search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    MG WIndsor EV
    X

    331 கிமீ ரேஞ்ச் வழங்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம்.
    • எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வின்ட்சர் EV மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 9.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி வின்ட்சர் EV மூன்று வேரியண்ட்கள், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் கொமெட் மற்றும் ZS EV மாடல்கள் வரிசையில், அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய வின்ட்சர் மாடலின் வெளிப்புறம் எம்ஜி சிக்னேச்சர் ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் 18 இன்ச் அளவில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ஃபுளோட்டிங் ரூஃப்லைன், பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது.




    உள்புறம் பிளாக் மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டீரியர், 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கொமெட் மாடலில் உள்ள ஓஎஸ் புதிய வின்ட்சர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், பின்புற இருக்கைகளில் ஏசி வென்ட்கள், மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.

    புதிய வின்ட்சர் மாடலில் வயர்லெஸ் போன் மிரரிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 360 டிகிரி கேமரா, கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பின்புறம் ரிக்லைனிங் இருக்கை, பானரோமிக் சன்ரூஃப், வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 331 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 134 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    Next Story
    ×