search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    1.2 லிட்டர் ஹைப்ரிட் என்ஜினுடன் அறிமுகமான ரெனால்ட் ரஃபேல் எஸ்யுவி
    X

    1.2 லிட்டர் ஹைப்ரிட் என்ஜினுடன் அறிமுகமான ரெனால்ட் ரஃபேல் எஸ்யுவி

    • சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும்.
    • ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ரெனால்ட் ரஃபேல் எஸ்யுவி மாடல் 54-வது பாரிஸ் ஏர் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஆகும். 1930 முதல் விமான உற்பத்தி பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ரஃபேல் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

    1934-ம் ஆண்டு முதல் ரஃபேல் விமானம் கௌட்ரான் ரெனால்ட் உற்பத்தி செய்தது. இந்த மாடல் C460 பெயர் கொண்டிருக்கிறது. ஆஸ்ட்ரல் மற்றும் இ-ஸ்பேஸ் போன்ற ரெனால்ட் வாகனங்களின் பிளாட்ஃபார்மில் ரஃபேல் உருவாக்கப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடல் ஃபாஸ்ட்பேக் வடிவம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் கிளட்ச் இல்லா ஹைப்ரிட் பவர்டிரெயின் உள்ளது.

    சர்வதேச சந்தையில் இது ரெனால்ட் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், 2024 வாக்கில் இந்த மாடல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு, ரெனால்ட் லோகோ கொண்டிருக்கிறகது.

    இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், பொனெட்டில் இரண்டு கேரக்டர் லைன்கள், பொனெட் கிளாம்ஷெல் யூனிட் போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பரில் கூர்மையான கிரீஸ்கள், பூமராங் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ரெனால்ட் லோகோ மற்றும் அழகிய ரஃபேல் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.

    முற்றிலும் புதிய ரெனால்ட் ரஃபேல் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒருங்கிணைந்து 194 ஹெச்பி பவர், பெட்ரோல் என்ஜின் மட்டும் 127 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×