search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அட்டோ 3 ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்த பிஒய்டி
    X

    அட்டோ 3 ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்த பிஒய்டி

    • பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் பிரத்யேகமாக ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது.
    • அட்டோ 3 ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 1200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    பிஒய்டி நிறுவனம் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய அட்டோ 3 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிரத்யேகமாக ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. பிஒய்டி அட்டோ 3 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மொத்தத்தில் 1200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    புதிய பிஒய்டி அட்டோ 3 மாடல் இ பிளாட்ஃபார்ம் 3.0 சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பெர்மணன்ட் மேக்னட் சின்க்ரோனஸ் மோட்டார் 60.48 கிலோவாட் ஹவர் பிலேடு பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த செட்டப் 201 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

    ARAI பரிசோதனைகளில் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வரும் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு இந்த காரை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். வழக்கமான AC சார்ஜர் பயன்படுத்தும் போது இந்த காரை சார்ஜ் செய்ய் 9.5 முதல் 10 மணி நேரம் வரை ஆகும்.

    அளவீடுகளை பொருத்தவரை பிஒய்டி அட்டோ 3 மாடல் 4455mm நீளம், 1875mm அகலம், 1615mm உயரம் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2720mm ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 175mm அளவில் உள்ளது. இந்த காரின் முன்புறம் க்ரிஸ்டல் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்போர்ட் வீல் ஹப்கள், பின்புறம் ஒற்றை பீஸ் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×