search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் அறிமுகமான ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 - விலை இத்தனை லட்சங்களா?
    X

    இந்தியாவில் அறிமுகமான ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 - விலை இத்தனை லட்சங்களா?

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2023 ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஃபேட்பாய் 114 விலை ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மாடல்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் ஃபேட்பாப் 114 மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஃபேட்பாய் 114 மாடலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 விவிட் பிளாக் ரூ. 24 லட்சத்து 49 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 பிரைட் பில்லியர்ட் புளூ ரூ. 24 லட்சத்து 68 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 கிரே ஹேஸ் மற்றும் சில்வர் ஃபார்சூன் ரூ. 25 லட்சத்து 19 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 ஹெர்லூம் ரெட் ஃபேட் ரூ. 25 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய மாடலில் சிங்கிள்-பாட் ஹெட்லைட், ரியர் ஸ்வெப்ட் ஹேண்டில்பார், ஃபியூவல் டேன்க் மீது மவுண்ட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், க்ரோம் சரவுண்ட்கள், ஸ்டெப்-அப் சீட், டுவின் பாட் எக்சாஸ்ட் கேனிஸ்டர் உள்ளது. இதுதவிர மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய ஏராளமான அக்சஸரீக்களை ஹார்லி டேவிட்சன் வழங்குகிறது.

    2023 ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் 114 மாடலில் 1868சிசி, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 5.5 லிட்டர்கள் / 100 கிலோமீட்டர் (லிட்டருக்கு 18.18 கிலோமீட்டர்) மைலேஜ் வழங்கும் என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 92.5 ஹெச்பி பவர், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    சஸ்பென்ஷனுக்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளில் 49mm டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், அலுமினியம் ட்ரிபில் கிளாம்ப்கள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறத்தில் ஒற்றை டிஸ்க், நான்கு பிஸ்டன் கொண்ட கேலிப்பர், பின்புறம் ஒற்றை ரோட்டார், இரண்டு பிஸ்டன்கள் கொண்ட ஃபுளோடிங் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர புதிய ஹார்லி ஃபேட்பாய் 114 மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த மாடலில் உள்ள கன்சோல் அனலாக் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீனில் கியர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல், கடிகாரம், ட்ரிப், ரேன்ஜ் மற்றும் டக்கோமீட்டர் இண்டிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.

    Next Story
    ×