search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 ஆட்டோ எக்ஸ்போவுக்கு தயாராகும் லெக்சஸ் RX!
    X

    2023 ஆட்டோ எக்ஸ்போவுக்கு தயாராகும் லெக்சஸ் RX!

    • லெக்சஸ் நிறுவனத்தின் புது RX மாடல் அந்நிறுவனத்தின் GA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய லெக்சஸ் RX மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX மாடலுக்கான டீசரை மீண்டும் வெளியிட்டுள்ளது. புதிய லெக்சஸ் RX மாடல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை RX மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகமானது. புது டீசரில் இந்த காரின் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய லெக்சஸ் RX மாடலின் எடை 90 கிலோ வரை குறைந்து இருக்கிறது. காரின் முன்புறம் லெக்சஸ் பாரம்பரியம் மிக்க ஸ்பிண்டில் கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் டெயில் லைட்களும் மேம்படுத்தப்பட்டு முற்றிலும் பிளாக் எலிமெண்ட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2023 லெக்சஸ் RX மாடலின் உள்புறம் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ADAS, டிஜிட்டல் ரியர்வியூ மிரர், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் ஏராளமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், இந்திய சந்தையில் புது லெக்சஸ் RX மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×