search icon
என் மலர்tooltip icon

    கார்

    விற்பனையகம் வந்தடைந்த இன்னோவா ஹைகிராஸ்!
    X

    விற்பனையகம் வந்தடைந்த இன்னோவா ஹைகிராஸ்!

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் விலை அறிவிக்கப்படாமல் முன்பதிவு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் விற்பனை மையங்களை வந்தடைந்தன.

    இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கைகளுடன் கிடைக்கிறது. இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்கும் என தெரிகிறது.

    2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது.

    Photo Courtesy: Missautologs

    Next Story
    ×