search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    308ஹெச்பி பவர், 450கிமீ ரேஞ்ச் வழங்கும் மினி கண்ட்ரிமேன் E
    X

    308ஹெச்பி பவர், 450கிமீ ரேஞ்ச் வழங்கும் மினி கண்ட்ரிமேன் E

    • மினி கண்ட்ரிமேன் E மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 140 கிலோவாட் திறன் கொண்டுள்ளன.
    • இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    மினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கண்ட்ரிமேன் மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு கண்ட்ரிமேன் E மாடல் - பேஸ் 2 வீல் டிரைவ் வேரியண்ட் மற்றும் டூயல் மோட்டார் SE ALL4 வேரியண்ட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கண்ட்ரிமேன் E மாடல் 188 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. SE ALL4 வேரியண்ட் அதிகபட்சம் 308 ஹெச்பி வரையிலான பவர் வெளிப்படுத்துகிறது.

    இரு வேரியண்ட்களில் SE ALL4 மாடல் நிறுவனத்தின் முதல் ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். கண்ட்ரிமேன் E மாடலில் 64.7 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. புதிய கண்ட்ரிமேன் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 130mm வரை நீளமாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரின் உயரமும் 60mm வரை அதகரித்துள்ளது.

    புதிய மினி கண்ட்ரிமேன் மாடலின் உள்புறம், வெளிப்புறம் மற்றும் வீல்கள் என பெரும்பாலான பாகங்கள் 70 சதவீதம் வரை மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரின் டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல், ஹெட்லைனர் உள்ளிட்டவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

    மினி பிராண்டின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ குழுமம், காற்று மாசை குறைக்க ஹைட்ரஜனுக்கு மாற்றாக படிம எரிபொருட்கள் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இதற்காக பிஎம்டபிள்யூ குழுமம் சார்பில் 800 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்படுகின்றன.

    Next Story
    ×