search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்த கவாசகி
    X

    ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்த கவாசகி

    • கிளட்ச் கியர் ஷிஃப்டருக்கு மாற்றாக ஷிஃப்ட் பேடில்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பைக்கை முழுமையாக நிறுத்தினால், என்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடும்.

    நின்ஜா e-1 மற்றும் Z e-1 மாடல்களுடன் கவாசகி நிறுவனம் நின்ஜா 7 ஹைப்ரிட் மாடல் விவரங்களையும் தெரிவித்து இருக்கிறது. அதன்படி நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து 60 ஹெச்.பி. வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் மட்டும் 48 ஹெச்.பி. மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் 12 ஹெச்.பி. வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் வழக்கமான கிளட்ச் கியர் ஷிஃப்டருக்கு மாற்றாக ஷிஃப்ட் பேடில்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலை ஓட்டும் போது, பைக் எந்த கியரில் இருந்தாலும், பயனர்கள் ஒற்றை பட்டனை க்ளிக் செய்து தானாக முதலாவது கியருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதில் உள்ள ஆட்டோமேடிக் லான்ச் பொசிஷன் ஃபைண்டர் இதற்கான வசதியை வழங்குகிறது. பைக்கை முழுமையாக நிறுத்தினால், என்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடும். பிறகு, திராடில் க்ரிப்-ஐ மீண்டும் முறுக்கினால், என்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும்.

    கவாசகியின் நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில்: ஸ்போர்ட், ஹைப்ரிட், இகோ ஹைப்ரிட் மற்றும் EV போன்ற டிரைவிங் மோட்கள் உள்ளன. நின்ஜா மற்றும் Z e-1 மாடலில் உள்ளதை போன்றே இதிலும் ப்ளூடூத் வசதி கொண்ட TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் நோட்டிஃபிகேஷன் மற்றும் நேவிகேஷன் அம்சங்களை இயக்கலாம்.

    நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலின் திறன் 650 முதல் 700 சிசி மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் இதன் மைலேஜ் வழக்கமான 250 சிசி பைக்கிற்கு இணையாக இருக்கும் என்றும் கவாசகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஐரோப்பாவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    Next Story
    ×