என் மலர்tooltip icon

    இது புதுசு

    புதிய ஸ்போர்ட் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த ஹோண்டா
    X

    புதிய ஸ்போர்ட் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த ஹோண்டா

    • ஹோண்டா நிறுவனம் 2023 ஹோண்டா NT1100 ஸ்போர்ட் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • 2023 ஹோண்டா NT1100 மாடல் புது நிறங்கள் மற்றும் இருவத டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹோண்டா 2023 NT1100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஆப்ரிக்கா ட்வின் சார்ந்து உருவாக்கப்பட்ட ஹோண்டா NT1100 ஸ்போர்ட் டூரர் மாடல் புதிய நிற ஆப்ஷன்கள் மற்றும் மேனுவல், டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் போன்றே புதிய 2023 NT1100 லிக்விட் கூல்டு, 8 வால்வுகள், 1084சிசி பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100.57 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த டிசிடி யூனிட் மோட்டார்சைக்கிளை நான்கு வித மோட்களில் கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. இத்துடன் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனல் முறையில் குயிக்‌ஷிப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்- அர்பன், ரெயின், டூர், யூசர் 1 மற்றும் யூசர் 2 என ஐந்து வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், 3 ஸ்டெப் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஹோண்டா NT1100 மாடலில் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இரண்டாவதாக பெரிய எல்சிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெரிய டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×