search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    300கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி கொமெட் EV இந்திய வெளியீட்டு விவரம்
    X

    300கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி கொமெட் EV இந்திய வெளியீட்டு விவரம்

    • எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கொமெட் EV எலெக்ட்ரிக் கார் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
    • புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் ZS EV மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கொமெட் EV மாடலை ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய கொமெட் EV மாடல் வுலிங் ஏர் EV மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி கொமெட் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    கடந்த மாதம் எம்ஜி நிறுவனம் இந்தியாவுக்கான கொமெட் EV மாடல் விவரங்களை அறிவித்தது. அதன்படி புதிய கொமெட் EV மாடல் வைட், புளூ, கிரீன், எல்லோ மற்றும் பின்க் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்க இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் 17.3 கிலோவாட் ஹவர் மற்றும் 26.7 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முழு சார்ஜ் செய்தால் முறையே 200 கிலோமீட்டர்கள் மற்றும் 300 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. வெளிப்புற டிசைனை பொருத்தவரை கொமெட் எலெக்ட்ரிக் காரில் செங்குத்தான எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், டூயல் டோன் முன்புற பம்ப்பர், சார்ஜிங் போர்டின் மேல் எல்இடி லைட் பார் உள்ளது.

    இத்துடன் க்ரோம் இன்சர்ட்கள், ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், பின்புற பம்ப்பரில் நம்பர் பிளேட், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி கொமெட் EV மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    Next Story
    ×