search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஆகஸ்டில் இந்தியா வரும் பிஎம்டபிள்யூ i7 M70
    X

    ஆகஸ்டில் இந்தியா வரும் பிஎம்டபிள்யூ i7 M70

    • இந்த மாடலிலும் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும்.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் செடான் i7 மாடலின் M வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த காரின் வெளியீடு நடைபெற இருக்கிறது. பிஎம்டபிள்யூ i7 M70 எக்ஸ்டிரைவ் என்று அழைக்கப்படும் புதிய கார், ஜெர்மன் கார் உற்பத்தியாளரின் முதல் எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும்.

    வழக்கமான பிஎம்டபிள்யூ i7 மாடலுடன் ஒப்பிடும் போது, இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வித்தியாசமாக வழங்கப்படுகிறது. இதில் முன்புறம் மற்றும் பின்புறம் M பம்ப்பர் பாடி கிட், கிளாசி பிளாக் கிட்னி கிரில், M பேட்ஜ் வழங்கப்படுகிறது. M டிசைன் மிரர்கள், சைடு ஸ்கர்ட்கள், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், கிளாஸ் பிளாக் வின்டோ லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் பக்கவாட்டு ஃபென்டரில் M பேட்ஜ், 21 இன்ச் அளவில் புதிய அலாய் வீல்கள், புளூ நிற பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பிளாக்டு அவுட் ரியர் ஸ்பாயிலர், டூ டோன் பெயின்ட் ஆப்ஷன்கள் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் லிக்விட் காப்பர் நிற வேரியண்ட் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 13 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    இந்த மாடலிலும் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 650 ஹெச்பி பவர், 1015 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    Next Story
    ×