விட்டது.

    சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் கத்ரீனாவுக்கு அடிபட்டு முதுகு வலியால் அவதிபட்டார். இதை பார்த்த சல்மான் கான் மிகவும் வேதனைப்பட்டு சோகத்தில் மூழ்கிவிட்டார். எனவே, அவரும் தனது காதலை புதுப்பித்துவிட்டார் என்று இந்தி பட உலகில் பேசிக் கொள்கிறார்கள்.

    ×