என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு

விரைவில் இந்தியா வரும் லெக்சஸ் RX - அசத்தல் டீசர் வெளியீடு!

- லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX மாடல் இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
- சர்வதேச சந்தையில் ஐந்தாம் தலைமுறை RX மாடல் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
லெக்சஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய RX எஸ்யுவி மாடலை 2023 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது காரின் டீசரை லெக்சஸ் இந்தியா தற்போது வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் 2022 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட லெக்சஸ் RX மாடல் இந்தியா வருகிறது. புதிய RX மாடல் ஆட்டோ எக்ஸ்போ வரும் முதல் லெக்சஸ் வாகனம் ஆகும்.
புதிய எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என லெக்சஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்ட லெக்சஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய RX பெற இருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய RX மாடலில் உள்ள என்ஜின் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ் வழங்கும் என லெக்சஸ் அறிவித்து இருக்கிறது.
லெக்சஸ் RX மாடலின் புதிய அளவீடுகள் கூப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லிய டிசைன் மற்றும் காரை சுற்றி பிஸ்போக் ஸ்டைலிங் வழங்கப்படுகிறது. உள்புறம் 14 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிளஅ கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
புதிய லெக்சஸ் RX மாடல் 350h, 450h+ மற்றும் 500h என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் 450h+ மாடல் மட்டும் ஸ்டிராங் ஹைப்ரிட் வசதி கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் 350h மாடல் 2.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 245 ஹெச்பி பவர், 324 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.