search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் அறிமுகமாகும் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் - பெயர் இது தான்!
    X

    இந்தியாவில் அறிமுகமாகும் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் - பெயர் இது தான்!

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய எலெக்ட்ரிக் காரின் பெயர் மற்றும் வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் சிட்ரோன் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய டீசரில் புதிய கார் பற்றிய வேறு விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் புதிய சிட்ரோயன் காருக்கான மேலும் சில டீசர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதன் இந்திய வெளியீட்டு நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை மார்ச் 2023-க்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது.

    சிட்ரோயன் C3 ரெகுலர் மாடலை போன்றே புதிய ஆல்-எலெக்ட்ரிக் eC3 மாடலும் பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், முன்னதாக இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதி அருகில் உள்ள சார்ஜிங் மையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

    இதில் காரின் பின்புறம் மட்டுமே இடம்பெற்று இருந்தது. டெஸ்டிங் செய்யப்படும் காரில் எவ்வித மறைப்பும் செய்யப்படவில்லை. தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் சிட்ரோயன் C3 பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளித்தது. இந்த எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: teambhp

    Next Story
    ×