search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 ஹார்லி பான் அமெரிக்கா 1250 இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 ஹார்லி பான் அமெரிக்கா 1250 இந்தியாவில் அறிமுகம்

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 பான் அமெரிக்கா 1250 மெக்கானிக்கல் மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய மாடலில் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பைக் மாடல்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்த ஹார்லி சமீபத்தில் 2023 பான் அமெரிக்கா அட்வென்ச்சர் டூரர் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

    இந்த வரிசையில், பான் அமெரிக்கா மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்டை நீக்கிவிட்டு இதற்கு மாற்றாக ஸ்பெஷல் வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் வேரியண்ட் பான் அமெரிக்கா 1250 மாடல் அலாய் வீல் அல்லது ஸ்போக் வீல்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் ஸ்போக் வீல் வேரியண்டில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை அலாய் வீல் வேரியண்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும்.

    இவைதவிர 2023 பான் அமெரிக்கா 1250 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய சந்தையில் புதிய 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பான் அமெரிக்கா 1250 மாடலிலும் 1252சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 150.9 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், எலெகர்ட்ரிக் லின்க் செய்யப்பட்ட பிரேகிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் பிரேகிங் கண்ட்ரோல், ஐந்துவிதமான ரைடிங் மோட்கள், மூன்று கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் 2023 ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மாடல் பிஎம்டபிள்யூ R 1250 GS, ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×