search icon
என் மலர்tooltip icon

    கார்

    சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் இந்திய விலை இவ்வளவு தானா? இணையத்தில் லீக் ஆன தகவல்!
    X

    சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் இந்திய விலை இவ்வளவு தானா? இணையத்தில் லீக் ஆன தகவல்!

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் புதிய சிட்ரோயன் eC3 விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் டாப் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய சிட்ரோயன் eC3 கார் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் பிரீமியம் ஹேச்பேக் C3 மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் டாடா டியாகோ EV மாடல் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிட்ரோயன் C3 பெட்ரோல் வெர்ஷன் விலை இந்தியாவில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி, அதிகபட்சம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்து. அதன்படி இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விலை ரூ. 4 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×