search icon
என் மலர்tooltip icon

    கார்

    வெளியீட்டுக்கு முன் உற்பத்தியை துவங்கிய ஹோண்டா
    X

    வெளியீட்டுக்கு முன் உற்பத்தியை துவங்கிய ஹோண்டா

    • ஹோண்டா எலிவேட் கார் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஹோண்டா எலிவேட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது எலிவேட் எஸ்யுவி மாடலின் உற்பத்தியை துவங்கி விட்டது. விரைவில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஹோன்டா எலிவேட் எஸ்யுவி மாடல் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.

    புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் அழகிய டிசைன் கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் பிரீமியம் தோற்றம், ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆறு ஏர்பேக், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ADAS போன்ற அம்சங்கள் உள்ளது.

    ஹோண்டா எலிவேட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்போது இதன் பெட்ரோல் வெர்ஷன் அறிமுகமாகும் நிலையில், ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக ஹோண்டா எலிவேட் கார் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை மற்றும் வினியோகம் உள்ளிட்ட விவரங்கள் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×