search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    386 கிமீ ரேன்ஜ் வழங்கும் Next-gen மினி கூப்பர் EV
    X

    386 கிமீ ரேன்ஜ் வழங்கும் Next-gen மினி கூப்பர் EV

    • மினி நிறுவனத்தின் கூப்பர் EV மாடல் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
    • முற்றிலும் புதிய மினி எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மினி நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் EV மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற பிஎம்டபிள்யூ திட்டமிட்டு வரும் நிலையில், புதிய மினி கூப்பர் மாடல் புரட்சியை ஏற்படுத்த அடித்தளமாக இருக்கும் என தெரிகிறது.

    அடுத்த தலைமுறை மினி கூப்பர் EV மாடல் 2024 மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை மாத வாக்கில் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    "புதிய தோற்றம், பெயருடன் மீண்டும் அதன் வேர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய கார் கூப்பர் ஹேச்பேக் பெயருக்கு மாற்றாக கூப்பர் என்றே அழைக்கப்படும்" என மினி பிராண்டு தலைவர் ஸ்டெஃபைன் உஸ்ட் தெரிவித்து இருக்கிறார்.

    தற்போதைய மினி ஹேச்பேக் மாடலில் இருப்பதை விட அகலமான டிராக், சிறிய முன்புற ஒவர்ஹேங், பெரிய வீல்கள் மற்றும் நீண்ட வீல்பேஸ் உள்ளிட்டவை சிறப்பானதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கூப்பர் மாடல் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் ஐந்து கதவுகள் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

    புதிய மினி கூப்பர் EV மாடல் 40 கிலோவாட் ஹவர் அல்லது 54 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை அதிகபட்சம் 386 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த கார் 2-வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

    Source: Autocar

    Next Story
    ×