என் மலர்

  ஆட்டோமொபைல்

  யமஹா எம்.டி. 15 இந்தியாவில் அறிமுகம்
  X

  யமஹா எம்.டி. 15 இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #YamahaMT15  இந்தியாவில் யமஹா எம்.டி. 15 அறிமுகம். இதன் துவக்க விலை ரூ.1.36 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இது இருந்தது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

  யமஹா எம்.டி.15 வடிவமைப்பு வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் டூயல் எல்.இ.டி. செட்டப் மற்றும் இரண்டு எல்.இ.டி. யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் யமஹா எம்.டி. 15 சர்வதேச சந்தையில் கிடைக்கும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

  முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஃபியூயல் டென்க் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. இத்துடன் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருக்கிறது. யமஹா ஆர்15 வெர்ஷன் 3 மாடலில் அலுமினியம் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருக்கிறது.  யமஹா எம்.டி. 15 மாடலில் பிரெஸ்டு ஸ்டீல் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருப்பதால், பைக்கின் விலையை குறைக்கிறது. யமஹா எம்.டி. 15 மாடலில் லிக்விட்-கூல்டு, 155சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வேரியபிள் வால் டைமிங்குடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதே என்ஜின் யமஹா ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

  இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் இ.சி.யு. மேப்பிங் மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்15 மாடலில் 48டி ஸ்பிராகெட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எம்.டி. 15 மாடலில் 52டி பின்புற ஸ்பிராகெட் வழங்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×