என் மலர்tooltip icon

    ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு மக்கள் நீதிமய்யம்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்

    ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார். அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×