என் மலர்
தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை:

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

அதேபோல், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மொத்தமாக 1059 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதனையடுத்து மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே விஷால் அணியினர் முன்னிலை பெற்று வந்தனர்.
இறுதியில் 143 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவர் பதவிக்கு விஷால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு மொத்தம் 476 வாக்குகள் கிடைத்தது. அதேபோல், ராதாகிருஷ்ணனுக்கு 333 வாக்குகளும், கேயார் 223 வாக்குகளும் பெற்றனர்.
விஷால் அணி சார்பாக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர் பிரபு, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர். ஆனால், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மிஷ்கின் தோல்வியடைந்தார். எதிரணியில் இருந்த ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார்.
இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்க உள்ளார். இதனால் விஷால் அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.
கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.
"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.
1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.
அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.
தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.
அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.
வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.
இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.
அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.
எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.
உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.
பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.
"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.
(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')
"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.
ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.
அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-
"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.
அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.
அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.
பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.
"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.
ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:
"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''
அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.
அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.
நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.
ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.
வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.
பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.
உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.
அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.
முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.
"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.
மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
அதேபோல், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மொத்தமாக 1059 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதனையடுத்து மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே விஷால் அணி முன்னிலை பெற்று வந்தார்.
இறுதியில் 143 வாக்குகள் வித்தியாசத்தில் விஷா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு மொத்தம் 476 வாக்குகள் கிடைத்தது. அதேபோல், ராதாகிருஷ்ணனுக்கு 333 வாக்குகளும், கேயார் 223 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்க உள்ளார். இதனால் விஷால் அணியினர் உற்சாக
கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நடிகர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலிலும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி விஷால் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆண்கள் மட்டுமே நடித்து வரும் படமான ‘ஆடவர்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஆடவர்’.
இதில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ராபர்ட், கார்த்திக், சரவணன், சிரஞ்சீவி ஆகிய நான்கு புதுமுகங்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். இவர்களுடன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், ரமேஷ், மாஸ்டர் கிரண் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கேரள அரசின் விருது பெற்ற தஷி இசைஅமைத்துள்ளார். படத்தொகுப்பு-சீனிவாசன், நடனம்-ரமேஷ் கமல், தாயாரிப்பு- சொ. சிவகுமார் பிள்ளை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஸ்ரீரஞ்சன்.

“ சுனாமி குறித்து ஆய்வு செய்வதற்காக 4 இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதில் இருந்து மீண்டு தங்களின் ஆய்வில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதும் தான் கதை. மாஸ்டர் கிரண் என்ற 10 வயது சிறுவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான். இது திருப்பு முனைகதாபாத்திரம். அவன் சிறப்பாக நடித்து படக்குழுவினரிடம் பாராட்டு பெற்றான்” என்றார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.எம்-ன் சிவாஜி திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, கல்லூரியின் முதல்வர் ஏ.சுப்பையா பாரதி மற்றும் துறை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் படத்தின் பாடல்களை பாடினார்கள். ‘ஆடவர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறில்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல் நடைபெறும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்க பதவிக்கு விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் ஆகியோர் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

`அஞ்சாதே' படத்தை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே' படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள `பவர்பாண்டி' வருகிற ஏப்ரல் 14-ல் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக அவர் நடித்து வரும் மற்ற படங்களின் கதைகளையும் தேர்வு செய்தே நடித்து வருகிறார். அவர் தற்போது `நிபுணன்', `துப்பறிவாளன்', `திருட்டு பயலே 2' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரசன்னா மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தெலுங்கில் சாய் தரம் தேஜா - மெஹ்ரின் பிர்சீடா இணைந்து நடிக்க உள்ள `ஜவான்' என்ற படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளாராம். பி.வி.எஸ்.ரவி இயக்கும் இப்படத்தில் பிரசன்னா ஒரு ஸ்டைலீஷ் வில்லனாக நடிக்க உள்ளாதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மெரினாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் நேற்று காலையில் திரண்ட மாணவர்கள் கைதானார்கள். மாணவர்கள் ரெயில் மறியல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவர்களுடன் இன்று காலையில் போராட்டம் நடத்தப்போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்திருந்தார். இதன்படி வள்ளுவர் கோட்டம் அருகில் கூடி போராட்டம் நடத்திய கவுதமன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

