என் மலர்
இது புதுசு

காப்புரிமை படங்களில் வெளியான ஹோண்டா XL750 டிரான்சால்ப்
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750 சீரிஸ் மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புதிய XL750 டிரான்சால்ப் மாடல் இத்தாலியில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹோண்டா நிறுவனம் தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக், ஹோண்டா XL750 டிரான்சால்ப் மாடலை இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா வரலாற்றில் டிரான்சால்ப் பெயர் மீண்டும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முன்னதாக டிரான்சால்ப் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய ஹோண்டா XL750 டிரான்சால்ப் பேரிங், சைடு பேனல்கள், விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஹெட்லைட் டிசைன் விவரங்கள் காப்புரிமை படங்களில் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB750 ஹார்னெட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே புதிய டிரான்சால்ப் மாடலிலும் வழங்கப்படுகிறது. இது 270 டிகிரி பேரலெல் ட்வின் என்ஜின் ஆகும்.
இந்த என்ஜின் 90.6 ஹெச்பி பவர், 75 நியீட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா மாடலில் ரிகிட் ஸ்டீல் டைமண்ட் பிரேம் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இது CB750 ஹார்னெட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இந்த மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல், பெரிய முன்புற வீல், நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிக சவுகரியமான ஸ்டீரிங் ஆங்கில் வழங்கப்படுகிறது.






