search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 1.31 லட்சம் வரை குறைப்பு - உடனே ஒரு எம்.ஜி. கார் பார்சல்
    X

    ரூ. 1.31 லட்சம் வரை குறைப்பு - உடனே ஒரு எம்.ஜி. கார் பார்சல்

    • அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்தது.
    • இந்த கார் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை குறைத்து இருக்கிறது. இத்துடன் கொமெட் எலெக்ட்ரிக் கார் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் புதிய குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்திருந்தது. இது அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாகவும் அமைந்தது.

    விலை குறைப்பை பொருத்தவரை எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் மாடலின் விலை தற்போது ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. ஹெக்டார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 6 ஆயிரம் மற்றும் ரூ. 79 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 14 லட்சத்து 03 ஆயிரம் என துவங்குகிறது.


    எம்.ஜி. குளோஸ்டர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது. இதன் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது.

    எம்.ஜி. கொமெட் எலெக்ட்ரிக் கார் விலை தற்போது ரூ. 99 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் கொமெட் மாடலுக்கு போட்டியாக வேறு எந்த காரும் விற்பனை செய்யப்படவில்லை.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×