9 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். இதற்காக பல்வேறு மாவட்ட ரஜினி ரசிகர்கள் சென்னையில் திரண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அப்போது எந்த வகையில் புகைப்படம் என்பது பற்றி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று கூட்டம் நடந்தது.
ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் சத்தியநாராயணா, சுதாகரன் தலைமை தாங்கினர். இதில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ரஜினிமன்ற தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் சென்னை வந்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர். இதில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் ரசிகர்மன்ற நற்பணிகள் பற்றி ஆலோசனை நடந்தது. ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் மாலை ரஜினியிடம் தெரிவிக்கப்படும்.
ரஜினி 6 நாட்கள் தினமும் 1,500 ரசிகர்களை சந்திக்கிறார். 10 ஆயிரம் ரசிகர்களை அவர் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது ரஜினி அரசிய லுக்கு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
மேலும் அப்பகுதியில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கடைசியாக ரஜினி 2008-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து இருந்தார். 9 ஆண்டுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்கிறார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என்று திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று திருவண்ணாமலையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
‘கண்ணெதிரே காணும் தெய்வம் அம்மா. அம்மாவிற்கு அடுத்து எனது தெய்வம் ரசிகர்களாகிய நீங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் நானும் இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கான வெற்றி மாணவர்களின் வெற்றி. ஜல்லிக்கட்டுக்கு அடுத்து லாரன்ஸ் காணாமல் போய் விட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் தற்போது விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் தமிழக விவசாய சங்க தலைவர் உதவி கேட்டார். அது யாருக்காக என்றால் கடன் வாங்கி பயிரிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு. அப்போது நானும் என்னால் முடிந்த உதவியை செய்தேன்.

டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்கள் தண்ணீருக்காக போராடுகிறார்கள். தண்ணீர் நமக்கு தேவைப்படாதா... எனவே அவர்கள் நமக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டில் அரசியல் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதில் தான் அரசியல் உள்ளது. அதை நான் ஜல்லிக்கட்டுக்கான போராட்ட களத்தில் கண்டேன்.
‘விவசாயத்தை காப்போம் சொல்லாதே செய்’ என்ற புதிய திட்டம் விரைவில் கொண்டு வரப்போகிறேன். இந்த திட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆதரவு தர வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

ரசிகன் தான் எனது முதலாளி. நமது விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்த அரசு செய்யுதோ இல்லையோ என்னால் முடிந்த உதவியை நான் செய்வேன். நீங்களும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் என்னை பலர் மக்கள் ‘சூப்பர்ஸ்டார்’ என்று கூறுகிறார்கள். எப்போதும் ஒரே ‘சூப்பர் ஸ்டார்’ என் தலைவர் (ரஜினிகாந்த்). அரசுக்கு எனது கோரிக்கை எதுவென்றால் போராடும் விவசாயிகளின் பல கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கையான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் விரைவில் மெரினாவில் புரட்சி வெடிக்கும். இளைஞர்கள் அதிலும் வெற்றி காண்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று திருவண்ணாமலையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
‘கண்ணெதிரே காணும் தெய்வம் அம்மா. அம்மாவிற்கு அடுத்து எனது தெய்வம் ரசிகர்களாகிய நீங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் நானும் இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கான வெற்றி மாணவர்களின் வெற்றி. ஜல்லிக்கட்டுக்கு அடுத்து லாரன்ஸ் காணாமல் போய் விட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் தற்போது விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் தமிழக விவசாய சங்க தலைவர் உதவி கேட்டார். அது யாருக்காக என்றால் கடன் வாங்கி பயிரிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு. அப்போது நானும் என்னால் முடிந்த உதவியை செய்தேன்.

டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்கள் தண்ணீருக்காக போராடுகிறார்கள். தண்ணீர் நமக்கு தேவைப்படாதா... எனவே அவர்கள் நமக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டில் அரசியல் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதில் தான் அரசியல் உள்ளது. அதை நான் ஜல்லிக்கட்டுக்கான போராட்ட களத்தில் கண்டேன்.
‘விவசாயத்தை காப்போம் சொல்லாதே செய்’ என்ற புதிய திட்டம் விரைவில் கொண்டு வரப்போகிறேன். இந்த திட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆதரவு தர வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

ரசிகன் தான் எனது முதலாளி. நமது விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்த அரசு செய்யுதோ இல்லையோ என்னால் முடிந்த உதவியை நான் செய்வேன். நீங்களும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் என்னை பலர் மக்கள் ‘சூப்பர்ஸ்டார்’ என்று கூறுகிறார்கள். எப்போதும் ஒரே ‘சூப்பர் ஸ்டார்’ என் தலைவர் (ரஜினிகாந்த்). அரசுக்கு எனது கோரிக்கை எதுவென்றால் போராடும் விவசாயிகளின் பல கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கையான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் விரைவில் மெரினாவில் புரட்சி வெடிக்கும். இளைஞர்கள் அதிலும் வெற்றி காண்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறில்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல் நடைபெறும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்க பதவிக்கு விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் ஆகியோர் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை அண்ணாநகரில் தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதில் தவறு ஒன்றுமில்லை என்ற கூறிய ராதாரவி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறினார். எனவே யார் வெற்றி பெற்றாலும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்றார். முன்னதாக நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக ராதாரவி அணி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

நான் ‘கபாலி’ படத்தின் ரசிகன் என்று கூறிய மலேசிய பிரதமர் நஜீப்ரசாக், ‘கபாலி’ படத்தின் 2-ம் பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதை காண காத்திருக்கிறேன் என்று கூறினார்.
நான் ‘கபாலி’ படத்தின் ரசிகன் என்று மலேசிய பிரதமர் நஜீப்ரசாக் கூறினார்.
ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படம் மலேசியாவில் படமாக்கப்பட்டது. ‘கபாலி’ படம் அந்நாட்டில் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ‘கபாலி’ படப்பிடிப்புக்கு மலேசிய அரசாங்கம் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜீப்ரசாக் போயஸ்கார்டன் சென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். ஒரு சாதாரண ரசிகரைப்போல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். தனது அழைப்பின் பேரில் அவர் வந்ததாகவும், ‘கபாலி’ படத்துக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்தேன் என்றும் பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறினார்.

அதன் பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலாயா மொழியானது ஏராளமான வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்து பெற்றுள்ளது. இந்திய உணவு வகைகளையும் நாங்கள் ருசிக்கிறோம்.
நான் தமிழ்ப்படங்களின் ரசிகன். குறிப்பாக ‘கபாலி’ படம் என்னை கவர்ந்தது. அதன் ரசிகன் நான். நான் ‘கபாலி’ படத்தின் 2-ம் பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதை காண காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்தது ஜாலியாக இருந்தததாக ஐங்கரன் படத்தின் நாயகி மகிமா நம்பியார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் மகிமா நம்பியார். கேரள வரவான இவர் ‘குற்றம் 23’-ல் நடித்தார். இப்போது ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முதல் முறையாக ஜி.வி.பிரகாசுடன் ஜோடி சேர்ந்து நடித்தது பற்றி கூறிய மகிமா நம்பியார்...
“இந்த படத்தில் முதல் நாளே ஜி.வி.பிரகாசுடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து லேசான பயம் இருந்தது. நான் படப்பிடிப்புக்கு வந்ததும் ஜி.வி.பிரகாஷ் வந்து எனக்கு கை கொடுத்து வரவேற்றார். வாங்க எப்படி நடிப்பது என்று ஒத்திகை பார்க்கலாம் என்றார். நீண்ட நாட்கள் பழகியவர் போல ஜி.வி.பிரகாஷ் என்னிடம் பேசினார்.

அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் பயம் பறந்துவிட்டது. தைரியமாக நடித்தேன். ஒரு வாரம் அவருடன் சேர்ந்து நடித்தது ஜாலியாக இருந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. மீண்டும் ஜி.வி.பிரகாசுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.