என் மலர்
கார்

4 நிறங்கள், 2 வேரியண்ட்கள்... விரைவில் விற்பனைக்கு வரும் எம்ஜி மஜெஸ்டர்
- மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மஜெஸ்டர் மாடலின் விலை விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய கார் பற்றிய விவரங்களை எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவி- கான்க்ரீட் கிரே, மெட்டல் ஆஷ், பியர்ல் வைட் மற்றும் மெட்டல் பிளாக் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஷார்ப் மற்றும் சேவி என இரு வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
2026 எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 213 ஹெச்பி பவர், 478 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆப்ஷனல் 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.
முற்றிலும் புதிய எம்ஜி மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எஸ்யூவி-க்கான முன்பதிவு கட்டணம் ரூ. 41,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய மஜெஸ்டர் மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர், ஸ்கோடா கோடியக் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.






