என் மலர்
கார்

பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகமான டாடா சியரா... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா..?
- புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 25ஆம் தேதி திட்டமிடப்பட்ட விலை அறிவிப்புக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் புத்தம் புதிய சியராவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக ICE வேரியண்ட் அறிமுகமான நிலையில், இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் விரைவில் வெளியிடப்படும்.
வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.
உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.






