search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!
    X

    ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!

    • 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் விலை ரூ. 10 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
    • புதிய 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல்களுக்கான முன்பதிவு மார்ச் மாதம் துவங்கியது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில்வெயிட் நேக்கட், 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 R மற்றும் டாப் எண்ட் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    புதிய ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல் 2023 பிப்ரவரி மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டு, புதிய தலைமுறை மாடலாக மாற்றப்பட்டது. 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் விலை ரூ. 10 லட்சத்து 17 ஆயிரம் என்று துவங்குகிறது. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல் விலை ரூ. 11 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    மார்ச் மாதத்திலேயே புதிய 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. புதிய ஸ்டிரீட் டிரிபில் R மாடல்- ரோடு, ரெயின், ஸ்போர்ட் மற்றும் ரைடர்-கான்ஃபிகரபில் என மொத்தம் நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்- முந்தைய மாடலில் உள்ள நான்கு ரைடிங் மோட்களுடன் டிராக் மோட் சேர்த்து ஐந்து ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    2023 மாடல்களில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் புதிதாகவும், கூர்மையாகவும் உள்ளன. இத்துடன் பின்புற இருக்கை புதிய நிறம் கொண்டிருக்கிறது. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் சில்வர் ஐஸ்-ஸ்டாம் கிரே, எல்லோ கிராஃபிக்ஸ் மற்றும் க்ரிஸ்டல் வைட்-ஸ்டாம் கிரே, லித்தியம் ஃபிலேம் கிராஃபிக்ஸ் என இரன்டு நிறங்களில் கிடைக்கிறது.

    டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்- சில்வர் ஐஸ்-பஜா ஆரஞ்சு - ஸ்டாம் கிரே கிராஃபிக்ஸ், கார்னிவல் ரெட்-கார்பன் பிளாக் - அலுமினியம் சில்வர் கிராஃபிக்ஸ் மற்றும் காஸ்மிக் எல்லோ - கார்பன் பிளாக் - அலுமினியம் சில்வர் கிராஃபிக்ஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய மாடல்களில் உள்ள என்ஜின், இதுவரை வெளியான ஸ்டிரீட் டிரிபில் மாடல்களில் இல்லாத அதிக திறன் கொண்டுள்ளன. RS மாடலில் உள்ள என்ஜின் 128 ஹெச்பி பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. R மாடலில் உள்ள என்ஜின் 118 ஹெச்பி பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×