என் மலர்tooltip icon

    கார்

    புதிய பேட்டரி பேக்குடன்... கியா இ.வி. 6 பேஸ்லிப்ட்
    X

    புதிய பேட்டரி பேக்குடன்... கியா இ.வி. 6 பேஸ்லிப்ட்

    • முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    கியா நிறுவனம், 2025-ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட கியா இ.வி. 6 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்திருந்த நிலையில் அதற்கான விலை அறிவிப்பும் வந்திருக்கிறது. அதன்படி, ஷோரூம் விலையாக ரூ.65.9 லட்சம் ரூபாயில் இது கிடைக்கும்.

    * இ.வி. 6 பேஸ்லிப்ட்

    இதில் முந்தைய மாடலில் இருந்த 77.5 கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு பதிலாக 84 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 663 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் டூயல் மோட்டார்கள் அதிகபட்சமாக 320 எச்.பி. பவரையும், 605 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 350 கிலோவாட் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 18 நிமிடங்களில், 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    * மாற்றங்கள்

    ஆங்குலர் எல்.இ.டி. வடிவ டி.ஆர்.எல்.கள், பம்பர், சக்கரங்கள், டெயில் லைட்டுகள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. 12.3 அங்குல இரு டிஸ்பிளே திரைகள், 3 ஸ்போக் டூயல் டோன் ஸ்டியரிங் வீல், 12 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், லெவல் டூ அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.

    Next Story
    ×