search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் புது டீசர் வெளியானது
    X

    சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் புது டீசர் வெளியானது

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமகாகிறது.
    • முன்னதாக இந்த எலெக்ட்ரிக் கார் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    சிட்ரோயன் நிறுவனம் தனது பிரபலமான C3 காம்பேக்ட் ஹேச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சிட்ரோயன் eC3 மாடலின் புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த கார் டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. சமீபத்திய டீசர்களில் எலெக்ட்ரிக் ஹேச்பேக் முன்புறம் எப்படி காட்சியளிக்கும் என தெளிவாக தெரியவந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் அதன் IC- என்ஜின் கொண்ட மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் முன்புற ஃபெண்டரில் டெயில்பைப் நீக்கப்பட்டு, சார்ஜிங் போர்ட் வழங்கப்படுவது மட்டுமே புது மாற்றமாக இருக்கும் என தெரிகிறது. இதன் முன்புறம் டபுள் செவ்ரான் கிரில், ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. ஆக்டகோனல் வடிவ ஏர் இண்டேக், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட லைட்டிங் யூனிட் மற்றும் ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    இந்த காரில் 10.2 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீல் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய eC3 மாடலில் லித்தியம் அயன் ஃபாஸ்ஃபேட் செல்களை பயன்படுத்த சிட்ரோயன் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    புதிய சிட்ரோயன் eC3 மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த செட்டப் 84 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.3 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 350 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    Next Story
    ×