search icon
என் மலர்tooltip icon

    கார்

    230கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி கொமெட் கேமர் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    230கிமீ ரேன்ஜ் வழங்கும் எம்ஜி கொமெட் கேமர் எடிஷன் - இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • இந்திய சந்தையில் எம்ஜி கொமெட் மாடல் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது.
    • எம்ஜி கொமெட் மாடல் முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கொமெட் கேமர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கேமர் எடிஷன் விலை அதன் ஸ்டாடன்டர்டு எடிஷனை விட ரூ. 65 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இந்தியாவின் முன்னணி கேமர் நமன் மதுர் என்ற மார்டல் உடனான கூட்டணியில் புதிய கேமர் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஜி கொமெட் கேமர் எடிஷன் மாடலின் வீல், டோர் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் அக்சென்ட்களும், பி பில்லரில் ஸ்டிக்கர்களும் வழங்கப்படுகிறது. உள்புறம் நியான் லைட்கள், வித்தியாச டெக்ஸ்ச்சர் கொண்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் எம்ஜி கொமெட் மாடல் மே 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

    எம்ஜி கொமெட் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் பேஸ், பிளே மற்றும் புஷ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் என்ட் மாடல்களில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மென்ட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர் மிரர் மற்றும் வின்டோக்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் எம்ஜி கொமெட் மாடல் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 41 ஹெச்பி பவர், 76 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×