search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமான புதிய லெக்சஸ் கார் - இத்தனை அம்சங்களா?
    X

    இந்தியாவில் அறிமுகமான புதிய லெக்சஸ் கார் - இத்தனை அம்சங்களா?

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX மாடல் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய லெக்சஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய RX எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய RX மாடல் RX350h மற்றும் RX350h F ஸ்போர்ட் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 95.8 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 18 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் லெக்சஸ் அறிமுகம் செய்த முந்தைய தலைமுறை RX சீரிஸ், இந்தியாவில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை பெற்றது. புதிய பிளாட்ஃபார்ம் மூலம் காரில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது தலைமுறை மாடலுக்காக லெக்சஸ் நிறுவனம் RX டிசைனை முழுமையாக மாற்றியுள்ளது.

    புதிய RX மாடலில் பிரமாண்ட முன்புற கிரில் ஹனிகொம்ப் மெஷ் ஆக ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், இதில் எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. லெக்சஸ் RX மாடலில் அளவில் பெரிய 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதில் உள்ள L வடிவ லைட் பார் லேம்ப் காரணமாக இந்த எஸ்யுவி பின்புறம் சற்றே அகலமாக காட்சியளிக்கிறது.

    லெக்சஸ் RX சீரிசில் அதிநவீன லெக்சஸ் சேஃப்டி சிஸ்டம் + 3.0 ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதுதவிர இந்தியா மற்றும் ஆசியாாவிலேயே கனெக்டெட் அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சங்களாக பெறும் லெக்சஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய லெக்சஸ் RX பெற்று இருக்கிறது.

    புதிய லெக்சஸ் RX350h மாடலில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார், சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 242 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது 4 வீல் டிரைவ் வசதி கொண்டுள்ளது.

    அதிவேக ஆப்ஷன் கொண்ட RX350h F ஸ்போர்ட் பிளஸ் மாடலில் 361 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் RX எஸ்யுவி மாடல் பிஎம்டபிள்யூ X5, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மற்றும் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட வால்வோ XC90 மற்றும் ஆடி Q7 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×