search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் புதிய 7 சீட்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் சிட்ரோயன்?
    X

    இந்தியாவில் புதிய 7 சீட்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் சிட்ரோயன்?

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது கார்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோயன் நிறுவனத்தின் eC3 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 காம்பேக்ட் ஹேச்பேக் மாடலை தழுவி பல்வேறு புது கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு தான் சிட்ரோயன் C3 கார் இந்திய சந்தையில், அந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. C3 கார் மாட்யுலர் CMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும்.

    இதே பிளாட்ஃபார்மில் உலகம் முழுக்க ஏராளமான கார் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், E-CMP பிளாட்ஃபார்மில் C3 மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் சிட்ரோயன் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த காருக்கான டீசர், பெயர் விவரங்கள் உள்ளிட்டவைகளை சிட்ரோயன் அறிவித்து விட்டது. இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    சற்றே அளவில் பெரிய C3 மாடலின் ஸ்பை படங்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட எஸ்யுவி மாடல் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த கார் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி 7 சீட்டர் C3 எஸ்யுவி மாடல் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கார் CC24 எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படுவதாக தெரிகிறது. இதன் டிசைன் C5 ஏர்கிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் கிளஸ்டர் டிசைன், புதிய செவ்ரான் லோகோ நீக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.4 மீட்டர்களாக இருக்கும் என்றும் வீல்பேஸ் 2.62 மீட்டர்களாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய 7 சீட்டர் C3 மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்த கார் பிரேசில் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    Next Story
    ×