search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்திய ஸ்பெஷலாக இரு 7 சீட்டர் மாடல்கள் - மாருதி சுசுகியின் சூப்பர் ஸ்கெட்ச்
    X

    இந்திய ஸ்பெஷலாக இரு 7 சீட்டர் மாடல்கள் - மாருதி சுசுகியின் சூப்பர் ஸ்கெட்ச்

    • இரண்டு புதிய கார்களும் 7 சீட்டர் மாடல்கள் என தகவல்.
    • இந்த கார் YDB என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரண்டு புதிய கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு புதிய கார்களும் 7 சீட்டர் மாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதில் ஒன்று காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் என்றும் இந்த கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எர்டிகா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. இந்த காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் 2026-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கார் YDB என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.


    இந்த மாடல் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம் என்றும் ரெனால்ட் டிரைபர் மற்றும் டிரைபர் சார்ந்து உருவாக்கப்படும் நிசான் எம்.பி.வி. மாடலுக்கு போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மாருதி சுசுகி YDB மாடல் தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு வரும் சுசுகி ஸ்பேசியா மாடலை தழுவி உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    எனினும், ஸ்பேசியா போன்றில்லாமல், YDB மாடலில் 7 சீட்டர் இருக்கை அமைப்பு வழங்கப்படும் என்றும் இந்த காரில் ஸ்லைடிங் ரக கதவுகள் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் Z சீரிஸ் மைல்டு ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களிலும் வழங்கப்படும் என தெரிகிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் YDB மட்டுமின்றி 7 சீட்டர் கிரான்ட் விட்டாரா மாடலையும் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த கார் Y17 எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட இந்த எஸ்.யு.வி. மாடல் டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார் மற்றும் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இந்த காரில் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் தற்போது விற்பனை செய்யப்படும் கிரான்ட் விட்டாரா மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் வெளிப்புறம் மற்றும் உள்புற மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×