search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கியாவின் 3-வது எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகமான புதிய கியா EV5!
    X

    கியாவின் 3-வது எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகமான புதிய கியா EV5!

    • கியா EV5 மாடல் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல்.
    • புதிய EV5 மாடல் கியா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    கியா நிறுவனம் கடந்த ஆண்டு தனது EV5 எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் வெர்ஷனை காட்சிக்கு வைத்தது. தற்போது இந்த மாடல் சீனாவில் நடைபெற்ற செங்டு மோட்டார் விழாவில் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கியா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய EV5 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக கியா நிறுவனம் EV6 மற்றும் EV9 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டைலிங்கை பொருத்தவரை கியா EV5 தோற்றத்தில் EV9 போன்றே காட்சியளிக்கிறது. இதில் அப்ரைட் பொனெட், டைகர்-நோஸ் முன்புற தோற்றம், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், ஃபிளஷ் டோர் ஹேன்டில்கள், பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஆங்குலர் அலாய் வீல்கள், சற்றே பிரமாண்ட லேயர் பாடி கிளாடிங், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் மற்றும் செட்-பேக் டி-பில்லர் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறத்தில் ராப்-அரவுண்ட் டிஜிட்டல் பேனல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 64 நிற ஆப்ஷன்களில் ஆம்பியண்ட் லைட்டிங், பென்ச் ரக சீட்கள், மடிக்கக்கூடிய ரியர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய EV5 மாடலுக்கான தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், கியா EV6 மாடலில் இருப்பதை போன்ற அம்சங்கள் இந்த மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் RWD மற்றும் AWD என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இவற்றில் முறையே 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.

    இதில் RWD வேரியண்ட் 224 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன், AWD வேரியண்ட் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×