என் மலர்
இது புதுசு

2023 ஆட்டோ எக்ஸ்போவில் எலெக்ட்ரிக் கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தும் மாருதி சுசுகி?
- ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் வகையில் ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் மாருதி சுசுகி நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் வாகன திட்டத்தின் முதல் முயற்சியாக இருக்கும்.
தற்போது இந்த ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் YY8 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அளவில் இது மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் கான்செப்ட் வடிவம் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2025 வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் வாகனம், இந்திய சந்தையில் நெக்சான் EV மேக்ஸ் மற்றும் மஹிந்திரா XUV400 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் காரை மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. கிராணட் விட்டாரா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்றே, இதே கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகமாகும்.
புதிய YY8 மாடல் 27PL எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கார் மாருதி சுசுகி உருவாக்கும் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களுக்கு அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். YY8 மாடல் சர்வதேச சந்தைக்கானதாக இருக்கும் என்ற போதிலும், இதன் உற்பத்தி குஜராத்தில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் நடைபெறும் என்றே கூறப்படுகிறது.






