search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 6 கோடி பட்ஜெட்டில் அறிமுகமான பெண்ட்லி கார்
    X

    ரூ. 6 கோடி பட்ஜெட்டில் அறிமுகமான பெண்ட்லி கார்

    • பெண்ட்லி நிறுவனத்தின் புதிய பெண்ட்யகா EWB மாடல் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது பெண்ட்லி EWB காரின் உற்பத்தி பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.

    பெண்ட்லி நிறுவனம் தனது பெண்ட்யகா EWB வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB விலை ரூ. 6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் உற்பத்தி அக்டோபர் மாதம் துவங்கியது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB (எக்ஸ்டென்டட் வீல் பேஸ்) வெர்ஷன் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட 180mm வரை அதிகரித்து இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2995mm-இல் இருந்து 3175mm-ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது காரின் ஒட்டுமொத்த நீளம் 5322mm ஆகும். இதன் காரணமாக இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைத்திருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் "ஏர்லைன் சீட்ஸ்" வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆட்டோ கிளைமேட் சென்சிங் சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள பிஸ்னஸ் சீட் அம்சம் அதன் தனித்துவம் மிக்க நிலைக்கு மாறிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ரிலாக்ஸ் மோட் கொண்டு இருக்கையை 40-டிகிரி அளவுக்கு ரிக்லைன் செய்து கொள்ள முடியும்.

    பெண்ட்யகா EWB மாடலில் பவர் க்ளோசிங் கதவுகள், ஹீடெட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் டோர், ஆல் வீல் ஸ்டீரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மூன்று வித இருக்கை அமைப்புகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கிடைக்கிறது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×