search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    550கிமீ ரேன்ஜ் வழங்கும் ஜீப் அவெஞ்சர்
    X

    550கிமீ ரேன்ஜ் வழங்கும் ஜீப் அவெஞ்சர்

    • ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    ஜீப் நிறுவனம் கடந்த மாத துவக்கத்தில் புதிய அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இதன் பவர்டிரெயின் மற்றும் ரேன்ஜ் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் புதிய ஜீப் அவெஞ்சர் மாடல் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் STLA சிறிய பிளாட்பார்ம் பயன்படுத்திய முதல் கார் என்ற பெருமையை அவெஞ்சர் பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய அவெஞ்சர் மாடலில் 54 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும். எனினும், பயணிக்கும் நிலைகளுக்கு ஏற்ப இந்த கார் அதிகபட்சம் 550 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    புதிய ஜீப் அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 100 கிலோவாட் கேபிள் கொண்டு 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 24 நிநிடங்களே ஆகும். இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 154 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த கார் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இத்துடன் ஜீப் நிறுவனத்தின் செலக்-டிரெயின் ஆப்-ரோடு மோட்கள் (நார்மல், இகோ, ஸ்போர்ட், ஸ்னோ, மட் மற்றும் ஸ்னோ) உள்ளிட்டவை அவெஞ்சர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன் பின் எதிர்காலத்தில் இந்திய சந்தையிலும இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×