search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்
    X

    2019 கவாசகி வெர்சிஸ் 1000 இந்தியாவில் அறிமுகம்

    கவாசகி இந்தியா நிறுவனம் தனது வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Kawasaki #Versys1000



    கவாசகி இந்தியா நிறுவனம் தனது வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை அறிவித்துள்ளது. அதன்படி 2019 கவாசகி வெர்சிஸ் 1000 விலை ரூ.10.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த லிட்டர்-கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளாக வெர்சிஸ் 1000 இருக்கிறது.

    இந்தியாவில் 2019 கவாசகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ.1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்தோருக்கு மார்ச் மாதம் முதல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2019 கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் முந்தைய மாடலை விட பெருமளவு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நின்ஜா மாடல்களை போன்று புதிய மாடலின் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 



    புதிய 2019 வெர்சிஸ் 1000 மாடலில் புதுவித எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வின்ட்ஸ்கிரீன் மற்றும் செமி டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் மற்ற அம்சங்களை பொருத்த வரை ரைடு-பை-வையர், எலெக்ட்ரிக் க்ரூஸ் கன்ட்ரோல், 5-ஆக்சிஸ் போஷ் IMU, ஏ.பி.எஸ்., கவாசகியின் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இரண்டு பவர் மோட்கள் வழங்கப்படுகிறது.

    புதிய லிட்டர்-கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1,043 சிசி இன்-லைன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்ரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    2019 வெர்சிஸ் 1000 மாடலின் முன்பக்கம் யு.எஸ்.டி. ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 250 எம்.எம். ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×